ஆரோக்கியமற்ற சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

இளம் வயது நபர்களிடம் நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுய இன்பம் காண்தல் இயல்பாக காணப்படுத்கிறது. இது வாரத்திற்கு எவ்வளவு முறை என்ற எண்ணிக்கையில் பார்க்கும் போது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபட்டு காணப்படுகிறது.

வாரத்திற்கு மூன்றிலிருந்து ஏழு முறை என்பது மருத்துவ நிபுணர்களால் ஓகே என கூறப்படுகிறது. ஆனால், 30, 40-களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒத்துப்போகாது. இவர்கள் மத்தியில் இது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே போதுமென கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவசியம்!

அவசியம்!

சுய இன்பம் காணுதல் என்பது நாளடைவில் அவசியமான ஒன்றாக பதிந்துவிடுகிறது. இதுவும் ஒரு வகையில் அடிக்ஷன் தான். இது ஒரு மிகமிஞ்சிய பழக்கமாக ஒருவரது வாழ்வில் மாறும் போது, அவர்களது குணாதிசயங்கள், பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட காரணமாக மாறிவிடுகிறது.

எண்ணம்!

எண்ணம்!

ஒரு கட்டத்தில் சுய இன்பம் காணுதல் பற்றிய எண்ணம் கூட அவர்களால் நிறுத்திக் கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. இதனால் அவர்களது அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்படும்.

இத்தனை முறை சுய இன்பம் காணுதல் தான் அடிக்ஷன் என கூறிவிட முடியாது. சிலர் நாளின் ஒரு பகுதியை அதை பற்றிய எண்ணத்திலேயே கூட கடந்து வருவார்கள்.

சராரசியாக வாரத்திற்கு ஏழு அல்லது எட்டு முறை சுய இன்பம் காண்பவர்களை, இதில் அடிக்ஷனாக இருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் குறிக்கிறார்கள்.

அது என்ன சுய இன்ப அடிக்ஷன்?

அது என்ன சுய இன்ப அடிக்ஷன்?

டோபமைன் மற்றும் எண்டோர்பின் எனும் மூளை சார்ந்த இரண்டு கெமிக்கல்கள் காரணமாக தான் அடிக்ஷன் உண்டாகிறது. அது எந்த வகையான அடிக்ஷனாக இருந்தாலும், அதற்கு இந்த இரண்டு கெமிக்கல்கள் தான் காரணம் எனப்படுகிறது.

டோபமைன் நியூரோட்ரான்ஸ்மிட்டார், இது இன்பத்தின் அளவை அனுபவிப்பதில் உதவும். எண்டோர்பின் என்பது ஹார்மோன், இது உடல் வேலையின் போது, உடலில் இருந்து வெளிப்படும் சுரப்பி. எண்டோர்பின் ஒருவர் ரிக்கவர் ஆகிவர உதவும்.

எது வெளிப்படும்?

எது வெளிப்படும்?

உடலுறவில் ஈடுபடும் போது உடல் டோபமைனை வெளியிடுகிறது. இதன் மூலம் செக்சுவல் சார்ந்த இன்பம் பெற முடிகிறது. சுய இன்பம் காணும் போது உடல் எண்டோர்பினை வெளியிடுகிறது.

டோபமைன் மற்றும் எண்டோர்பின், இவை இரண்டுமே மன அழுத்தம் குறைக்க உதவும் கெமிக்கல் சுரப்பிகள். இது சரியாக சுரக்காமல் போகும் பட்சத்தில் மன அழுத்தம், மனநிலை சமநிலையின்மை போன்றவை ஏற்படும். சுய இன்பம் அதிகமாக காணும் இந்த தாக்கம் உண்டாகலாம்.

சுய இன்பம் காண்பது நல்லது என்று தான் பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால், அளவிற்கு மீறினால்? அது நஞ்சாகிவிடும்.

எப்படி அறிவது?

எப்படி அறிவது?

ஒருநபர் சுய இன்பம் காணுதலில் அடிக்ஷனாகி இருக்கிறார் என்பதை எப்படி அறியலாம்? இந்த கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்டு பதில் பெற்றால், அடிக்ஷன் இருக்கிறதா? இல்லையா? என எளிதாக அறிந்துக் கொள்ளலாம்...

  1. பார்ன் சமாச்சாரங்களை அதிகம் காண முயல்பவரா?
  2. அடிக்கடி சுய இன்பம் காணுதல் குறித்து என்றாவது அசிங்கமாக நினைத்துக் கொண்டதுண்டா?
  3. சுய இன்பம் காணுதலால் உறவில் பிரச்சனைகள் எதிர்க் கொண்டதுண்டா?
  4. பொது இடங்களில், அலுவலகம், உறவினர் வீட்டில் கூட சுய இன்பம் கண்டுள்ளீர்களா?
  5. இதனால் என்றாவது பதட்டம், மன அழுத்தம் கொண்டதுண்டா?

இந்த பட்டியலின் கேள்விகளை நீங்கள் கடந்து வந்திருந்தால்... வருத்தம் அடைய வேண்டாம்.

இதில் இருந்து வெளிவர வழிகள் இருக்கின்றன.

உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தும் வேலைகளில், செயல்களில் ஈடுபட்டு வந்தாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Stop Unhealthy Masturbation?

How to Stop Unhealthy Masturbation?