For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...

செப்சிஸ் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது, அதற்கான வீட்டு வைத்திய முறைகள் என்ன என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

செப்சிஸ் என்ற பெயரையே நீங்கள் இப்போது தான் கேட்கிறீங்களா? இது நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை தான். பெயர் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் இது எப்போதிருந்து இந்த நோய் இருக்கிறது என்று தெரிஞ்சா ரொம்ப ஷாக் ஆகிடுவீங்க. சரி வாங்க. அது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

World Sepsis Day

நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செப்சிஸ் என்றால் என்ன?

செப்சிஸ் என்றால் என்ன?

நம்முடைய உடலில் உண்டாகின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் நம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைவது தான். சரி அந்த நோயெதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெறுமனே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுமட்டுமே உண்மையான காரணமல்ல. நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.

MOST READ: சைனஸ் அழற்சியில மீள முடியலையா? இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...

வரலாறு

வரலாறு

செப்சிஸ் என்பது இன்றைக்கு நேற்றைக்கு ஏதோ புதிதாக முளைத்திருக்கிற பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்க்குறியை முதன்முதலாக, 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தான் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த செப்சிஸ் என்னும் சொல்லானது கிரேக்கத்தில் இருந்து விலங்குகளின் சிதைவால் ஏற்பட்டது என்ற பொருளில் இருந்து வருவிக்கப்பட்டுள்ளது.

கி.மு 400க்கு முன்பாகவே ஹிப்போகிரேட்டஸ் இந்த செப்சிஸ் என்னும் நோய்க்குறியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடந்த 2500 ஆண்டுகளாகவே இந்த சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. பல நாடுகளில் இந்த சொல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

செப்சிஸ் என்பது என்ன?

செப்சிஸ் என்பது என்ன?

செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பது ரத்தத்தில் கலக்கும் பாக்டீரியா கிருமி தொற்றாகும். பாக்டீரியா தொற்றுக்கள் பல வகையுண்டு. இதில் மிகவும் ஆபத்தான ஒன்று தான் செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பதாகும். இந்த பாக்டீரியா சாதாரணமாக உடலில் இருப்பதை விடவும் ரத்தத்தில் கலக்கும் போது அது அதிகமாகப் பெருகிக் கொண்டே போகும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

செப்சிஸ் பாக்டீரியா உடலில் சென்று ரத்தத்தில் கலந்து பெருகிக் கொண்டே போகும்போது, உடலில் வீக்கம் ஏற்பட்டு, உடலின் சராசரி ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே போகும்.

செப்சிஸ் என்னும் செப்டிசீமியா சிறுநீரகப் பாதை மற்றும் நுரையீரல் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக அளவில் காய்ச்சல் ஏற்படும்.

MOST READ: ஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா?... இதோ இவங்க அது...

சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள்

இந்த பாக்டீரியாவின் தாக்கத்தைக் குறைக்க வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த பாக்டீரியாவின் மூலமாக ஏற்படுகின்ற ரத்த அழுத்தக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு திரவ வடிவில் மருந்துகள் செலுத்தி, கையில் ஊசி மூலம் செலுத்தப்படும்.

இந்த பாக்டீரியாத் தாக்கத்தால் மூச்சுத் திணறல் கூடு ஏற்படும். அந்த மூச்சுத்திணறலை சரிசெய்ய வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். இந்த பாக்டீரியா தாக்கத்தின் தொடக்க கால அறிகுறியே கட்டுப்படுத்த முடியாத அளவு காய்ச்சல் ஏற்படுவது தான்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கூட இந்த செப்சிஸ் பாக்டீரியா ரத்தத்தில் பரவியதால் தான் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் குறிப்பட்டு இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: treatment symptoms how to
English summary

World Sepsis Day: Causes, Symptoms, Effects and Treatment

The first origin of the term Sepsis appeared in Egyptian papyri which was 3500 years ago. The origin of the term Sepsis [σηψις] was first attributed by the Greek for decomposition of animal. It was used in this context before Hippocrates around 400 BC.
Desktop Bottom Promotion