
சளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி வரக் கூடிய ஒன்று தான்.. ஆனால் இந்த நெஞ்சு சளி என்பது சற்று ஆபத்தான ஒன்று என்றே கூறலாம். உங்களுக்கு நெஞ்சு சளி இருக்கிறது என்பதும் கூட மிக தாமதமாக தான் வெளிப்படும். நீங்கள் நெஞ்சுசளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை நீக்குவது என்பது மிகவும் எளிதான ஒன்று...
நீங்கள் நெஞ்சு சளிக்கு ஒரே மருத்துவரிடத்தில் மருத்துவம் பார்ப்பது என்பது சிறந்தது. சூழ்நிலைகளின் காரணமாக மருத்துவரை மாற்ற வேண்டி இருந்தால், நீங்கள் முந்தைய மருத்துவரிடத்தில் சிகிச்சை பெற்ற அனைத்து ரிபோர்ட்டுகளையும் காண்பிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அவருக்கு உங்களுக்கு என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது பற்றி எல்லாம் தெரியும். இந்த பகுதியில் நெஞ்சு சளியை இயற்கையான முறையில் எப்படி கரைப்பது என்பது பற்றி காணலாம்.
ஆடாதோடா இலை
ஆடா தோடா இலை நெஞ்சு சளியை போக்க ஒரு அரு மருந்தாக இருக்கிறது. ஆடாதோடா இலைத் துளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்.
வேர்
ஆடாதோடா இலை மற்றும் அல்லாமல் அதன் வேரும் இந்த நெஞ்சு சளிக்கு ஒரு அருமருந்தாக இருக்கிறது. ஆடாதோடை செடியின் வேரை இடித்து சலித்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி கரையும்.
எலுமிச்சை சாறு
சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.
மிளகு
பாலில் மிளகை கலந்து குடிப்பது சளிக்கு மிக மிக நல்லது. இது மிக எளிய முறையாக இருந்தாலும் மிகச்சிறந்த பலனை கொடுக்கும். குடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
ஆரஞ்சு
வைட்டமின் சி நெஞ்சு சளியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. நெஞ்சு சளி இருக்கும் நேரத்தில் இந்த ஆரஞ்சு பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நெஞ்சு சளி கரையும்.
துவரம் பருப்பு
நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் துவரம் பருப்பும் மிக முக்கியமானதாகும். இந்த துவரம் பருப்பு, மிளகு, உப்பு மூன்றையும் வாணலியில் வறுத்து பொடி செய்து சுடு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளி கரையும்.
தேன்
தேன் ஒரு மிகச்சிறந்த இயற்கை கொடுத்த வரமாகும். தேன் சளியை கரைப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. நெஞ்சு சளி கரைய இரவில் பசும் பாலில் சிறிது மிளகுத்தூள், மஞ்சள் தூள், தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
துளசி
துளசி நமது வீடுகளிலேயே இருக்கும் ஒரு கை கண்ட மருந்தாகும். இந்த துளசி இலைகளை நீரில் கழுவி விட்டு, தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைக்க கூடிய ஒன்று.. நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
புதினா..
புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
வெற்றிலை
வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும். இது நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த நாட்டு வைத்தியமாகும்.
இஞ்சி
பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.
கற்பூரம்
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக கவனம். சூடான எண்ணெய் கையில் பட்டால் ஆறுவதும் கடினம், தழும்பும் விரைவில் மறையாது.
தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
இனிமேல், எல்லாமே ஜில், ஜில்... கூல், கூல்... தான், வந்திடுச்சு ஆண்மை அதிகரிக்கும் புதிய அண்டர்வேர்!
எடையை வேகமாக குறைக்கும் ஸ்நேக் ஜூஸ் டயட் ... அனல்பறக்கும் ரிசல்ட்
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!
நீ என்ன பெரிய பிஸ்தாவான்னு ஏன் கேட்கறாங்க தெரியுமா?... இதனாலதான்...
எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்
இந்த இலை துவையல் அரைச்சு சாப்பிடுங்க... எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் பஞ்சா பறந்துடும்...
இந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா?
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!
இத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது தெரியுமா?
பெண்களுக்கு மட்டும் வெயிட் ஏறிக்கிட்ட போறதுக்கு இந்த 10 மேட்டரு தான் காரணமாம்...
உடலில் இந்த 5 மாற்றங்கள் தெரிந்தால் அவசியம் கவனித்திடுங்கள்!
கசகசாவை இந்த அளவுக்குமேல் பயன்படுத்தினால் உயிரையே பறித்துவிடும்... திடுக்கிடும் தகவல்
சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்ணுறுப்பில் செய்யக் கூடாத விஷயங்கள் - நிபுணர்கள்!