ஆண் இனபெருக்க உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

நமது உடலில் கழுத்து, அக்குள், காது இடுக்கு, கை, கால்விரல் நகங்களில் அழுக்கு சேரும். இவற்றை காட்டிலும் அதிகமாக தொடை இடுக்குகள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் வியர்வை சுரப்பிகள் அதிகம், அதன் காரணமாக சேரும் அழுக்கும் அதிகமாக இருக்கும்.

எனவே, உடலின் பிற பகுதிகளை போல ஆண்கள் தங்கள் இனபெருக்க பகுதிகளையும் சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக, எப்படி எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்ய கூடாது என ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவசியம் என்ன?

அவசியம் என்ன?

நாம் முன்பு கூறியது போல, மற்ற இடங்களை காட்டிலும், இனபெருக்க உறுப்பு பகுதிகளில் வியர்வை சுரப்பிகள் அதிகம். அதனால் அதிக அழுக்கு மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஆசனவாய்!

ஆசனவாய்!

ஆசனவாய் அருகாமையில் இனபெருக்க உறுப்புகள் இருப்பதால். மலத்திலிருந்து பரவும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பு பகுதிகளில் பரவும் வாய்ப்புகளும் உள்ளன. மேலும், அந்தரங்க பகுதியில் வளரும் முடிகள் இந்த பாக்டீரியாக்கள் வேகமாக பரவ உதவும்.

ஸ்மெக்கா என்றால் என்ன?

ஸ்மெக்கா என்றால் என்ன?

ஸ்மெக்கா என்பது ஆண்குறி முன் தோலில் படியும் வெள்ளி நிறத்திலான துகள்கள் போல படிந்து காணப்படுவது. இதனால் ஆண்குறி மொட்டு முன் தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உடலுறவுக்கு பிறகு!

உடலுறவுக்கு பிறகு!

உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு ஆண், பெண் இருவரும் தங்கள் பிறப்புறுப்பு சிறிது நேரம் கழித்தோ, உடலுறவு முற்றிலுமாக முடிந்த பிறகு ரிலாக்ஸான பிறகு கழுவி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். இதனால், தொற்று அல்லது பிற பால்வினை நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

மென்மையான சோப்பு பயன்படுத்த வேண்டும். வாசனை திரவியம் அதிகம் இருக்கும் சோப்புகள் பயன்படுத்த கூடாது. இதனால் எரிச்சல் உணர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், ஆண்குறி மேல்தோல் சரும பிரச்சனைகள் இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசித்துவிட்டு சோப்பு பயன்படுத்துங்கள்.

முன் தோல்!

முன் தோல்!

ஆண்குறி மொட்டு முன் தோலுக்கு அடி பாகத்தில் அழுக்கு சேரும். எனவே, முன் தோலை மெல்ல எவ்வளவு இழுக்க முடியும் இழுக்கு, மொட்டின் அடி பாகத்தில் இருக்கும் அழுக்கை நீர் விட்டு கழுவுங்கள்.

சோப்பு பயன்படுத்தினால், நுரை மட்டும் பயன்படுத்தவும். மேலும், அந்த நுரை முற்றிலும் நீங்கும் படி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

முன் தோல் நீக்கியிருந்தால்?

முன் தோல் நீக்கியிருந்தால்?

சிலர் முன் தோல் நீக்கி இருப்பர். எடுத்துக்காட்டாக சுன்னத் செய்திருந்தால் முன் தோல் இருக்காது. அவர்களும் மொட்டு அடி பகுதியில் இருக்கும் அழுக்கை போக்க வேண்டும்.

முன் தோல் நீக்கப்பட்டிருந்தாலும் வியர்வை மற்றும் பாக்டீரியா காரணத்தால் அழுக்கு சேரும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

கழுவிய பிறகு?

கழுவிய பிறகு?

ஆணுறுப்பை கழுவது மட்டும் போதாது. பலரும் செய்யும் தவறு குளித்த பிறகு அந்தரங்கள் பகுதியில் சரியாக ஈரம் போகும் படி துடைக்க மாட்டார்கள். முக்கியமாக அந்தரங்க பகுதி மற்றும் முகம் துடைக்க மென்மையான டவல் பயன்படுத்துங்கள்.

பவுடர் கூடாது!

பவுடர் கூடாது!

சிலர் தாங்கள் குளித்து முடித்த பிறகு உடலுக்கு போடுவதை போலவே, அந்தரங்க பகுதியிலும் பவுடர் இட்டுக் கொள்வர். இது தவறு. தவறுதலாக சிறுநீர் குழாய், மேல் மொட்டு வழியாக பவுடர் கலந்தால் எரிச்சல் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், அவற்றில் இருக்கும் இரசாயன கலப்புகள் அசௌகரியங்கள் உண்டாக்கலாம்.

ஷேவிங் வேண்டாம்!

ஷேவிங் வேண்டாம்!

அந்தரங்கள் பகுதியில் முற்றிலுமாக முடிகளை ஷேவிங் செய்து அகற்றுவதற்கு பதிலாக, ட்ரிம் செய்வது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுத்தமாக முடிகள் நீக்கப்படுவதால் எளிதாக வியர்வை மூலமாக உருவாகும் பாக்டீரியாக்கள் சருமத்தில் உடனே தாக்கங்கள் உண்டாக்கலாம் என கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Keep Your Penis Clean? Read This Male Genital Hygiene Tips!

How To Keep Your Penis Clean? Read This Male Genital Hygiene Tips!
Story first published: Wednesday, July 12, 2017, 10:18 [IST]