For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 அறிகுறி இருந்துச்சுன்னா உங்க ஈரல் காலின்னு அர்த்தம்... கவனமா இருந்துக்கோங்க...

ஹெபடைடிஸ் சி என்ற கல்லீரல் நோய் பற்றி இந்த பகுதியில் மிக விளக்கமாகப் பார்க்கலாம். அதன் அறிகுறிகள் ஆகியவற்றினுடைய முழு தொகுப்பு தான் இது.

|

ஹெபடைடிஸ் சி என்பது ஒரு கல்லீரல் நோயாகும். இது ஹெபடைடிஸ் சி என்ற வைரஸால் ஏற்படுகிறது. இந்த நோய் நமக்கு வருவதே தெரியாது. இது அமைதியாக வந்து தாக்கக் கூடிய கொடூர நோய். இதன் அறிகுறிகள் நமக்கு தாமதமாகத்தான் தெரியும்.

Hepatitis C

அதனால் தான் இதை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. காய்ச்சல் மற்றும் ப்ளூ இதன் ஆரம்ப அறிகுறியாகும். இதன் அறிகுறிகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசியின்மை

பசியின்மை

இந்த நோய் வந்தவருக்கு பசியே எடுக்காது. இந்த பசியின்மை அனோரெக்ஸியா என்று அழைக்கப்படுகிறது. அப்படியே இது தீவிரமடைந்து வாந்தி, குமட்டல் ஏற்படும்.

MOST READ: பேய்களுடன் உடலுறவு கொள்ளும் பெண்... இதுவரை 20 பேய்களுடன் கலவி கொண்டிருக்கிறாராம்

மூட்டுகளில் வலி மற்றும் தசைகளில் வலி

மூட்டுகளில் வலி மற்றும் தசைகளில் வலி

சில வாரங்கள் கழித்து மூட்டுகளில் மற்றும் தசைகளில் வலி ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள். அடிக்கடி சோர்வு ஏற்படும். நீங்கள் என்ன தான் முயற்சி செய்து உடற்பயிற்சி செய்தாலும் சோர்வு விடாமல் இருக்கும். இது உங்கள் கல்லீரல் பாதிப்படைந்ததை காட்டுகிறது.

இரத்த சர்க்கரை அளவு குறைதல்

இரத்த சர்க்கரை அளவு குறைதல்

இரத்த சர்க்கரை அளவு குறைதல் உங்கள் உடல் நலத்தை பாதிக்க ஆரம்பித்து விடும். ஹெபடைடிஸ் தொற்று இருந்தால் இரத்த சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்து விடும். எனவே அடிக்கடி உங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணித்து கொண்டு இருங்கள். தலைவலி வர ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் நிலைமை மோசமாவதற்குள் மருத்துவரை அணுகி விடுங்கள்.

MOST READ: பெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள்? இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன?

இன்ஸோமினியா

இன்ஸோமினியா

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஸோமினியா ஏற்படும். இரவில் தூங்க முடியாமல் அவதி படுவர். இன்ஸோமினியா வும் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாகும். எனவே போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவீர்கள். இதனால் அடிக்கடி இரவில் விழித்து கொள்ளுங்கள். அடிக்கடி கனவுகள் வரும்.

மஞ்சள் நிற சருமம்

மஞ்சள் நிற சருமம்

கல்லீரல் அழற்சி ஏற்பட்டு பிலிரூபின் என்ற கெமிக்கல் இரத்தத்தில் கலந்து விடும். இதனால் உடலில் நச்சுகள் உருவாகி சருமம் மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். இந்த மஞ்சள் நிறம் உங்கள் கண்களிலும் ஏற்படும். கண்களில் உள்ள வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக ஆரம்பித்து விடும்.

MOST READ: எப்பவுமே எல்லாருக்கும் இம்சை தரக்கூடிய மூனு ராசிக்காரங்கனா அது இவங்க தான்...

முடிவு

முடிவு

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள். இல்லையென்றால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஆகி விடும். ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைய ஆரம்பித்து விடும். ஆரம்ப அறிகுறிகள் தென்படும் போதே அலட்சியமாக இருக்காதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். நலமுடன் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That You Might Be Having Hepatitis C

HCV infection usually produces no symptoms or very mild symptoms during the early stages, many people don’t know they have it until liver damage shows up – sometimes decades later – during routine medical tests.
Story first published: Monday, March 4, 2019, 15:54 [IST]
Desktop Bottom Promotion