Latest Updates
-
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்
தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க.. உடல் எடை மடமடன்னு குறையும்.. ட்ரை பண்ணி பாருங்க..
Weight Loss Tips In Tamil: தற்போது உடல் பருமன் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க பலர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் இருக்கிறார்கள். அப்படி டயட்டில் இருக்கும் போது, முதலில் தவிர்க்க வேண்டிய ஒரு உணவுப் பொருளாக கூறப்படுவது சர்க்கரை தான். வேண்டுமானால் இந்த சர்க்கரைக்கு மாற்றாக தேனை எடுக்கலாம்.
ஏனெனில் தேன் இயற்கை நமக்கு தந்த ஒரு பரிசு. தேனில் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் மனிதன் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. தேனை நாம் பலவாறு பயன்படுத்தலாம். அதில் தினசரி உணவில் சர்க்கரைக்கு மாற்றாக தேனை பயன்படுத்தலாம். முக்கியமாக நாட்டு மருத்துவத்தில் மருந்துகளை உட்கொள்ள தேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேனிலும் சர்க்கரை உள்ளன. ஆனால் அத்துடன் நன்மை விளைவிக்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ன. ஆய்வு ஒன்றில், ஃபுருக்டோஸ் நிறைந்த தேனை உட்கொண்ட விளையாட்டு வீரர்களின் உடலில் உள்ள கொழுப்புக்கள் எரிக்கப்படுவதோடு, உடலின் ஸ்டாமினா அதிகரிப்பது தெரிய வந்தது. தேனானது கல்லீரலில் குளுக்கோஸை உற்பத்தி செய்ய ஒரு எரிபொருளாக செயல்படுகிறது. இந்த குளுக்கோஸ் மூளையில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, கொழுப்புக்களை எரிக்கும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன மற்றும் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதை நாம் அனைவருமே கேள்விபட்டிருப்போம். ஆனால் தேனை இன்னும் பல வழிகளில் உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் சிறப்பாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும். இப்போது அந்த வழிகளைக் காண்போம். அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து குடியுங்கள்.

1. தேன் மற்றும் எலுமிச்சை
தேவையான பொருட்கள்:
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 300 மிலி
* ப்ளாக் சால்ட் - சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் சூடானதும், அதை இறக்க வேண்டும் (நீரை கொதிக்க வைக்க வேண்டாம்.).
* பின் அந்நீரை சற்று குளிர வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

2. தேன் மற்றும் பால்
தேவையான பொருட்கள்:
* பால் - 1 டம்ளர்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பால் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, அதில் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த பாலை குடித்து வருவதன் மூலம், பாலில் உள்ள புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும், தொப்பையைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

3. சுடுநீரில் தேன்
எளிய முறையில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், சுடுநீரில் தேன் கலந்து குடிக்கலாம். அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒருவர் தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் எடை கணிசமாக குறைவதைக் காணலாம்.

4. க்ரீன் டீயில் தேன்
நீங்கள் டீ பிரியர் என்றால், உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ பெரிதும் உதவி புரியும். அதுவும் நீங்கள் தயாரிக்கும் க்ரீன் டீயில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். பல ஆய்வுகளில் க்ரீன் டீயை தொடர்ந்து குடித்து வருவது உடல் எடையைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் தேன் சேர்த்து குடிக்கும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை மேலும் குறைக்க உதவி புரியும்.

5. பட்டை மற்றும் தேன்
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1/2 கப்
* பட்டை - 1 துண்டு
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பட்டையைப் போட்டு இறக்கி, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டி, அத்துடன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த டீயை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும்.

குறிப்பு
உடல் எடையைக் குறைக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளும் போது, ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டும் வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
இந்த கட்டுரையின் முன்னுரையில் முதல் பத்தி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் தலைப்பு, போட்டோ போன்றவையும் மாற்றப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
