Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நெல்லிக்காய், கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுவதால் பெறும் டாப் 3 நன்மைகளை பட்டியலிட்ட ஊட்டச்சத்து நிபுணர்!
Amla And Curry Leaves Benefits: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக நாம் ஏராளமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். அதில் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவது, நெல்லிக்காய் சாப்பிடுவது, பச்சையாக பூண்டு சாப்பிடுவது, சீரக நீரைக் குடிப்பது, கறிவேப்பிலை உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஏனெனில் இவை அனைத்திலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. அதுவும் ஒருசில உணவுப் பொருட்களை ஒன்றிணைத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். முக்கியமாக நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை சேர்த்து உட்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

இதுக்குறித்து குளோபல் பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷன் யுகே & தேசிய நீரிழிவு கல்வியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான தீப்சிகா ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கக்கூடிய உணவுகள் மற்றும் உணவுச் சேர்க்கைகள் குறித்து பகிர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் டாப் 3 நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடுவது உடலில் மாயங்களைப் புரியும். நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகிய இரண்டுமே மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தவை." என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் 3 விதமான நன்மைகளைப் பற்றியும் கூறியுள்ளார்.
1. ஆரோக்கியமான தலைமுடி
"நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை சேர்த்து எடுக்கும் போது, அது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதே சமயம் கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் உள்ளது. இவ்விரண்டும் தலைமுடியின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு, நரைமுடி விரைவில் வருவதைத் தடுக்கும்" என்று கூறினார்.
2. சர்க்கரை நோயை தடுக்கும்
"நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து உட்கொள்ளும் போது, அது சர்க்கரை நோயை மாற்றியமைக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும். ஏனெனில் இரண்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பதைக் குறைக்க உதவும்" என்று கூறினார்.
3. இதயத்திற்கு நல்லது
"நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே இவற்றை ஒன்றாக உட்கொள்ளும் போது, அவை உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 நன்மைகளையும் பெற விரும்பினால், நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடுங்கள்." என்று ஊட்டச்சத்து நிபுணர் தீப்சிகா ஜெயின் கூறினார்.
எப்படி உட்கொள்ள வேண்டும்?
கடைசியாக, ஊட்டச்சத்து நிபுணர் நெல்லிக்காயையும், கறிவேப்பிலையையும் எப்படி உட்கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்தார். அது நெல்லிக்காயையும், கறிவேப்பிலையையும் அரைத்து ஒரே ஜூஸாகவோ அல்லது ஏதேனும் விருப்பமான காய்கறி ஜூஸ் உடன் சேர்த்தோ உட்கொள்ளலாம் என்று கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
