Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
கோடையில் சந்திக்கும் கண் பிரச்சனைகளும்.. அதை தவிர்க்கும் வழிகளும்...
Summer Eye Care In Tamil: கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் நமது சருமம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்படுகின்றன. வெயில் காலத்தில் எந்த பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடாதெனில், நீர் அதிகம் பருக வேண்டும், வெளியே தேவையின்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும், வெப்ப மயக்கத்தைத் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முக்கியமாக கோடையில் கண் தொடர்பான பிரச்சனைகளை நிறைய பேர் சந்திக்கக்கூடும். ஏனெனில் சூரியக்கதிர்களில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் எப்படி சருமத்தை சேதப்படுத்துகிறதோ, அதேப் போல் அதிகப்படியான வெப்பம் மற்றும் சூரியக்கதிர்கள் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் விளைவாகவே கோடையில் பலரும் கண் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். உங்களுக்கு கோடையில் எந்த மாதிரியான கண் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் மற்றும் அவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.
கண் வறட்சி
கண் வறட்சி என்பது ஒரு பருவகால நிலை அல்ல. இது கோடைக்காலத்திலும் ஏற்படலாம். ஏனெனில் கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால், கண்களில் உள்ள நீர் படலம் ஆவியாகிறது. இப்படி கண்களில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாத போது கண் வறட்சி ஏற்படுகிறது. இந்த கண் வறட்சி அதிகரிக்கும் போது, அது கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பை உண்டாக்கும்.
கோடைக்காலத்தில் கண் வறட்சியைத் தவிர்க்க வேண்டுமானால், நீர் அதிகம் குடிக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் சன் கிளாஸ் அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.
விழி வெண்படல அழற்சி (Conjunctivitis)
மிகவும் பொதுவான ஒரு கண் நோய் தான் விழி வெண்படல அழற்சி. இதை மெட்ராஸ் ஐ என்று அழைப்பதுண்டு. இந்த அழற்சியானது ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் ஏற்படலாம். கண் அரிப்பு, கண் சிவத்தல் மற்றும் கண்களில் இருந்து நீர் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படலாம்.
ஆனால் கோடைக்காலத்தில் இந்த தொற்றுகளை உண்டாக்கும் கிருமிகள் வேகமாக வளர்ச்சியடைவதால், கோடையில் நிறைய பேர் இத்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இதைத் தவிர்க்க சிறந்த வழி தொற்று உள்ளோரிடம் இருந்து விலகி இருப்பதோடு, கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதைத் தவிர்ப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கண் கட்டி (Stye)
ஸ்டை அல்லது கண் கட்டி, கண்களின் இமைகளில் பாக்டீரியல் தொற்றுக்களால் ஏற்படும் வீக்கம்/கட்டியாகும். இது மிகுந்த வலி மற்றும் கண்களை சிவந்து போகச் செய்யும். இந்த கண் கண் கட்டி வெளியே வெயிலில் அதிகம் விளையாடும் குழந்தைகளுக்கு அல்லது வெளியே சுற்றுபவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. கண் கட்டி இருக்கும் போது கண்களை கடுமையாக தேய்த்தால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
அழற்சிகள்
கோடையில் பலவிதமான அழற்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதில் சில வகையான அழற்சி கண்களை பாதிக்கும். இப்படி கண்களில் அழற்சி ஏற்பட காரணம் அதிகப்படியான வெப்பம், மாசு அளவு, தூசி மற்றும் ஈரப்பதம் போன்றவை. பொதுவாக கண்களில் அழற்சி ஏற்பட்டால், அது அரிப்பு, கண்கள் சிவந்து போதல், வீக்கம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
கோடையில் கண்களில் ஏற்படும் அழற்சியைத் தடுப்பது எப்படி?
கோடைக்காலத்தில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொண்டு வந்தால், கண்களில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கலாம். அவை:
* தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும்
* கண்களை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* கைக்குட்டை, டிஷ்யூ, டவல் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
* வெளியே செல்லும் போது கண்ணாடியை அணிய மறவாதீர்கள்.
மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். கண்களில் சந்திக்கும் பிரச்சனைகள் நீண்ட நாட்களாக சரியாகாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக கண் விஷயத்தில் மருத்துவரின் அனுமதியின்றி கண்ட மருந்துகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


