மாதவிடாய் காலத்தில் வரும் கடுமையான மார்பக வலிக்கு இந்த ஒரு பழம் சாப்பிடுங்கள்!

Written By:
Subscribe to Boldsky

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளில் ஒன்று தான் இந்த மார்பக வலியாகும். இந்த மார்பக வலியானது மாதவிடாய்க்கு ஒரு சில நாட்கள் முன்னதாகவே வந்துவிட கூடியது.. இது சிலருக்கு 10 நாட்கள் முன்னதாக கூட வரலாம். இந்த வலியுடன் பெண்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்வது மிகவும் கடுமையாக இருக்கும்..

Effective Home Remedies To Reduce Breast Pain During Menstrual Cycle

இந்த வலி மாதவிடாய் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களினால் தான் வருகிறது என்றாலும் கூட சிலரால் இந்த வலியை தாங்க முடியாது.. இந்த வலிக்கு நீங்கள் இயற்கைமுறையிலேயே மிக எளிமையான பயனை பெறலாம். மாதவிடாய் காலத்தில் வரும் இந்த மார்பக வலிகளில் இருந்து தப்பிக்க இந்த பகுதியில் சில இயற்கை வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உளுந்து

1. உளுந்து

மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் மாதவிடாய் காலத்தில் வரும் மார்பக வலி குறையும். உளுந்தை அரைத்து பற்று போட்டாலும் மார்பகத்தில் உண்டாகும் வலி குறையும்.

2. நீர் ஆகாரம்

2. நீர் ஆகாரம்

உங்களுக்கு மார்பகத்தில் இனம் புரியாத ஒரு வலி உண்டாகும். அந்த வலி வாயுக்களால் உண்டாகலாம். இதற்கு நீங்கள் சூடான தண்ணீரை பருகலாம். அல்லது சூடான ஏதாவது திரவ ஆகாரத்தை பருகலாம். டீ குடிக்கலாம் இதனால உங்களது உடலில் உள்ள வாயுக்கள் வெளியேறிவிடும்.

3. ஐஸ் உத்தடம்

3. ஐஸ் உத்தடம்

ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, மார்பக பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனை 10 முதல் 20 நிமிடங்கள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் உங்களது மார்பகத்தில் உள்ள வலியானது 48 முதல் 72 மணிநேரத்தில் சரியாகிவிடும்.

4. பூண்டு பால்

4. பூண்டு பால்

ஒரு டம்ளர் பாலை எடுத்து, அதில் 6 முதல் 8 பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டுகளை போட வேண்டும். அதன் பின்னர் பாலை சூடாக்க வேண்டும். இந்த பாலை பூண்டுடன் சேர்த்து குடித்துவிட வேண்டும். இவ்வாறு குடிப்பதால் மார்பக வலி குணமாகும்.

5. மஞ்சள் பால்

5. மஞ்சள் பால்

பூண்டை போலவே மஞ்சளும் மார்பக வலியை சரி செய்ய உதவும் ஒரு முக்கிய பொருளாகும். அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூளை எடுத்து அதை ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும். இதில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளை போட்டு குடித்தால் மார்பகத்தில் உள்ள வலி நீங்கும்.

6. பேக்கிங் சோடா

6. பேக்கிங் சோடா

இது ஒரு மிக எளிமையான முறையாகும். ஒரு துளி அளவு பேக்கிங் சோடாவை சூடான ஒரு கப் தண்ணீரில் கலந்து, குடித்தால் அசிடிட்டி குறைந்துவிடும். இது உங்களது மார்பக வலியிலிருந்து நிவாரணம் கொடுக்கும்.

7. விளக்கெண்ணை

7. விளக்கெண்ணை

விளக்கெண்ணை ஒரு மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. விளக்கெண்ணை மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒன்றாக கலந்து மார்பக பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்தால் உங்களது மார்பகத்தில் உண்டாகும் வலிகள் குறைந்துவிடும்.

8. சீரகம்

8. சீரகம்

சீரகம் பெண்களின் மாதவிடாய் கால மார்பக வலிகளுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். சிறிதளவு சீரகத்தை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அதை காய்ச்சி சீரகத்தை வடிகட்டி விட்டு அந்த சீரக நீரை அருந்தினால் மார்பக வலி குறைந்துவிடும்.

9. வாழைப்பழம்

9. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது மாதவிடாய் கால மார்பக வலிகளை சரி செய்ய கூடியதாகும். மார்பக வலிகளுக்கு இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்...!

10. இளநீர்

10. இளநீர்

மாதவிடாய் காலத்தில் உண்டாகும் மார்பக வலிக்கு மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியம் இளநீர் தான்.. இந்த இளநீர் ஏராளமான பிரச்சனைகளை சரி செய்ய கூடிய தன்மை உடையதாகும். இதில் உள்ள பொட்டாசியமும், நீர்ம சத்தும் உங்களது மார்பக வலியை சரி செய்துவிடும் தன்மை உடையது.

11. முருங்கை கீரை

11. முருங்கை கீரை

முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

12. புதினா

12. புதினா

உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

13. கொத்தமல்லி

13. கொத்தமல்லி

கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

14. மாதுளை

14. மாதுளை

இலந்தைஇலை, மாதுளை இலை இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட நாள் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective Home Remedies To Reduce Breast Pain During Menstrual Cycle

Effective Home Remedies To Reduce Breast Pain During Menstrual Cycle
Story first published: Tuesday, December 5, 2017, 15:57 [IST]