Latest Updates
-
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும்
Pori Vadai Recipe in Tamil: ஆயுதபூஜைக்கு அனைவரின் வீடுகளிலும் நிச்சயம் பாக்கெட் பாக்கெட்டாக பொரி வாங்கியிருப்போம். அந்த பொரி வாரக்கணக்கில் சாப்பிடாமல் அப்படியே இருந்து இறுதியில் குப்பைத்தொட்டிக்கு சென்றுவிடும். இந்த வருடமும் அந்த தப்பை செய்யாதீர்கள். உங்கள் வீட்டில் பொரி மீதமிருந்தால் அதை வைத்து மொறுமொறுப்பான மெது வடை செய்யுங்க.

பொதுவாக உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பை வைத்துதான் வடை செய்வோம், ஆனால் பொரியை வைத்தும் சூப்பரான வடை செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இந்த வடை செய்ய பொரியுடன் தயிரும், ரவையும் இருந்தால் போதுமானது. இந்த பொரி மெதுவடை செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் சுவையானதும் கூட.
உங்களுக்கு பொரியை வைத்து எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொரி - 2 கப்
தயிர் - 1 கப்
ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச் அளவு
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பொரியை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
- பின் சிறிதளவு தண்ணீரில் 2 நிமிடங்களுக்கு பொரியை ஊற விடவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கருப்பு நிற பூஞ்சை இல்லாமல் கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
- அதை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
- இஞ்சியின் மேற்பகுதியில் மண் இல்லாமல் கழுவி சுத்தம் செய்து
கொள்ளுங்கள்.
- இஞ்சியின் தோலை நீக்கி விட்டு, நன்றாக துருவி எடுத்து
கொள்ளுங்கள்.
- பச்சை மிளகாயின் காம்பை நீக்கி விட்டு கழுவி பொடிப்பொடியாக நறுக்கி
கொள்ளுங்கள்.
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- பின் மேல்பகுதியில் இருக்கும் இலைகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இப்படி செய்யும் போது இலைகளில் இருக்கும் மண் அடிப்பகுதியில் தங்கி விடும். இதே போல் கீரைகளையும் நீங்கள் சுத்தம் செய்யலாம்.
- ஊற வைத்த பொரியை நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்து பிழிந்த பொரியை சேர்த்து, அதனுடன் தயிர் சேர்த்து கொள்ளவும்.
- அதில் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சேர்க்கவும்.
- அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் ரவையை சேர்க்கவும்.
- அதனுடன் துருவி வைத்த இஞ்சி, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
- கடைசியாக சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ளவும்.
- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும், வடையை ஒவ்வொன்றாக சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- வறுத்த பின் டிஸ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை உறிஞ்சி விட்டு சூடான டீ அல்லது காபியுடன் சாப்பிடவும்



Click it and Unblock the Notifications
