நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே வேலை செய்தால் என்னாகும் தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பழைய காலம் போல உடல் உழைப்பு இப்போது இல்லை. குறைந்தது எட்டு மணி நேரம் அமர்ந்து கொண்டே வேலைப் பார்க்கிறார்கள். தசைகளுக்கு போதிய பயிற்சி இல்லாத போதும் உடல் பயிற்சி இல்லாதபோதும் பலவிதமான நோய்கள் வருகின்றன. இதனை தடுக்க அவ்வப்போது நடப்பது, நிற்பது கட்டாயம் செய்ய வேண்டும்.

அமர்ந்து கொண்டேயிருக்கும்போது உடலில் ஒரே நிலையில் அழுத்தப்படுவதால் முதுகுவலி, எலும்பு தேய்மானம் ரத்த ஓட்டம் குறைவது என பலபாதிப்புகள் ஏற்படுகின்றன. என்ன விதமான பாதிப்புகள் என ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தலை :

தலை :

ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்வதால் ரத்த ஓட்டம் சீராக பாய்வது கடினம். இதனால் பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. தலைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாதபோது மூளையின் செயல்திறன் பாதிக்கப்படும். மனச் சோர்வு, உடல் வலி நரம்பு பிரச்சனைகள் ஆகியவற்றை தரும்.

வயிறு :

வயிறு :

அமர்ந்து கொண்டே இருப்பதால் விரைவில் தொப்பை உருவாகிவிடும். இதற்கு காரணம் தகுந்த அளவில் கலோரிகளும், கொழுப்புகளும் எரிக்கப்படாமல் இருப்பதால்தான்.

இதயம் :

இதயம் :

அதிகம் பாதிக்கப்படுவது இதயம்தான். உடலுக்கு வேலையில்லாதபோது இதயத் தமனிகள் பாதிக்கப்படுகின்றன. கொழுப்பு படிந்து இதய நோய்கள் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

நுரையீரல் :

நுரையீரல் :

அமர்ந்த நிலையில் இருக்கும்போது குறைவான ஆக்ஸிஜனே உள்ளே இழுக்கப்படுகிறது. இதனால் நுரையீரல் பாதிப்பு உண்டாகும். சுவாசக் கொளாறுகள் எளிதில் தாக்கும். அதோடு ரத்தத்தில் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

நமது தசைகள் பயிற்சி பெறும்போது இரைப்பையிலிருந்து குளுகோஸை, தசைகளில் கொண்டு வந்து லாக்டோஸாக மாற்றுகிறது. இதனால் இரத்தத்தில் குளுகோஸின் அளவு கட்டுக்குள் இருக்கும். கைகளுக்கு வேலையில்லாதபோது, குளுகோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை வியாதியை உண்டாக்கும்.

கால் :

கால் :

கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து, இதனால் நரம்புகள் பாதிக்கப்படலாம். பக்க வாதம், தசை பிடிப்பு என பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Impacts of Sitting all the day

Impacts of sitting in the chair for all time
Story first published: Thursday, August 25, 2016, 9:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter