For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலம் கழிக்கும்போது சிலசமயம் வெள்ளையாக இருப்பது ஏன் தெரியுமா? அது எதன் அறிகுறி?

மலம் கழிக்கும்போது சில சமயம் வெள்ளையாக இருப்பது எதனால் என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

|

மலம் கழிக்கும் போது வெள்ளையாக ஏன் இருக்கிறது? அதற்கான காரணம் தெரியுமா?.
மலத்தின் நிறத்தை வைத்தே நமது உடல் ஆரோக்கியத்தை சொல்ல முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். சில நேரங்களில் மலத்தில் வெண்மை நிறப் பொருட்கள் காணப்படும். இது ஒரு தீவிர பாதிப்பை குறிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

White Stuff in Poop

இப்படி வெள்ளை நிறப் பொருட்கள் ஏன் காணப்படுகிறது அதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் கூறுகிறார்கள் வாங்க அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள் - விளக்கம் - விளைவுகள்

காரணங்கள் - விளக்கம் - விளைவுகள்

சீரணிக்காத உணவு மற்றும் மருந்துகள் - சில உணவுப் பொருட்கள் சீரணிக்க சிரமப்படும் இதனால் வெள்ளை நிறத்தில் மலம் வெளியாகும் - லாக்டோஸ் அழற்சி, கொழுப்பு

சீரணமின்மை, மாத்திரை மருந்துகள்

பித்த நீர் சுரப்பு குறைவு - பித்த நீர் சுரப்பு மற்றும் உற்பத்தி குறைதல் - கல்லீரல் ஈரல் அழற்சி, கூல்லெஸ்டிடிஸ், ஹெபடைடிஸ், கட்டிகள், பித்தநீர் திசுக்களில் அடைப்பு

மருந்துகள் - சில மருந்துகளில் உள்ள பொருட்கள் மலத்தில் நிறத்தை உண்டாக்குகிறத- அதிகளவு எரித்ரோமைசின், ஆன்டி பாயோடிக்ஸ், ஆன்டாஸிட்

மியூக்காய்டு மலம் - குடல் வால் உட்புற சுவற்றில் ஏற்படும் அழற்சி, எரிச்சல் - கோலிடிஸ்,

கிரோன்'ஸ் நோய் அல்லது ஐபிஎஸ்

பூஞ்சை தொற்று - கேண்டிடா செல்கள் மற்றும் பூஞ்சைகள் இருப்பது மலத்தில் வெள்ளை நிறமுள்ள புள்ளிகள் போல தோன்றுகின்றன-கீமோதெரபி, எய்ட்ஸ் அல்லது கதிரியக்க

பாராசிட்டிக் தொற்று - குடல் புழுக்கள், ஒட்டுண்ணிகள் காணப்படுதல் - நாடாப் புழு போன்றவை

MOST READ: மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்...

 சீரணிக்காத உணவு மற்றும் மருந்துகள்

சீரணிக்காத உணவு மற்றும் மருந்துகள்

சில நேரங்களில் மலம் வெள்ளையாக இருக்க சீரணிக்காத உணவு மற்றும் மருந்துகள் காரணபாகின்றன. பழங்களில் உள்ள கொட்டைகள் போன்றவை சீரணிக்க சிரமப்படுவதால் இப்படி ஏற்படலாம். மருந்துகள், மாத்திரைகள் கூட இந்த விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்ற ஆன்டாஸிட் மலத்தில் வெள்ளை நிறத்தை ஏற்படுத்துகின்றன.

 பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட அழற்சி உள்ளவர்களுக்கு பால் பொருட்களை சாப்பிடும் போது சரியாக சீரணிக்காமல் மலம் வெள்ளையாக போக வாய்ப்புள்ளது. சீஸ், பட்டர் மற்றும் பால் போன்றவை சீரணிக்க வெகு நேரம் ஆகும்.

சீரணிக்காத கொழுப்பு

சீரணிக்காத கொழுப்பு

சீரணிக்காத கொழுப்பு பொருட்கள் கூட மலத்தில் வெள்ளை நிறத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மலமும் எண்ணெய் பசையுடன் காணப்படும். ஸ்டீரோரியா போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

சில பேருக்கு க்ளூட்டன் வகை உணவுகள் பிடிக்காது. அவை குடலில் அழற்சியை ஏற்படுத்தும். எனவே இந்த அழற்சி யால் உணவில் உள்ள கொழுப்புகளை குடலால் சரியாக உறிஞ்ச இயலாது. இதனால் கொழுப்பு கள் மலத்தின் வழியே வெளியேறி வெள்ளை நிறத்தை ஏற்படுத்துகின்றன.

வீட்டு வைத்தியம்

வீட்டு வைத்தியம்

இப்படி சீரணிக்காமல் உணவுப் பொருட்கள் மலத்தின் வழியாக வெளியேறும் போது நிறைய தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 8-12 அவுன்ஸ் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். 15-20 நிமிடங்கள் சாப்பிடுவதற்கு முன்பு குடியுங்கள்.

இஞ்சி டீ போட்டு குடிக்கலாம். இது உங்கள் சீரண சக்தியை அதிகப்படுத்தும். அதே மாதிரி சாப்பிடுவதற்கு முன் சிறுதளவு இஞ்சியை சாப்பிடலாம். வெதுவெதுப்பான மூலிகை டீ கூட சீரண சக்தியை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மறுபடியும் வெள்ளை நிறத்தில் மலம் கழித்தால் மருத்துவரை அணுகுங்கள்.

பித்த நீர் உற்பத்தி குறைதல்

பித்த நீர் உற்பத்தி குறைதல்

கல்லீரலில் உருவாக்கப்படும் பித்த நீர் தான் மலத்திற்கு ப்ரவுன் நிறத்தை கொடுக்கிறது. இது பித்த பையில் சேமிக்கப்பட்டு கொழுப்புகளை சீரணிக்க குடலிற்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த சுரப்பில் பாதிப்பு ஏற்படும் போது மலம் வெள்ளையாக வெளியேற வாய்ப்புள்ளது.

கல்லீரல் அழற்சி, ஹெபடைடிஸ் மற்றும் பித்த நீர் உற்பத்தி குறைதல்,கொலோசைட்டிஸ், கட்டிகள், பித்தக் கற்கள் போன்றவை பித்த நீர் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தலாம்.

MOST READ: காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....

மலத்தில் சளி வெளியேறுதல்

மலத்தில் சளி வெளியேறுதல்

குடலில் சளி இருப்பதால் அது மலம் வழியாக வெளியேற வாய்ப்புள்ளது. இந்த பிசுபிசுப்பு தன்மை உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை குடல் சுவர்கள் உறிஞ்ச பயன்படுகிறது. மேலும் குடல் சுவர்கள் பாதிப்படையும் இருக்க பாதுகாக்கிறது.

நச்சு கலந்த நீர்மம்

பூஞ்சை

வைரஸ்

பாக்டீரியா

வயிற்று ஆசிட்

எரிச்சலூட்டும் காரணிகள்

எரிச்சலூட்டும் காரணிகள்

அதிகமான சளித் தன்மை அழற்சியை ஏற்படுத்துகிறது. அதிக மியூக்கஸ்(சளி) இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். பிசுபிசுப்பு தன்மை அதிக அளவில் இருப்பது குடலில் ஏற்பட்டுள்ள அழற்சியை யும் எரிச்சலையும் காட்டுகிறது.

குடலின் நிலை

குடலின் நிலை

சில சமயங்களில் குடலில் அழற்சி அல்லது எரிச்சல் கூட மலம் வெள்ளையாக இருக்க காரணமாகிறது. கோலிடிஸ், க்ரோன் நோய் மற்றும் குடல் நோய் போன்றவை இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் ஆராய்ந்து கொள்ளலாம். இதனால் சீரண சக்தி தடைபட வாய்ப்புள்ளது. ஒரு சில ஊட்டச்சத்துக்கள் மட்டுமே உறிஞ்சப்பட்டு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தலைவலி, உடல் எடை இழப்பு, தசைகளில் பலவீனம், குடல் அழற்சி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அதிகமான மியூக்கஸ் உற்பத்தி

மலம் கழித்தலில் மாற்றம்

வயிறு புடைப்பு

அடிவயிற்றில் வலி

மலத்தில் இரத்தம் கலந்து வெளியேறுதல்.

பாராசிட்டிக் தொற்று

பாராசிட்டிக் தொற்று

நாடாப் புழு போன்றவை இருந்தால் மலம் வெள்ளையாக போக வாய்ப்புள்ளது. வெள்ளையாக கட்டி கட்டியாக போவது நாடாப் புழுவில் விளைவை உண்டாக்குகிறது. இந்த நாடாப் புழு, குடல் புழுக்கள் இருந்தால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும். அடிவயிற்றில் வலி, ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, சீரண பிரச்சனைகள் ஏற்படும்.

MOST READ: பைத்தியத்தையும் குணப்படுத்தும் இந்த செடி பற்றி உங்களுக்கு தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கங்க...

பூஞ்சை தொற்று

பூஞ்சை தொற்று

மலத்தில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் கூட வெள்ளையாக இருக்க வாய்ப்புள்ளது. நோயெதிப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படும். கீமோதெரபி, ரேடியோதெரபி போன்றவற்றாலும் இந்த பாதிப்பு நேரிடலாம். எய்ட்ஸ் நோய்கள் போன்றவை நம் நோயெதிப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.

கேண்டிடா செல்கள் இறப்பதால் கூட மலம் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும். இது சீரண பிரச்சனைகளையும் அழற்சியை யும் ஏற்படுத்துகிறது.

கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள்

கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள்

அடிக்கடி மலம் வெள்ளை நிறமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. மருத்துவர்கள் உண்மையான காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பார்கள்.

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

ஸ்வட் டெஸ்ட்

சிடி ஸ்கேன்

எம் ஆர் ஐ

எக்ஸ்ரே

எண்டோஸ்கோபி

கோலனோஸ்கோபி

சிறுநீரக பரிசோதனை

மலம் பரிசோதனை

இரத்த பரிசோதனை.

பரிசோதனையின் பயன்கள்

பரிசோதனையின் பயன்கள்

மலத்தின் சாம்பிள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வக பரிசோதனை செய்யப்படுகிறது. சில சமயங்களில் கல்ச்சர் மூலம் மைக்ரோப்ளோரா போன்ற பாக்டீரியா இருப்பதும் கண்டறியப்படுகிறது. இதே மாதிரி பூஞ்சை, சிஸ்ட், ஓவா மற்றும் கொழுப்பு போன்றவை களும் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் சில தகவல்களை எடுத்து அதற்கு சிகச்சை அளிக்கப்படுகிறது. குடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவை செய்யப்படுகிறது.

MOST READ: வேண்டாம்னு தூக்கி வீசின குழந்தை இப்ப 12.5 லட்சம் குரோர்பதியில ஜெயிச்சிருக்கு...

 சிகிச்சைகள்

சிகிச்சைகள்

பாதிப்பின் தாக்கத்தை அறிந்த பிறகு மருத்துவர் அதற்கான சிகிச்சையை அளிக்கிறார். இது போக ஆரோக்கியமான உணவு பழக்கம், நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சமநிலை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி புரோபயாடிக் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. அழற்சி எதிர்ப்பு உணவுகளான கீரைகள், தயிர் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். அதிக நீர் அருந்துங்கள். பித்த நீர் சுரப்பை அதிகரிக்க மஞ்சள், பட்டை, கீரைகள், பூண்டு மற்றும் இஞ்சி போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இது ஒரு அழற்சி எதிர்ப்பு மருந்தாக செயல்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

White Stuff in Poop: What to Do When You See It

White specks in the stool can be caused by a large number of different things. Some are more serious than others. The specks could just be small bits of undigested food, or caused by certain medications.
Desktop Bottom Promotion