நகங்களினால் நீங்கள் செய்ய கூடாத விஷயங்களும் உண்டு? அவை எவை தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள். நாம் நகங்களை அலங்காரத்திற்கும் வெங்காயம் உரிப்பதற்கும் இன்னும் சில உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனல் நகங்கள் மூலமாகவும் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அவை ரத்தத்தில் கலப்பதற்கு வாய்ப்புண்டு.

Things you should not do with your nails

நகங்களினால் நாம் செய்யும் பல செயல்கள் நமக்கு பாதிப்பை தரும். அவ்வகையில் நீங்கள் எந்தவகையான செயல்கள் செய்யக் கூடாது என தெரியுமா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுரண்டுவதற்கு :

சுரண்டுவதற்கு :

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.

இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.

ப்ளீச்சிங் பொடி :

ப்ளீச்சிங் பொடி :

சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

 உரங்கள் :

உரங்கள் :

தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

பசை :

பசை :

ஃபெவிகால் போன்ற பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

காலைக்கடன்போது :

காலைக்கடன்போது :

காலைக்கடன் முடித்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவது முக்கியம். முக்கியமாய் நகம் வளர்ப்பவர்கள். இல்லையென்றால் நகங்களின் மூலம் கிருமிகள் பெருக வாய்ப்புண்டு. மலம் கழித்தபின் கைகளுக்கு பதிலாக ஹேண்ட் ஸ்ப்ரே உபயோகிப்பது மிகவும் நல்லது.

நகப்பூச்சுக்கள் :

நகப்பூச்சுக்கள் :

ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you should not do with your nails

Things you should not do with your nails
Story first published: Thursday, April 13, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter