For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவரோட கைய பார்த்தீங்களா? கையில மரம் முளைச்சிருக்கு... எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...

ட்ரீமேன் என்னும் கொடிய நோய் பற்றியும் அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

|

ட்ரீமேன் நோய்க்குறி என்றும் அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெர்ருசிஃபார்மிஸ் (ஈ.வி) மிகவும் அரிதான நோயாகும். இது பாலியல் சாரா கரு இழையின் ஒடுங்கும் நிலை காரணமாக ஏற்படும் ஒரு பரம்பரை தோல் கோளாறு ஆகும்.

Epidermodysplasia Verruciformis Causes, Symptoms, Diagnosis And Treatment

மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) காரணமாக ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு இந்த வகை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த HPV நோய்த் தொற்றுகள் கைகளில் மற்றும் கால்களில் மரத்தின் பட்டை போன்ற செதில்கள் மற்றும் பருக்கள் வளர காரணமாகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரீமேன் நோய்க்குறி

ட்ரீமேன் நோய்க்குறி

1 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் இந்த நோய்க்குறியால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் லெவாண்டோவ்ஸ்கி - லூட்ஸ் டிஸ்ப்ளாசியா என்றும் அழைக்கப்படுகிறது, இதை முதலில் ஆவணப்படுத்திய மருத்துவர்கள், பெலிக்ஸ் லெவாண்டோவ்ஸ்கி மற்றும் வில்ஹெல்ம் லூட்ஸ் ஆகியோரின் பெயரிடப்பட்டது.

இதன் தொடர்புடைய அறிகுறிகள், காரணங்கள், நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் இந்த நிலையைத் தடுப்பது பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

MOST READ: உங்களுக்கு கேக் ரொம்ப பிடிக்குமா? அப்போ இத பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

ட்ரீமேன் நோய்க்குறி உண்டாகக் காரணங்கள்

ட்ரீமேன் நோய்க்குறி உண்டாகக் காரணங்கள்

இந்த அரிய கோளாறு என்பது ஒரு வகையான மரபணு நோயாகும், இது HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) க்கு பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது. HPV யில் 70க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. அவை மருக்களை ஏற்படுத்துகின்றன. சில துணை வகைகள் பெரும்பாலும் மக்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை அல்லது மிகக் குறைந்த அளவு பாதிப்பை மட்டுமே உண்டாக்கும் விதமாக உள்ளன.

இருப்பினும், அதே துணை வகைகள் சிலருக்கு எபிடெர்மோடிஸ்பிளாசியா வெர்ருசிஃபார்மிஸின் மருத்துவ அம்சங்களை விளைவிக்கின்றன. ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒரு ஈ.வி. என்ற கணக்கில் இந்த நோயாளிக்கு இரண்டு அசாதாரண ஈ.வி மரபணுக்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஈ.வி.யின் மரபணு மாற்றம் அவ்வப்போது உள்ளது, அதாவது விந்து அல்லது முட்டை முதலில் உருவாகும்போது இது உருவாகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த அரிய தோல் நோய் பெரும்பாலும் உடலின் பாகங்களை மறைக்கக்கூடிய மருக்கள் போன்ற புண்களுடன் தொடர்புடையது. அறிகுறிகள் பொதுவாக பின்வருவனவற்றின் கலவையாகும்:

. மேலே தட்டையான புண்கள்

. கொப்பளங்கள் என்று அழைக்கப்படும் சிறிய அளவிலான உயர்த்தப்பட்ட புடைப்புகள்

. பிளேக்ஸ் எனப்படும் உயர்த்தப்பட்ட மற்றும் வீக்கமடைந்த தோலின் திட்டுகள்

. பெரும்பாலும் சூரிய ஒளியில் வெளிப்படும் பகுதிகளில் தட்டையான புண்களின் தோற்றம்

பொதுவாக ஏற்படலாம் . எனவே, முகம், காதுகள், கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். புண்களின் தோற்றம் மரம்-பட்டை போன்ற தோற்றம் போல் இருப்பதன் காரணமாக இது "மரம்-மனித நோய்க்குறி" அல்லது "மரம்-மனித நோய்" என்று குறிப்பிடப்படுகிறது. பிளேக்குகளின் தோற்றம் பின்வரும் பகுதிகளில் பொதுவாக காணப்படலாம்.

MOST READ: கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா? இதுதான் காரணம்...

"மரம்-மனித நோய்"

. முண்டம்

. கால்கள்

. கழுத்து

. புஜங்கள்

. உள்ளங்கை

. பாதங்கள்

. பிறப்புறுப்பின் வெளிப்புறம்

. அக்குள்

ஆபத்து காரணிகள்

ஆபத்து காரணிகள்

1. ஈ.வி. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 10 சதவீதம் பேர் இரத்த உறவினர்களாக இருந்த பெற்றோர்களைக் கொண்டுள்ளனர், அதாவது அவர்களுக்கு ஒரு பொதுவான மூதாதையர் இருந்தார்கள். ஈ.வி. பாதிப்பு கொண்டவர்களுக்கு எச்.பி.வி அல்லாத நோய்த்தொற்றுகளுக்கு இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட எச்.பி.வி துணை வகைகளுடன் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். 70 க்கும் மேற்பட்ட HPV துணை வகைகள் இந்த வகை மருக்களை ஏற்படுத்துகின்றன .

2. சுமார் 7.5% ஈ.வி. வழக்குகள் குழந்தை பருவத்திலும், 61.5% 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளிலும், 22.5% பருவமடைதலிலும் காணப்படுகின்றன. இந்த நோய் ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் அனைத்து இன மக்களையும் பாதிக்கிறது.

நோயறிதல்

நோயறிதல்

1. மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தொடங்கி அறிகுறிகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். மருக்கள் முதலில் எப்போது தோன்றின, எந்த சிகிச்சையிலும் அவை எவ்வாறு பதிலளித்தன என்பது போன்ற கேள்விகளை மருத்துவர்கள் கேட்கிறார்கள். ஏதேனும் அசாதாரணமான புண்கள் அல்லது மருக்கள் தோன்றுவதை நீங்கள் கவனித்தால், அவை மிதமான அளவு இருந்தபோதிலும் தோல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

2. உங்கள் நிலையை கண்டறிய, உங்கள் மருத்துவர் ஒரு பயாப்ஸிக்கு உங்கள் உடலின் சிறிய திசு மாதிரிகளை எடுக்கலாம். ஈ.வி.க்கான தோல் பயாப்ஸியில் ஹெச்.வி.வி மற்றும் ஈ.வி.யைக் குறிக்கும் பிற அறிகுறிகளைக் கண்டறிவதற்கான சோதனைகள் அடங்கும்.

MOST READ: காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது? என்ன பிரச்னை வரும்?

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

ஈ.வி.க்கு நிரந்தர சிகிச்சை இல்லாததால், சிகிச்சையில் அறிகுறிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கும். அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகள் பின்வருமாறு..

. திரவ நைட்ரஜன் போன்ற இரசாயன சிகிச்சைகள்,

. சாலிசிலிக் அமிலத்தைக் கொண்ட மேற்பூச்சு களிம்புகள், மற்றும்

. கிரையோதெரபி, இதில் மருக்கள் உறைந்து அழிக்கப்படுகின்றன.

பல அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று க்யூரேட்டேஜ் ஆகும், இதில் க்யூரெட் எனப்படும் கரண்டியால் வடிவமைக்கப்பட்ட சாதனம் ஒரு புண்ணை கவனமாக துடைத்தெறியப் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Epidermodysplasia Verruciformis Causes, Symptoms, Diagnosis And Treatment

Epidermodysplasia verruciformis (EV), also known as treeman syndrome, is a very rare autosomal recessive hereditary skin disorder. It makes the patient highly susceptible to infections caused by the human papillomavirus
Desktop Bottom Promotion