மருந்து மாத்திரையின்றி இருமலைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் அடிக்கடி இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். ஒருவருக்கு இருமல் அடிக்கடி வருவதற்கு சுவாசப் பாதையில் சளி அதிகமாக தேங்கியிருப்பது தான் காரணம். இந்த இருமலைப் போக்க பலரும் கண்ட மருந்துகளை வாங்கி குடிப்பார்கள். என்ன தான் மருந்தாக இருந்தாலும், அவற்றிலும் சாயங்கள், பதப்படுத்தும் உட்பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றைக் குடிப்பதாலும் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Methods To Stop Coughing Without Any Medicine

எனவே சிலர் இந்த இருமல் மருந்துகளை வாங்கிக் குடிக்கமாட்டார்கள். மாறாக இயற்கை வழியில் இருமலைப் போக்க முயற்சிப்பார்கள். இக்கட்டுரையில், மருந்து மாத்திரைகளின்றி இருமலைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் சளி வெளியேறி, அடிக்கடி வரும் இருமலில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை, இஞ்சி, தேன் டீ

எலுமிச்சை, இஞ்சி, தேன் டீ

எலுமிச்சை, இஞ்சி, தேன் கொண்டு தயாரிக்கப்படும் டீயை, இருமலால் அவஸ்தைப்படுபவர்கள் குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் தொண்டையில் உள்ள தொற்றுகளைக் குறைத்து, சளியை வெளியேற்றி, சளி சவ்வுகளைப் பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சிறிது சேர்த்து, அத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் pH அளவை சீராக்கும் மற்றும் தேன் சளி சவ்வுகளைப் பாதுகாக்கும்.

நேச்சுரல் இருமல் மருந்து

நேச்சுரல் இருமல் மருந்து

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், பட்டை மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி, வெதுவெதுப்பானதும் தேன் கலந்து குடிக்க இருமல் உடனடியாக நின்றுவிடும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

மூலிகை தேநீரான தைம் டீ மற்றும் அதிமதுர டீ போன்றவற்றில் உள்ள சளியை வெளியேற்றும் பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், இருமலின் தீவிரத்தைக் குறைக்கும்.

நீர்மங்கள்

நீர்மங்கள்

இருமல் அதிகம் இருக்கும் போதும், நீர் அல்லது பானங்களை அதிகம் குடிக்க வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நிலையில் உள்ள நீர் அல்லது பானங்களைக் குடித்தால், சளி உற்பத்தி குறையும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்

வெதுவெதுப்பான நீர் குளியல்

இருமல் இருந்தால், பலரும் குளிப்பதைத் தவிர்ப்பார்கள். ஆனால் இருமல் இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் குளிப்பதன் மூலம், சுவாசப் பாதைகள் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, இருமல் வருவது நீங்கும்.

குளிர்ச்சியான உணவுப் பொருட்கள்

குளிர்ச்சியான உணவுப் பொருட்கள்

இருமல் இருக்கும் போது, குளிர்ச்சியான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது சுவாச பாதைகளை வறட்சியடையச் செய்து, தொற்றுகள் மேன்மேலும் தீவிரமாவதைத் தடுக்கும்.

தவிர்க்க வேண்டிய பானங்கள்

தவிர்க்க வேண்டிய பானங்கள்

சளி அதிகம் பிடித்திருந்தால், சிட்ரஸ் பழ சாறுகள் மற்றும் கார்போனேட்டட் பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள அமிலம் மற்றும் சோடா, சளி உற்பத்தியைத் தூண்டி, இருமலை மேன்மேலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Methods To Stop Coughing Without Any Medicine

Read this article to know about the top home remedies to stop coughing that will help relieve the congestion.
Story first published: Friday, April 28, 2017, 14:40 [IST]
Subscribe Newsletter