ஆடாமல் அசையாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இவற்றை பின்பற்றுங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமன் ஐ.டி வாசிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய தலைவலி. நாள் முழுக்க பல மணிநேரம் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் அனைவருக்கும் பரிசாக அளிக்கப்படுகிறது உடல் பருமன். இது, நீரழிவை ஏற்படுத்துகிறது, இதய நலனை சீர்குலைத்துவிடுகிறது, ஆண்மை குறைய பெரும் காரணியாக இருக்கிறது என பலர் கூறுவது உண்மை தான்.

ஆனால், சமீபத்திய ஆய்வில் உடல் பருமன் 9000 விதமான விந்தணு மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் பிறக்கப் போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி கூட பாதிக்கப்படலாம் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், இதை உடல் எடையை குறைப்பதால் தீர்வுக் காண முடியும் என்றும் கூறியுள்ளனர்.

உடல் எடைய குறைக்க மூச்சிரைக்க ஓட வேண்டும் என்றில்லை. சில அன்றாட செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தாலே சீரிய முறையில் உடல் எடையை குறைக்க முடியும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீழே உட்கார்ந்து உண்ணும் பழக்கம்

கீழே உட்கார்ந்து உண்ணும் பழக்கம்

மேசையில் அமர்ந்து உண்பது, நின்றப்படியே உண்பது போன்றவற்றை தவிர்த்து, தரையில் அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், அதிகமான அளவு உணவு உண்ணும் முறை குறையும். மேலும், நீங்கள் அளவுக்கு மீறி சாப்பிடும் போது, வயிற்றில் ஏற்படும் அழுத்தம், உங்களுக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கும். இதனால் உடல் எடை குறைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

சிறிய தட்டு

சிறிய தட்டு

சிறிதளவு உணவுண்ணும் பழக்கத்தை கடைப்பிடிக்க, சிறிய தட்டுகளை பயன்படுத்துங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். க்ரோனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த முறையை பயன்படுத்துவதால் 4 - 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும் என கூறுகிறார்கள்.

16 அவுன்ஸ் நீர்

16 அவுன்ஸ் நீர்

உணவருந்துவதற்கு அரை மணிநேரம் முன்பு 16 அவுன்ஸ் நீர் பருகுவதால் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். இது உணவருந்தும் வேளையில் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்க்க பயனைளிக்கிறது.

7 மணிநேர உறக்கம்

7 மணிநேர உறக்கம்

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வில் 7 மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் நபர்களுக்கு உடல் எடை பரவலாக அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. நன்கு உறங்கும் நபர்களுக்கு 20% அதிகமாக கலோரிகள் உடலில் கரைக்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மொபைல் விளையாட்டு

மொபைல் விளையாட்டு

தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது மொபைல் விளையாட்டுகளும் கூட. உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் கேண்டி க்ரஷ், கிளாஸ் ஆப் கிளான்ஸ் போன்ற பல செயிலி விளையாட்டுகளை விளையாடும் முறையும் உங்கள் உடல் வேலைகளை குறைத்து ஒரே இடத்தில் மந்தமாக உட்கார செய்துவிடுகிறது. எனவே, முடிந்த வரை இதைவிட்டு வெளியே வர முயலுங்கள்.

லிப்ட் வேண்டாம்

லிப்ட் வேண்டாம்

அவசர நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் லிப்ட்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். இது உடலில் கலோரிகள் கொழுப்பாக மாறாமல், கரைக்க உதவும்.

மாற்று உணவுகள்

மாற்று உணவுகள்

இடைவேளை நேரங்களில் நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட் போன்றவற்றை உண்பதற்கு பதிலாக, நட்ஸ், உலர் திராட்சை போன்ற ஆரோக்கிய உணவுகளை சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Ways To Lose Weight Without Even Trying

There are 7 Ways To Lose Weight Without Even Trying