Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது!
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்!
Contact Lens Safety Month: இன்றைய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் காண்டாக்ட் லென்ஸ் என்பது ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட் மட்டுமல்ல, மூக்குக் கண்ணாடியின் பாரத்தை இறக்கி வைக்கும் வரப்பிரசாதம். ஆனால், கருவிழியின் மேலேயே நேராக ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த மெல்லிய லென்ஸை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் என்பதில் சின்ன தப்பு நடந்தாலும் அவ்வளவுதான், அது நம்மைப் படாதபாடு படுத்திவிடும்.

காண்டாக்ட் லென்ஸ்கள் நம்முடைய பார்வைத் திறனை எளிதாக்கினாலும், அவற்றைக் கவனமாகக் கையாள்வது மிகவும் முக்கியம். லென்ஸ் நேரடியாகக் கண்ணின் மேற்பரப்பில் பொருந்துவதால், அதை ஒழுங்காகப் பராமரிக்காமல் விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி நீண்ட நேரம் அணிந்தாலோ, அது கண் எரிச்சலுக்கோ அல்லது தீவிரத் தொற்றுக்கோ (Infection) காரணமாகிவிடும்.
ஆரோக்கியமான காண்டாக்ட் லென்ஸ் பழக்கங்களை ஊக்குவிக்கவும், சரியான லென்ஸ் பராமரிப்பு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி அளிக்கவும் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் காண்டாக்ட் லென்ஸ் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது.
நீங்க கண்ணுக்கு லென்ஸ் போடுறவங்களா? அப்போ சென்னை டிடிகே சாலையில் உள்ள மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் முன்னணி கண் மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்பிரமணியன் தரும் இந்த முக்கிய டிப்ஸ்களை மறக்காம நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
லென்ஸ் பயன்படுத்துபவர்கள் செய்யக்கூடாத தவறுகள்
* கையை நன்றாக கழுவாமல் தொடாதீர்கள்
லென்ஸைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவி, சுத்தமான உலர்ந்த துண்டால் துடைக்க வேண்டும். அழுக்கு அல்லது கிருமிகள் கண்களுக்குப் பரவுவதைத் தவிர்க்க பஞ்சு அல்லது நூல் பிரியாத துணிகளைப் பயன்படுத்துங்கள்.
* தண்ணீரில் மட்டும் கழுவாதீர்கள்
பலர் செய்யும் பெரிய தவறு இதுதான். லென்ஸ் சொல்யூஷன் தீர்ந்து போய்விட்டது என்று குழாய் தண்ணீரிலோ, பாட்டில் தண்ணீரிலோ அல்லது எச்சிலையோ தொட்டு லென்ஸைக் கழுவவே கூடாது. தண்ணீரில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் கண்ணை மொத்தமாகப் பாழாக்கிவிடும்.
* தூங்கும் போது 'நோ'
டாக்டரின் பரிந்துரை இல்லாமல், லென்ஸை மாட்டிக் கொண்டே தூங்கக் கூடாது. குளிக்கும் போதோ, ஸ்விம்மிங் பூலில் இறங்கும் போதோ, வெந்நீர் தொட்டியிலோ (Hot tub) இருக்கும் போது லென்ஸைக் கழற்றி வைத்து விடுவதுதான் புத்திசாலித்தனம். ஒருவேளை தண்ணீர் கண்களில் பட்டால் உடனடியாக லென்ஸை அகற்றிவிட வேண்டும்.
* நட்புக்கும் கூட வேண்டாம்
"ப்ரெண்ட் தானே" என்று உங்க லென்ஸை அடுத்தவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. லென்ஸுக்கு ரெஸ்ட் கொடுக்க எப்போதும் பேக்-அப்பாக ஒரு மூக்குக் கண்ணாடியைக் கையில் வைத்து கொள்ளுங்கள்.
லென்ஸை எப்படி பயன்படுத்தினால் நல்லது?
கண் மருத்துவ நிபுணர் பரிந்துரைத்த நேரம் மற்றும் எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற அட்டவணையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய லென்ஸ்களை (Daily disposables) ஒரு முறை பயன்படுத்திய பின் பயன்படுத்த கூடாது; ஒரு முறைக்கு மேலும் பயன்படுத்த கூடிய லென்ஸ்களைத் தரமான லென்ஸ் கரைசலைக் கொண்டு முறையாகப் பராமரிக்க வேண்டும்.
லென்ஸ் வைக்கும் பெட்டியை எப்படி பராமரிப்பது?
லென்ஸ் பெட்டியில் ஏற்கெனவே உள்ள பழைய கரைசலுடன் புதிய கரைசலைச் சேர்க்கக் கூடாது. பழைய கரைசலை அகற்றி, தூய்மைப்படுத்தி, உலர வைக்க வேண்டும். மருத்துவ ஆலோசனையின்படி லென்ஸ் பெட்டியைத் தொடர்ந்து புதியதாக மாற்ற வேண்டும்.
பிற முன்னெச்சரிக்கைகள்
* லென்ஸ்களைப் பிறருடன் பகிரக் கூடாது.
* கிழிந்த, அழுக்கான அல்லது அசௌகரியம் தரும் லென்ஸ்களை அணியக் கூடாது.
* கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் தருணங்களில் பயன்படுத்த எப்போதும் ஒரு மூக்குக் கண்ணாடியை உடன் வைத்திருக்க வேண்டும்.
உடனே லென்ஸைக் கழற்ற வேண்டும் என உணர்த்தும் அபாய அறிகுறிகள் என்னென்ன?
கண்ணில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் அடுத்த நொடியே லென்ஸைக் கழட்டி விட்டு டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
1. கண்ணில் தாங்க முடியாத வலி அல்லது பயங்கரமான உறுத்தல்.
2. கண் சிவந்து மாறுவது, நிற்காமல் கண்ணீர் வருவது.
3. வெளிச்சத்தைப் பார்க்கவே முடியாமல் கண் கூசுவது, பார்வை மங்குவது அல்லது கண்களில் அதிகமா பீளை ஏற்படுவது.
இத்தகைய அறிகுறிகள் தீவிரத் தொற்றின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால், மீண்டும் லென்ஸ்களை அணியாமல் உடனடியாக கண் மருத்துவ நிபுணரை உடனே அணுக வேண்டும். பார்வைத் திறனில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடி அவசர மருத்துவ சிகிச்சை அவசியமாகும்.
சில நேரம் லென்ஸ் வறண்டு போய் கண்ணில் ஒட்டிக்கொள்ளும். லென்ஸ் அப்படி ஒட்டிக்கொண்டால் அவசரப்பட்டு விரலால் பிராண்டவோ, இழுத்துப் பிய்க்கவோ கூடாது! லென்ஸுக்கான 'Rewetting drops' ஊற்றி மெதுவாகக் கண்ணைச் சிமிட்டினால் தானாக வந்துவிடும்; அப்போதும் லென்ஸ் அசையவில்லை எனில் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
லென்ஸை அகற்றி, மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட 'காண்டாக்ட் லென்ஸ் பிரத்யேக சொட்டு மருந்துகளை' (Rewetting drops) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவேளை கண்ணில் ரசாயனம் பட்டால், உடனே நல்ல தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவிவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவை நாடுங்கள் என்று டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்பிரமணியன் கூறினார்.
எனவே பாதுகாப்பாக காண்டாக்ட் லென்ஸ்களை அணியுங்கள். உற்சாகமாக இந்த உலகைப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications


