Latest Updates
-
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..
உங்க இதய துடிப்பு இப்படி இருக்கா? அப்ப உங்க உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு ஏற்பட வாய்பிருக்காம்...!
Irregular heartbeats In Tamil: நம் உடலிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு இதயம். இதன் செயல்பாடுகள் இல்லாமால் நம்மால் உயிர்வாழ முடியாது. நம் இதயம் ஆரோக்கியமாக துடித்து கொண்டிருக்கும் வரை, நாம் ஆரோக்கியமாக உயிர் வாழலாம். ஆதலால், நம் இதய துடிப்பு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
சில நேரங்களில் ஒழுங்கற்ற இதய துடிப்பு நம்மை ஆபத்தில் ஆழ்த்தும். தூக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் மன அழுத்தம் மிகுந்த தருணங்களில் இதயத் துடிப்பு மற்றும் தாளத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானவை. ஆனால் மற்ற நேரங்களில், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது அரித்மியா இருப்பது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம்.

அரித்மியா, அதன் ஆபத்துகள் மற்றும் அதன் அபாயங்கள் பற்றி அறிந்திருப்பது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள உதவும். மேலும், நீங்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளலாம். ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் என்ன ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அரித்மியா உயிருக்கு ஆபத்தானதா?
அரித்மியா என்பது இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருக்கும் மோசமான சுகாதார நிலையை குறிக்கிறது. சில வகையான அரித்மியாக்கள் பாதிப்பில்லாதவை மற்றும் உடனடி சிகிச்சை தேவையில்லை. ஆனால், மற்றவை திடீர் மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதனால், உடனே மருத்துவரை நாட வேண்டியது முக்கியம். எந்த வகையான அரித்மியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் மற்றும் எந்த வகையான சிகிச்சை தேவை என்பதை இருதயநோய் நிபுணர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள்.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு என்றால் என்ன?
ஒழுங்கற்ற அல்லது அசாதாரணமான இதயத் துடிப்புகள் என்பது இதயத் துடிப்பின் வேகம் அல்லது தாளத்தில் ஏற்படும் பிரச்சனையாகும். இந்த ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள் அரித்மியா என்று அழைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இதயத் துடிப்பு மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ இருக்கும். இது உயிருக்கு ஆபத்தான நிலையையும் குறிக்கிறது.
இதய துடிப்பு
வயது வந்த நபர் ஒருவருக்கு சாதாரண இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. அரித்மியா மயக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிக வியர்வை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். பிறவி நோய்கள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றால் அரித்மியா ஏற்படுகிறது. இருப்பினும், எல்லா ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளுக்கும் இதயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல.
உடல் செயல்பாடுகளின் போது, இதயத் துடிப்பு வேகமடைவது இயல்பானது. உதரணமாக வேகமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, எடை அதிகமான பொருளை தூக்கும்போது, இதய துடிப்பு அதிகரிக்கலாம். இதேபோல், ஒருவர் ஓய்வெடுக்கும்போது அல்லது தூங்கும்போது, மெதுவாக இதயத் துடிப்பு ஏற்படுவது இயல்பானது. ஆனால் அடிக்கடி ஒழுங்கற்ற இதய துடிப்பு இருந்தால், அது உடலுக்கு போதுமான இரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்று அர்த்தம். இது ஆபத்தான நிலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அரித்மியாவின் வகைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, பல்வேறு வகையான அரித்மியாக்கள் உள்ளன. மேலும் இவை ஈசிஜி அல்லது ஹோல்டர் கண்காணிப்பு போன்ற எளிய நோயறிதல் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியும். இந்த அரித்மியாக்கள் அசாதாரண இதய துடிப்பின் தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
சில அசாதாரண தாளங்கள் இதயத்தின் மேல் அறைகளில் உருவாகின்றன. இவை சுப்ரா வென்ட்ரிகுலர் அரித்மியாஸ் என்றும், இதயத்தின் கீழ் அறைகளில் தோன்றுபவை வென்ட்ரிகுலர் அரித்மியா என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்?
அரித்மியாவை மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு பாதிப்பை விளைவிக்கும்.
இது ஒரு அபாயகரமான பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது இதயத் தடுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்துடன், இதயமுடுக்கிகள் அசாதாரணமாக மெதுவாக இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே, உங்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்புகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


