Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
பெரும்பாலான பெண்கள் விரும்பி அணியும் நகைகளில் ஒன்று கொலுசாகும். நகையே பிடிக்காத பெண்கள் கூட வெள்ளிக் கொலுசை விரும்பி அணிவார்கள். கொலுசு மட்டுமின்றி செயின், மோதிரம் என பல வெள்ளி ஆபரணங்களை நாம் அணிகிறோம். ஆனால் தினமும் வெள்ளி ஆபரணங்களை அணியும்போது, அவை மிக விரைவாகக் கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன.

கொலுசுகள் தங்கள் பொலிவை முழுமையாக இழந்துவிடும்போது, அவை பார்ப்பதற்கு மிகவும் மோசமாகத் தெரிந்துவிடும். உங்கள் சருமத்துடன் தொடர்பில் இருக்கும்போது, இந்தக் கொலுசுகள் வியர்வை, தூசி, ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. இந்த காரணிகளால் வெள்ளி படிப்படியாகக் கருமையாகி, அதன் இயல்பான பொலிவை இழந்துவிடுகிறது.
வெள்ளி கொலுசுகளைச் சுத்தம் செய்வது எப்படி?
கொலுசுகள் கருத்து போகும் ஒவ்வொரு முறையும் கொலுசுகளைச் சுத்தம் செய்ய நீங்கள் நகைக்கடைக்குச் செல்ல முடியாது. அப்படி செய்தால் கொலுசின் விலையை விட அதை சுத்தம் செய்வதற்கான செலவு அதிகமாகிவிடும். வீட்டிலுள்ள எளிய பொருட்களை வைத்தே நீங்களே அவற்றை எளிதாக சுத்தம் செய்துகொள்ளலாம். மற்ற நகைகளை விடக் கொலுசுகள் விரைவாக அழுக்கடைந்து விடுகின்றன. ஏனெனில், அவை எப்போதும் உங்கள் பாதங்களுடன் உரசிக்கொண்டே இருக்கின்றன. வியர்வை, உடலில் சுரக்கும் எண்ணெய், ஈரப்பதம், வாசனைத் திரவியங்கள், லோஷன்கள் மற்றும் தூசி போன்றவை கொலுசின் நிறம் மங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி பொலிவை இழந்த உங்கள் பழைய கொலுசுகளை மீண்டும் பளபளக்கச் செய்யலாம். பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியான விழுதாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை கொலுசுகளின் மீது தடவி, ஒரு துணியால் மென்மையாகத் தேய்க்கவும். தேய்க்கும்போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இறுதியாக, வெதுவெதுப்பான நீரில் கொலுசுகளைக் கழுவவும். பிறகு, மென்மையான துணியைக் கொண்டு உடனடியாகத் துடைத்து உலர்த்த வேண்டும். கொலுசுகளில் நீண்ட நேரம் தண்ணீர் தங்கியிருக்கக்கூடாது.
அலுமினியத் தகடு முறை
வெள்ளிப் பொருட்களைச் சுத்தம் செய்ய நீங்கள் அலுமினியத் தகடு (aluminium foil) முறையைப் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் அலுமினியத் தகடு ஒன்றை நன்றாக விரித்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். பிறகு, சூடான நீரை அந்தக் கிண்ணத்தில் ஊற்றவும். இப்போது உங்கள் வெள்ளி கொலுசு அலல்து ஆபரணங்களை அந்த சூடான நீரில் போடவும். அவை அலுமினியத் தகடுடன் வினைபுரியும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு கொலுசுகளை வெளியே எடுத்து, சுத்தமான நீரால் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு நன்கு துடைத்து உலர்த்தினால் கொலுசு புதிது போல மாறிவிடும்.
சோப்பு நீர்
உங்கள் கொலுசுகள் பொலிவை இழந்திருந்தால், சோப்பு கலந்த நீரைப் பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் சிறிது பாத்திரம் கழுவும் திரவத்தைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கரைசலில் கொலுசுகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் கொலுசை பழைய பல் துலக்கும் பிரஷ்ஷைப் பயன்படுத்தி, மென்மையாகத் தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் நன்கு கழுவவும். இறுதியாக மென்மையான துணியைப் பயன்படுத்தி, கொலுசுகளை முழுமையாகத் துடைத்து உலர்த்தவும்.
வெள்ளி மெருகூட்டும் துணி
உங்கள் கொலுசுகளை தண்ணீர் அல்லது எந்தவித திரவமும் இல்லாமல் சுத்தம் செய்ய விரும்பினால், வெள்ளி மெருகூட்டும் துணியைப் (silver polishing cloth) பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். கொலுசுகளின் மேற்பரப்பில் இந்தத் துணியைக் கொண்டு மெதுவாகத் தேய்க்கவும். கருமையான அல்லது மங்கலான கறைகள் உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். லேசான கறைகள் மற்றும் அன்றாட பயன்பாட்டால் ஏற்படும் அழுக்குகளை நீக்க இந்த முறை பொருத்தமானது. எளிதாகவும் விரைவாகவும் சுத்தம் செய்வதற்கு, இந்தத் துணியை உங்கள் எப்போதும் நகைப் பெட்டியிலேயே வைத்திருக்கவும்.



Click it and Unblock the Notifications

