Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
மாத விடாய் வலியை போக்கும் 7 வீட்டு தீர்வுகள் !!
பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் வரும் பல உபாதைகள் வருவது இயற்கையானது. அதுவும் கருமுட்டை உருவாகும்போது ஒவ்வொரு மாதமும் உண்டாகும் மாதவிடாய் வலியை போக்க குறிப்புகள் இங்கே!
வயிற்று வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தலை வலி, மன உளைச்சல், சோர்வு, உடல் வலி என இந்த பிரச்சனைகளை ஒவ்வொரு பெண்ணும் மாதவிடயின் போது தாண்டாமல் வருபவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கர்ப்பப்பை சுற்றிலும் உள்ள த்சை இறுக்கத்தினாலே வலி உண்டாகிறது. அவ்வாறு வரும் மாத விடாய் சமயங்களில் வலிகளை போக்க இந்த குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். பலன் கிடைக்கும்.

வெந்தய நீர் :
வெந்தயத்தை முன் தின இரவு ஊற வைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் வலி கட்டுப்படும். இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகும்.

இஞ்சி கருமிளகு தேநீர் :
தேநீர் தயாரிக்கும் போது அதில் இஞ்சியை தட்டி போட்டு கொதிக்கவிடவும். அதன் பின் வடிகட்டியவுடன் அதில் மிளகுப் பொடியை கலந்து குடித்தால் புத்துணர்வாகவும் வலி மறைந்தும் போய்விடும்.

சூடான ஒத்தடம் :
சூடான நீரில் ஒத்த்டம் வயிற்றுப் பகுதிகளில் கொடுத்தால் இறுக்கமடைந்த தசைகள் ஆறுதலடைந்து தளர்வாகும். இதமாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய் மசாஜ் :
இது வயிறு மற்றும் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வை தடும். நல்லெண்ணெயை சூடுபடுத்தி அடிவயிறில் தேய்த்தால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். இதனால் வலி குணமாகும்.

சீரகம் :
சீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள். ஆறியது வடிகட்டி குடித்தால் , வயிற்றில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி இதம் பெறும்.

சீமை சாமந்தி தே நீர் :
சீமை சாமந்தி வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதிலிருக்கும் காரணிகள் கர்ப்பப்பை தளர்வ்டையச் செய்து புரோஸ்டா கிளாண்டின் சுரப்பை குறைக்கிறது. இதனால் வலியும் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications
