உங்க சோப்பு நல்லதா? கெட்டதா? - ஒரு சின்ன டெஸ்ட் ரிசல்ட்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு முறையும் கழிவறை சென்று வந்த பிறகு, சாப்பிடும் முன், பின், வெளியே சென்று வந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பிறகு கைகளை கழுவி ஆரோக்கியமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்கிறேன் என நம்பும் நபரா நீங்க? நிஜமாகவே உங்கள் கைகள் சுத்தமாக தான் இருக்கிறது என்பதை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்?

நுரை பொங்க சோப்பு அல்லது வாஷ் லோஷன் போட்டு நீரில் கைகளை அலாசிவிட்டால் கைகள் சுத்தமாகிவிடும் என நம்பிக் கொண்டு இருக்கிறீர்களா? இதை படித்த பிறகு நீங்கள் கைகழுவும் பழக்கம் முற்றிலுமாக கூட மாறலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிசோதனை!

பரிசோதனை!

இது ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து பார்க்கப்பட்ட சோதனை முறை ஆகும். அதாவது நீங்கள் கை கழுவும் முறையால் எவ்வளவு கிருமிகள் அழிகின்றன, கை எவ்வளவு சுத்தமாகிறது என செய்யப்பட்ட எக்ஸ்பெரிமென்ட். க்ளோ ஜெர்ம் எனும் க்ரீம் கைகளில் தடவி, கைகளை கழுவிய பிறகு யு.வி. கேமரா மூலம் பதிவு செய்து, கிருமிகளின் கணக்கை அளவிட்டனர். அதில் வெளியான தகவல்கள் குறித்து தான் நாம் பார்க்க போகிறோம்.

வெள்ளை நிறம்!

வெள்ளை நிறம்!

கை கழுவிய பிறகு கைகளில் எவ்வளவு வெள்ளை நிறம் வெளிப்படுகிறதோ, அவ்வளவு கிருமிகள் கைகளில் அப்படியே தங்கி இருக்கின்றன என்பதை நாம் அறிய முடியும்.

Image Courtesy

நீரில் அலாசி, உதறுதல்!

நீரில் அலாசி, உதறுதல்!

சிலர் மூன்றே நொடிகளில் கை கழுவி விடுவார்கள். நீரில் கைகளை அலாசி உதறிவிட்டு வந்துவிடுவார்கள். இப்படி கை கழுவும் நபர்களின் கைகளில் இவ்வளவு கிருமிகள் தஞ்சம் கொண்டிருக்குமாம். இதனால் கைகளில் கிருமிகள் அப்படியே தான் இருக்கும். இந்த முறையில் நீங்கள் கை கழுவதும் ஒன்றுதான், கை கழுவாமல் இருப்பதும் இன்றுதான்.

Image Courtesy

6 நொடிகள் - சோப்பு இல்லாமல்!

6 நொடிகள் - சோப்பு இல்லாமல்!

சராசரியாக நீங்கள் ஆறு நொடிகள் சோப்பு இல்லாமல், நீரில் கை கழுவுவதும் கைகளில் உள்ள பாக்டீரியாக்களை போக்க போதுமான அளவு பயனளிப்பது இல்லை. என்.எச்.எஸ் மையம் குறைந்தபட்சம் 15 நொடிகளாவது கைகளை மென்மையாக தேய்த்துக் கொடுத்து கழுவ வேண்டும் என கூறுகிறது.

Image Courtesy

6 நோய்கள் - சோப்பு பயன்படுத்தி!

6 நோய்கள் - சோப்பு பயன்படுத்தி!

சோப்பு போட்டு எவ்வளவு நேரம் கழுவுகிறேர்களோ, அந்த சோப்பு நீங்கும் வரை நீங்கள் நீரில் கையை கழுவ வேண்டும். சோப்பு கிருமிகளை போக்க தான் செய்யுமே தவிர அழிக்காது. மேலும், அந்த கிருமிகள் சோப்பின் மீதே தங்கும் வாய்ப்பும் இருக்கின்றன.

ஏன், நீங்கள் பயன்படுத்தும் ஆன்டி-பாக்டீரியா சோப்பு கூட, முழுமையாக கிருமிகளை அழிக்காது என நிபுணர்களே கூறுகின்றனர்.

Image Courtesy

15 நொடிகள் - சோப்பு பயன்படுத்தி!

15 நொடிகள் - சோப்பு பயன்படுத்தி!

சரியாக 15 நொடிகள் கைகளை கழுவினால் உங்கள் கைகளில் இருக்கும் கிருமிகள் முழுமையாக நீங்கிவிடும் என கூற முடியாது. ஆனால், ஆய்வில் பங்கேற்ற 3500 பேரை பரிசோதனை செய்ததில், 15 நொடிகள் கை கழுவுவது ஏறத்தாழ கிருமிகள் கைகளை விட்டு நீங்க போதுமானதாக இருக்கிறது என அறியப்பட்டுள்ளது.

Image Courtesy

30 நொடிகள் - சோப்பு பயன்படுத்தி!

30 நொடிகள் - சோப்பு பயன்படுத்தி!

முப்பது நொடி... இவ்வளோ நேரம் கை கழுவனுமா?ன்னு கேட்கிறீங்களா... அமெரிக்க நோய் மற்றும் பாதுகாப்பு மையம் மக்கள் கைகள் சுகாதரமா வெச்சுக்கணும்னா 15- 30 செகண்ட்ஸ் கை கழுவுங்கன்னு சொல்றாங்க.

Image Courtesy

ட்ரையர் - டவல்?

ட்ரையர் - டவல்?

இதற்கு எல்லாம் மேல், கை கழுவிய பிறகு ட்ரையர் பயன்படுத்தலாமா? டவல் பயன்படுத்தலாமா என்ற ஒரு கேள்வி ஒன்று எழுகிறது.

இந்த உண்மை அறிந்தால், இனிமேல் ஹேன்ட் ட்ரையரை கழிவறையில் பயன்படுத்தவே மாட்டீர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How clean are Your hands? You Will Be Shocked After Reading This!

How clean are Your hands? You Will Be Shocked After Reading This!
Subscribe Newsletter