உங்கள் துணைக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை வெளிகாட்டும் அறிகுறிகள்!!

Posted By:
Subscribe to Boldsky

எச்.ஐ.வி மட்டுமின்றி கிளமீடியா, ட்ரைக்கொமோனஸ், "Gonorrhoea", ஹெர்பெஸ், இனப்பெருக்க உறுப்பு மருக்கள், சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி என பல பால்வினை நோய் தொற்றுகள் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படுகின்றன. பொதுவாக மக்கள் மத்தியில் பால்வினை நோய்கள் என்பது குணப்படுத்த முடியாதது என்ற எண்ணம் நீடித்து வருகிறது.

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

ஆனால், ஒருசில பால்வினை நோய்களை தவிர மற்றவையை சீரான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என பால்வினை நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குணப்படுத்த முடியாத பால்வினை நோய்களை கூட கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்!!!

பெரும்பாலும் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே அவர்களது துணையுடன் உறவில் ஈடுபடுவதன் மூலம் தொற்று எளிதாக பரவிவிடுகிறது. எனவே, முதலில் உங்கள் துணைக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகளை எப்படி கண்டறிவது என தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புண்கள்

புண்கள்

இதுவொரு பொதுவான ஆரம்பக்கால அறிகுறி ஆகும். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் பிறப்புறுப்பு பகுதியில் புண்கள் தென்படும்.

கொப்புளங்கள்

கொப்புளங்கள்

ஆணுறுப்பில் இயற்கைக்கு மாறாக புண் அல்லது கொப்புளங்கள் போன்று ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இதை சாதாரணமாக விட்டுவிட வேண்டாம்.

விதைகளில் வீக்கம்

விதைகளில் வீக்கம்

உங்கள் துணையின் விதைகள் அல்லது விதைப்பையில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என பாருங்கள். விதையில் வீக்கம் காணப்படுவது இரண்டாம் கட்ட அறிகுறிகள் ஆகும்.

ஆணுறுப்பின் மேல்

ஆணுறுப்பின் மேல்

விதையில் வீக்கம் ஏற்படுவதை போலவே, ஆணுறுப்பின் தலை பகுதியில் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவது, வீங்கியது போல காணப்படுவதும் பால்வினை தொற்று ஏற்பட்டதன் அறிகுறிகள் தான்.

சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழித்தல்

சிறுநீர் / விந்து வெளிபடும் போதுவலி அல்லது எரிச்சல் ஏற்படுவது மற்றுமொரு அறிகுறி ஆகும். ஆனால்ம், இதை அவர்களாக கூறாமல் நீங்கள் கண்டறிவது கடினம்.

உடலுறவில் ஈடுபடும் போது

உடலுறவில் ஈடுபடும் போது

ஆனால், நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது விந்து வெளிப்படும் நேரத்தில் அவர் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது போன்ற உணர்வை வெளிப்படுத்துவதை வைத்து நீங்கள் அவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

அசாதாரண வெளியேற்றம்

அசாதாரண வெளியேற்றம்

சிறுநீர் வெளியேறும் போது நிறத்தில் மட்டுமின்றி மோசமான நாற்றத்தை வைத்தும் கூட ஒருவருக்கு பால்வினை தொற்று எற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். இதுவும் இதன் அறிகுறிகளில் ஒன்று தான்.

கவனத்தில் கொள்ள வேண்டியது

கவனத்தில் கொள்ள வேண்டியது

ஒருசில பால்வினை நோய்களை தவிர மற்றவை குணப்படுத்தக் கூடியவை தான் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, கூச்சப்படாமல் மருத்துவரை கண்டு ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள தவற வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs The Partner You Are Having Intercourse With Has An STD

Signs The Partner You Are Having Intercourse With Has An STD,
Subscribe Newsletter