For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்

By Mahibala
|

தேன் மற்றும் பச்சையான பூண்டை வைத்து எப்படி உடல் எடையைக் குறைக்கலாம். இது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மிக எளிய வைத்திய முறை ஆகும். இபப்டி சாப்பிடுவது வெறுமனே உடல் எடையைக் குறைப்பதோடு வயிற்றில் தேங்குகின்ற கொழுப்பை தேங்கவிடாமல் தடுக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்பசம் ஆகியவற்றையும் தீர்க்கும்.

garlic and honey

அதனால் குண்டானவர்கள் மட்டுமல்ல எல்லோருமேஇதை சாப்பிடலாம். இதை எப்படி சாப்பிட வேண்டும், எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் அதனால் மேலும் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் மிக விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைப்பு

எடை குறைப்பு

எடையைக் குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நினைக்கிறீர்களோ அவ்வளவு வேகமாகக் குறைந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே!. உண்மை என்ன தெரியுமா? எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. ஆனால் என்ன சில டயட் (உணவு ரீதியான) சார்ந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அதற்கான முயற்சியை துரிதப்படுத்தலாம்.

MOST READ: ஷில்பா ஷெட்டி சொல்லும் பெட்ரூம் ரகசியங்கள்... இத ட்ரை பண்ணினா சண்டையே வராதாம்

செய்ய வேண்டியது

செய்ய வேண்டியது

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தொடர்ந்து வெந்நீர் மட்டும் குடிப்பது இதுபோன்ற பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தீர்கள் என்றால் உடல் எடை குறைவதைத் துரிதப்படுத்த முடியும். இப்படி நிறைய சிரமங்களுக்குப் பிறகு தான் எடையைக் குறைக்க முடியும். ஆனால் இந்த கட்டுரையில் ஓரு மிகச்சிறந்த பலனைத் தரக்கூடிய வீட்டு வைத்திய முறையைத் தான் பார்க்கப் போகிறோம்.

பூண்டும் தேனும்

பூண்டும் தேனும்

பச்சை பூண்டும் தேனும் சேர்த்து சாப்பிடுவது என்பது அத்தனை சுவையான விஷயம் இல்லை தான். என்றாலும் கூட, இது உடல் எடையை வேகமாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு மட்டுமல்லாது இது உங்களுடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது.

எப்படி நடக்கும்?

எப்படி நடக்கும்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டை தட்டி அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ஜீரண மண்டலம் துரிதமாக வேலை செய்யும். அதோடு உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும்.

பூண்டும் தேனும் மிக ஆரோக்கியம் நிறைந்த பொருள். இவற்றை நாம் எந்த உணவோடு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட முடியும். அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து சாப்பிடுவதால் மிதமிஞ்சிய ஆரோக்கிய விஷயங்கள் நடக்கும்.

MOST READ: செலவில்லாம இந்த எலுமிச்சை தாந்தீரிகத்த வீட்ல பண்ணுங்க... 2 வாரத்துல வீட்ல பணமழை கொட்டும்

எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

பச்சை பூண்டும் தேனும் காமினேஷன் என்பது உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு போகிறது. தோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதோடு கொழுப்பு சேராமலும் பார்த்துக் கொள்கிறது.

சளி, இருமல் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

ஜீரண சக்தியை துரிதப்படுத்துவதோடு ஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களையும் சரி செய்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் அத்தனையையும் வெளியேற்றுகிறது.

வேறு நன்மைகள்

வேறு நன்மைகள்

கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கிறது. அதோடு இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இது இருக்கும்.

MOST READ: கிட்னி, கல்லீரல்ல வர்ற எல்லா பிரச்னைக்கும் ஜாதிபத்திரி ஒன்னே போதுமாம்...

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

நான்கு பல் பூண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக, துருவியோ அல்லது நசுக்கியோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பத்து நிமிடங்கள் வரை ஊற விடவும். தேன் பூண்டுக்குள் நன்கு இறங்க வேண்டும். அல்லது இதை இரவிலே கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

raw garlic and honey for weight loss

Surely, the combo of garlic and honey may not seem very delicious but, it is very beneficial for your health as well as weight loss. It can improve your overall health conditions. Consuming raw garlic on an empty stomach can also aid digestion and detoxification.
Story first published: Wednesday, February 6, 2019, 12:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more