உங்களுக்கு வயிறு உப்புசமாக இருக்கா? அதை உடனே சரிசெய்ய இதோ சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

வயிறு உப்புசம் என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை. இது அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொண்டாலோ, அல்லது வயிறு நிறைய நல்ல சுவையான உணவுகளை உட்கொண்டாலோ ஏற்படும். இப்படி அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் நிறைய உணவுகளை உட்கொண்டால், அதனால் உணவுகளை செரிக்க முடியாமல் செரிமான பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக வயிறு உப்புசம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி, வயிற்றில் நிறைய வாய்வு நுழைந்து, ஓர் அசௌகரிய உணர்வை ஏற்படுத்தி, உடல்நலம் சரியில்லாதவாறு மந்த நிலையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவை நன்கு மென்று விழுங்குதல்

உணவை நன்கு மென்று விழுங்குதல்

உண்ணும் உணவை நன்கு மென்று விழுங்குவதால், உணவு எளிதில் செரிமானமாகும். மேலும் சாப்பிடும் போது மிகவும் வேகமாக சாப்பிடுவதால், வாயின் வழியே காற்று நுழைந்து வயிற்றை அடைந்துவிடும். இதன் காரணமாக வாய்வுத் தொல்லையை சந்திக்கக்கூடும். எனவே எப்போதும் உணவை மெதுவாக சாப்பிடுவதோடு, நன்கு மென்று விழுங்க வேண்டும்.

சுடுநீர்

சுடுநீர்

வயிறு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தினால், ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்து வாருங்கள். இதனால் வயிற்று உப்புசம் உடனே நீங்கும்.

தயிர்

தயிர்

தினமும் தயிரை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் தயிரில் வெள்ளரிக்காய், கொத்தமல்லி சேர்த்து உட்கொண்டு வந்தால், வயிறு உப்புசம் உடனே நீங்கும்.

உப்பைக் குறைக்கவும்

உப்பைக் குறைக்கவும்

உங்களுக்கு அடிக்கடி வயிறு உப்புசத்துடன் இருந்தால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உப்பானது வயிற்றில் தேவையில்லாத வாயுக்களை உருவாக்கும்.

இஞ்சி

இஞ்சி

நீங்கள் வயிற்று உப்புசத்தால் அதிக கஷ்டப்படுபவராயின், ஒவ்வொரு முறை உணவு உட்கொள்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பும் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று சாற்றினை விழுங்குங்கள். இதனால் உணவின் மூலம் வயிறு உப்புசமாவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Easy Ways To Get Rid Of Bloated Stomach Instantly!

Here are some easy ways to get rid of bloated stomach instantly. Read on to know more.
Subscribe Newsletter