For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் பிடிக்கும் ஜலதோஷத்தில் இருந்து விடுபட சில டிப்ஸ்...

By Maha
|

உங்களுக்கு வெயில் காலத்தில் திடீரென்று மூக்கு ஒழுகுகிறதா மற்றும் மூக்கடைப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் இது கோடைக்கால ஜலதோஷம். திடீரென்று காலநிலை மாறியதால், உடலின் வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி குறைந்து அதனால் சளி, இருமல் போன்றவற்றை உண்டாக்கும்.

இதனைத் தடுக்க கோடையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். குறிப்பா வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, கோடைக்கால நோய்த்தொற்றுகளில் இருந்து விலகி இருக்கலாம்.

இங்கு கோடையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளநீர்

இளநீர்

இளநீர் உடலுக்கு குளிர்ச்சியானது. குறிப்பாக கோடையில் இதனை பருகுவது என்பது மிகவும் நல்லது. அதுவும் தினமும் 2 இளநீர் பருகி வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோடையில் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுதலைத் தரும்.

ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்

ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்

ரோஸ் வாட்டரை தினமும் இருமுறை எடுத்து வந்தால், உடலின் அதிகப்படியான வெப்பம் குறையும். அதிலும் ரோஸ் வாட்டருடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகினால், உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

பழச்சாறுகளை கோடையில் அதிகம் பருக வேண்டும். இது வைரஸ் தாக்குதல்களைத் தடுக்கும். அதிலும் வைட்டமின் சி நிறைந்த பழங்களான அன்னாசி, ஆரஞ்சு, தர்பூசணி போன்றவைகளை ஜூஸ் போட்டு பருகி வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும், நோய்களும் வராமல் இருக்கும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்கும் போது, உடலின் வலிமை அதிகரிப்பதோடு, நார்ச்சத்து உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளான தானியங்கள் மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவை எளிதில் செரிமானமாகும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

கோடையில் உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட, 2 கப் க்ரீன் டீ பருகவும். இதனால் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். வேண்டுமானால் க்ரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகுங்கள். இதனால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஏ உணவுகள்

வைட்டமின் ஏ உணவுகள்

வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்களான குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ், மீன், முட்டை போன்றவற்றை கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், உடலைத் தாக்கிய நோய்க்கிருமிகள் அழிக்கப்படும். மேலும் இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

கோடையில் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகரிக்கும். எனவே பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கேல் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலும் சுத்தமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Rid of That Summer Cold In 7 Magical Ways

If you want to get rid of the summer flu (cold), then here are some of the best ways to do so. Turn to these remedies to serve you well.
Desktop Bottom Promotion