உடலில் இரத்த கட்டி உண்டாகி இருப்பதை வெளிக்காட்டும் 6 அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலின் வெளிப்புறத்தில் உண்டாகும் மாற்றங்களை நாம் கண்டறிய முடியும். ஆனால், உட்புற உடலில் உண்டாகும் மாற்றங்களை கண்டறிவது கடினம். நமது உடல் எந்த ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தாலும், அதை ஒருசில அறிகுறிகள் மூலம் நமக்கு தெரிவிக்க முயலும்.

Signs You May Have a Blood Clot

அந்த வகையில் உடலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருந்தால், நமது உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால் வலி!

கால் வலி!

கால் வலி அல்லது மென்மையான வீக்கம் போல உண்டாவது. இது ஆழமான இரத்த உறைவு உண்டாகியிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறி ஆகும். சில சமயங்களில் இதனால் தசை பிடிப்பு போன்று கூட ஏற்படலாம்.

இருமல்!

இருமல்!

கால நிலை மாற்றம் போன்ற எந்த காரணமும் இன்றி இருமல் வந்துக் கொண்டே இருப்பதும் ஒரு அறிகுறி தான். இதய படபடப்பு, மார்பு வலி, மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

மூச்சு திணறல்!

மூச்சு திணறல்!

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், நுரையீரலில் இரத்த கட்டிகள் உண்டாகியிருக்கலாம். இது உண்டாகியிருந்தால், இதய படபடப்பு, மயக்கம், அதிகரிக்கும் இதய துடிப்பு போன்றவை ஏற்படும்.

மார்பு வலி!

மார்பு வலி!

இழுத்து, ஆழமான மூச்சு விடும் போது இதய வலி உண்டாவது. இதுவும், நுரையீரலில் இரத்த கட்டி உண்டாவதன் அறிகுறி தான். இது அபாயமான நிலை அடைவதற்கு முன்னர் நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

சருமத்தில் சிவப்பு கோடுகள்!

சருமத்தில் சிவப்பு கோடுகள்!

இரத்த கட்டிகள் உண்டாகியிருந்தால், இரத்த நாளத்தின் பாதை வெளிப்புறத்தில் சிவப்பு கோடுகள் தோன்றும். இது சாதாரண காயம் அல்ல இதை நீங்கள் பரிசோதிக்க வேண்டும். கை, கால்கள் இந்த சிவப்பு கோடுகள் அமைந்திருக்கும் இடத்தில் சற்றே சூடாக இருக்கும்.

வீக்கம்!

வீக்கம்!

ஆழமான இரத்த உறைவுஉண்டாகியிருந்தால், கை, கால்களில் வீக்கம் தென்படும். இது இரத்த ஓட்டத்தை சீர்குலைய செய்யும். இது முக்கியமான உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You May Have a Blood Clot

Signs You May Have a Blood Clot
Please Wait while comments are loading...
Subscribe Newsletter