நீங்கள் கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதன் அறிகுறிகள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நாம் சிலசமயம் உடலில் ஏதாவது உபாதை ஏற்படும்போது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். சின்ன வலிதானே என்று வலி வரும்போதெல்லாம், மாத்திரையை சாப்பிட்டு தற்காலிகமாக அதற்கு முற்று புள்ளி வைப்போம். ஆனால் அந்த நிலை தொடர்ந்து நீடித்தால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை அணுகியே ஆக வேண்டும். வருமுன் காப்பது சிறந்தது. அப்படியும் வந்தால் ஆரம்பத்திலேயே பார்த்து உடலை சரி செய்து கொண்டால் இன்னும் சிறந்தது.

Signs and Symptoms of Diseases that you Must Know

உடல் இளைத்தல் :

உடற்பயிற்சி எதுவுமில்லாமல் எந்த முயற்சியுமில்லாமல், திடீரென 10 சதவீத எடை சில மாதங்களுக்குள் குறைந்தால், நிச்சயம் அது ஏதாவது நோயின் அறிகுறியாகத்தான் இருக்கும். சர்க்கரை வியாதியாக இருக்கலாம், இரைப்பை நோய்கள், புற்று நோய், மற்றும் சத்துக்கள் உட்கொள்வதில் பிரச்சனைகள் , ஹைபர் தைராய்டிஸம் மற்றும் மன அழுத்தம் என பல காரணங்களின் அறிகுறியாக இருக்கலாம்.

Signs and Symptoms of Diseases that you Must Know

காய்ச்சல் :

காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரம் இருப்பது சாதரணமானதுதான்.. ஆனால் 10-15 நாட்கள் ஆகியும் காய்ச்சல் சிறிதும் குறையாமலிருந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு செல்கள் ஏதாவது ஒரு நோயின் எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் காரணமாகும். அதுவும் 3 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் குறையாமல் அதிகரித்துக் கொண்டால் 103 டிகிரி வந்தடைந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்.

Signs and Symptoms of Diseases that you Must Know

மூச்சிரைப்பு :

பொதுவாக உடற்ப்யிற்சி செய்யும்போதோ, அல்லது அதிக எடை தூக்கும்போது, அல்லது நடக்கும்போதோ மூச்சு வாங்கும். ஆனால் காரணமேயில்லாமல் சாதரனமாக அமர்ந்த நிலையில் அல்லது ஓய்வெடுக்கும் நிலையில் அல்லது அடிக்கடி மூச்சிரைப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை கலந்தாலோசியுங்கள். எனெனில் இது நுரையீரல் அல்லது இதயம் சம்பந்தமான நோயாகவும் இருக்கலாம்.

Signs and Symptoms of Diseases that you Must Know

காலைக் கடன்களில் பிரச்சனை :

எப்போதும் போலல்லாமல், தொடர்ந்து பல நாட்களாக மலச்சிக்கல் வந்தால், அல்லது வயிற்றுப் போக்கு எற்பட்டாலோ, அதனை உடனடியாக கவனிக்க வேண்டும். மலம் கருப்பாக வந்தாலோ அல்லது ரத்தம் கலந்து வந்தாலோ, அல்லது ஜெல் போன்று கோழை கலந்து வந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று வாருங்கள்.

Signs and Symptoms of Diseases that you Must Know

பசியின்மை :

வயிறு பசிப்பது போலிருக்கும். மிகக் குறைவாக சாப்பிட்டதும் வயிறு நிறைந்தது போலிருக்கும். வயிறு உப்புசம், தொடர்ந்து விக்கல்,

அடிக்கடி வாந்தி, குமட்டல் இருந்தால் உணவுக் குழாய் மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்களாக இருக்கலாம்.

Signs and Symptoms of Diseases that you Must Know
English summary

Signs and Symptoms of Diseases that you Must Know

Signs and symptoms that Indicates you are affected from disease
Story first published: Saturday, August 20, 2016, 10:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter