போரடிக்கிற வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற சின்ன சின்ன ட்ரிக்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வாழ்க்கையில் சில சமயங்களில் போரடிப்பது போலத் தோன்றும். காரணம் ஒரே மாதிரியான வேலை, ஒரே வாழ்க்கை முறை என திரும்ப திரும்ப ஒரே விஷயங்களை பண்ணும்போது இது போன்ற எண்ணங்கள் தவிர்க்க முடியாதுதான். அந்த சமயங்களில் மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்யலாம். இதை கவனியுங்கள்.

Health tricks to keep you comfortable and fit

ஒரு கப் காபி :

விடுமுறை நாட்களில் மத்யானம் தூங்குவதால் சற்று உடலுக்கு ஓய்வாக இருக்கும். என்றைக்காவது இப்படி தூங்குவது நம் உடலிலுள்ள அசதியை போக்கும்.

ஆனால் நீங்கள் கவனித்து உள்ளீர்களா. மத்யானம் தூங்கி எழுந்ததும், உடல் சோம்பலாகவும், தூங்கிக் கொண்டேயிருக்கலாம்போல அசதியும் தோன்றும்.

இதை எப்படி தவிர்க்கலாம் என தெரியுமா? மத்தியானம் தூங்கும் முன் ஒரு கப் காபி குடித்து விட்டு தூங்கினால், தூங்கி எழுந்த பின் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சோம்பலாக உணர மாட்டீர்கள்.

Health tricks to keep you comfortable and fit

காதினை தேயுங்கள் :

அலுவலகத்தில் இருக்கும்போது, நான்கைந்து தேநீர் குடித்தும் உடல் சோர்வாகவே இருக்கிறதா? வேலையில் நாட்டமில்லாமல் ஏனோதானோவென்று வேலை செய்கிறீர்களா? அந்த சமயங்களில் இந்த குறிப்பு உங்களுக்கு கை கொடுக்கும்.

அந்த சமயங்களில் நன்றாக இரு காதுகளையும் தேயுங்கள். தேய்த்தபின், காது மடல்களை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் அழுத்துங்கள்.

இதனால் எல்லா நரம்புகளும் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் மூளைக்கு வேகமாக பாயும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் 1 நிமிடத்திற்குள் சுறுசுறுப்பாக வேலையில் மூழ்கிவிடுவீர்கள். முயன்று பாருங்கள்.

Health tricks to keep you comfortable and fit

எனர்ஜி ட்ரிங்க்- வேண்டவே வேண்டாம்

நீங்கள் சோர்வாக இருக்கும்போது, எனர்ஜி ட்ரிங் குடித்தால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?. அது தவறு ஏனெனில் அதில் காபியைவிட 5 மடங்கு காஃபின் உள்ளது.

மேலும் அந்த நிமிடங்களில் சுறுசுறுப்பாக இருப்பது போலத் தோன்றினாலும், அதன்பிறகு அடிக்கடி உடல் சோர்ந்துவிடும்.

மேலும் அதை குடித்தால், நரம்புத் தளர்ச்சி, இதயத் துடிப்பு அதிகரித்தல், மற்றும் படபடப்பு ஆகியவற்றை தரும். ஆகவே எனர்ஜி ட்ரிங்கை தவிருங்கள்.

Health tricks to keep you comfortable and fit

விஸ்கி அல்லது ஒயின் :

தொண்டையில் தொற்று ஏற்பட்டு, கரகரப்பு, வீக்கம் மற்றும் டான்ஸிலிடிஸ் ஏற்பட்டுள்ளதா? இந்த பிரச்சனை வரும்போது கூடவே காய்ச்சல் தலைவலியும் ஏற்படும்.

Health tricks to keep you comfortable and fit

அந்த மாதிரி சமயங்களில் ஒயின் அல்லது விஸ்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சுடு நீரை கலந்து, தொண்டையில் படுமாறு கொப்பளித்தால், சீக்கிரம் சரியாகிவிடும்.

சூயிங் கம் மெல்லுங்கள் :

எப்போதும் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறீர்களா? இதனால் உடல் எடை கூடி, உங்கள் நண்பர்களின் விமர்சனத்துக்கும் ஆளாகிறீர்களா? உங்கள் மனதையும் கட்டுப்படுத்தமுடியவில்லை. வாயையும் கட்டுப்படுத்தமுடியவில்லை என்ற கவலையை விட்டுத் தள்ளுங்கள்.

தினமும் ஒரு புதினா கலந்த சூயிங்க் கம்மை மென்று கொண்டிருங்கள். இது உங்கள் பசியை நீண்ட நேரம் தாக்குபிடிக்க வைக்கும். பசியை ஏற்படுத்தாது. இதனால் உடல் எடை மெல்ல குறையும்.

English summary

Health tricks to keep you comfortable and fit

வாழ்க்கையில் சில சமயங்களில் போரடிப்பது போலத் தோன்றும். காரணம் ஒரே மாதிரியான வேலை, ஒரே வாழ்க்கை முறை என திரும்ப திரும்ப ஒரே விஷயங்களை பண்ணும்போது இது போன்ற எண்ணங்கள் தவிர்க்க முடியாதுதான். அந்த சமயங்களில் மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்யலாம். இதை கவனியுங்கள்.
Subscribe Newsletter