அலுமினிய தாள் பெட்டிகளில் உணவு உண்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

By: Lakshmi
Subscribe to Boldsky

அலுமினியத்தகடு பொதுவாக வீட்டு சமையலில் கூட பயன்படுகிறது. சமையலில் அலுமினியப் பையைப் பயன்படுத்துவது அலுமினியத்தை உணவில் சேர்க்கிறது எனவும் இது உடல்நலத்தை அபாயத்திற்குள்ளாக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

எனினும், மற்றவர்கள் அது பயன்படுத்த முற்றிலும் பாதுகாப்பானது என கூறுகின்றனர்.

இந்த கட்டுரை அலுமினிய தாள்களை சமையலில் உபயோகிப்பது தொடர்புடைய அபாயங்களை ஆராய்யவும், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்கத்தக்கதா இல்லையா என்பதை அறியவும் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலுமினிய தாள் என்பது என்ன?

அலுமினிய தாள் என்பது என்ன?

அலுமினியத்தாள் என்பது பொதுவாக மெல்லிய, பல்வகை உலோகம், குறிப்பாக சமையலறையிலும் வீட்டு பயன்பாடுகளிலும் உபயோகிக்கப்படுகிறது.

நமது உணவில் அலுமினிய சிறிய அளவு உள்ளது!

நமது உணவில் அலுமினிய சிறிய அளவு உள்ளது!

பூமியின் மிகுதியான உலோகங்களில் அலுமினியம் ஒன்றாகும். அதன் இயற்கையான நிலையில், அது மண், பாறைகள் மற்றும் களிமண் ஆகியவற்றில் உள்ள பாஸ்பேட் மற்றும் சல்பேட் போன்ற பிற உறுப்புகளுடன் காணப்படுகிறது.

உண்மையில், பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், மீன், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட பெரும்பாலான உணவுகள் இயற்கையாகவே அலுமினியம் உள்ளது.

தேயிலை இலைகள், காளான்கள், கீரை மற்றும் முள்ளங்கி போன்ற சில உணவுகளில், மற்ற உணவுகளை விட அலுமினியம் அதிகமாக உள்ளது.

கூடுதலாக நீங்கள் உண்ணும் உணவிலிருந்தும் அலுமினியம் கலந்துள்ளது. இது பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிகள் ஆகியவற்றில் உள்ளது.

வீட்டில் சமைத்த உணவைக்காட்டிலும், வணிகரீதியாக தயாரிக்கப்படும் உணவுகளில் அதிகமாக அலுமினியம் கலந்துள்ளது.

உணவு மற்றும் மருந்து பொருட்களில் காணப்படும் அலுமினியம் ஆபத்தாக அமையாது, ஏனெனில் சிறிதளவு மட்டுமே உடலில் ஊறிஞ்சப்படும். மிதமுள்ள அலுமியம் வியற்வையாகவும், சிறுநீர் வழியாகவும் வெளியேற்றப்படும்.

பொதுவாக, அத்தியாவசியமான அளவு அலுமினியத்தை அன்றாட உணவில் உட்கொள்வது பாதுகாப்பானதாகும்.

அலுமினியத் தகடு உணவில் அலுமினியத்தை அதிகரிக்கிறது!

அலுமினியத் தகடு உணவில் அலுமினியத்தை அதிகரிக்கிறது!

உடலில் இருக்கும் அலுமினியம் பெரும்பாலான உணவில் இருந்து வருகிறது.

உணவில் அதிகமாக அலுமினியத்தை சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் பல ஆய்வாளர்கள் அலுமினிய தகட்டின் மூலம் வரும் குறைந்த அளவு அலுமினியம் ஆனது பாதிப்பை ஏற்படுத்தாது என கூறுகின்றனர்.

அதிக அளவு அலுமினியத்தால் உடலில் ஏற்படும் அபாயங்கள்!

அதிக அளவு அலுமினியத்தால் உடலில் ஏற்படும் அபாயங்கள்!

உங்கள் உணவு மற்றும் சமையல் மூலம் கிடைக்கும் அலுமினியம் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில் உடலில் இருந்து தானாகவே அலுமினியம் வெளியேற்றப்படுகிறது.

இருப்பினும், அல்சைமர் நோய் மற்றும் ஐபிடி நோய் ஆகியவற்றின் வளர்ச்சியில் அலுமினியம் ஒரு முக்கிய காரணி எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் இன்னும் உறுதியாக நிருபிக்கப்படவில்லை.

சமையலில் அலுமினியத்தின் அளவை எவ்வாறு குறைப்பது?

சமையலில் அலுமினியத்தின் அளவை எவ்வாறு குறைப்பது?

உங்கள் உணவில் அலுமினியத்தை முழுவதுமாக அகற்றுவது முடியாத காரியம், ஆனால் நீங்கள் அதை குறைக்க முடியும்.

சமையலின் போது அலுமினியத்தை குறைப்பது எப்படி என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1.குறைந்த வெப்பநிலையில் சமைக்க வேண்டும்.

2.குறைந்த அலுமினிய தகடுகளைப் பயன்படுத்தவும். அமிலம் நிறைந்த தக்காளி அல்லது எலுமிச்சை போன்ற உணவுகளை சமைக்க அதிக அளவு அலுமினியத்தை பயன்படுத்தக்கூடாது.

3.கண்ணாடி அல்லது பீங்கான் போன்ற அலுமினிய அல்லாத பாத்திரங்களை பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.

வணிக ரீதியாக அலுமினிய பேக்கிங் செய்யப்படும் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் வீட்டில் சமைத்த உணவை காட்டிலும் அதிக அளவு அலுமினியம் இருக்கும்.

நீங்கள் அலுமினிய தகட்டை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமா?

நீங்கள் அலுமினிய தகட்டை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமா?

அலுமினியத்தாள் ஆபத்தானது அல்ல, ஆனால் உங்கள் உணவின் அலுமினிய உள்ளடக்கத்தை ஒரு சிறிய அளவு அதிகரிக்கலாம்.

நீங்கள் உணவில் அலுமினிய அளவு பற்றி கவலை அடைந்தால், அலுமினிய தாளில் சமையல் செய்வதை நிறுத்த வேண்டும்.

எனினும், தேவையான அளவு அலுமினியம் உங்கள் உணவில் அவசியாமாக இருக்க வேண்டும்.

நீங்கள் பாதுகாப்பாக கருதப்படும் அலுமினியத்தின் அளவை விட மிக அதிகமாக சாப்பிடுவதாக தெரிந்தால், உங்கள் சமையலிலிருந்து அலுமினிய தாள்களை அகற்றுவது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is it healthy to using aluminium foil for cooking?

Is it healthy to using aluminium foil for cooking?
Subscribe Newsletter