For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்துமாவுக்கு மாத்திரை சாப்பிடறீங்களா? அதுக்கு பதிலா இத சாப்பிடுங்க... சீக்கிரம் சரியாகிடும்

|

ஆஸ்துமா என்பது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாகும். இந்த நோய் பாதிக்கப்பட்டவரால் விரைவில் சுவாசிக்க முடியாது. இது ஒரு நாள்பட்ட நோயாகும். நுரையீரல் வழியாக பாயும் சுவாச பாதையில் அடைப்பு இருந்தால் இந்த பிரச்சினை உண்டாகும்.

இந்த ஆஸ்துமா பிரச்சினை ஏற்பட காற்று மாசுபாடு, சுவாச தொற்று, காலநிலை மாற்றம், உணவுகளில் உள்ள சல்பேட் மற்றும் மருந்துகள் போன்றவை காரணமாக அமைகிறது. இதன் அறிகுறிகளாவன இருமல், மூச்சு இளைப்பு, மூச்சு விட சிரமம், மார்பகம் இறுக்கமடைதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இந்த ஆஸ்துமாவிற்கு சிகச்சை அளிக்க என்று நிறைய முறைகள் இருக்கின்றன. இங்கே 10 விதமான வீட்டு சிகச்சைகளைப் பற்ி நாம் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சி நிறைய ஆஸ்துமா நோய்களுக்கு சிகச்சை அளிக்க பயன்படுகிறது. சுவாச பாதை தொற்று, அழற்சி போன்றவற்றை சரி செய்ய நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

சில ஆஸ்துமா மருந்துகள் தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது என்பது குறித்து நிறைய தகவல்களை திரட்டி வருகின்றனர்.

பயன்படுத்தும் முறை

இஞ்சி ஜூஸ், மாதுளை ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வாருங்கள். 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சி, 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து படுக்கும் போது சாப்பிட்டு வரவும்.

1 இஞ்ச் இஞ்சியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை கொதிக்கின்ற நீரில் போடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி கொள்ளவும். பிறகு ஆறியதும் பருகவும்.

நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்க வெந்தய விதைகளை பயன்படுத்தலாம்.

1 டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 1 கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதனுடன் 2 டீ ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த சாற்றை காலை மற்றும் மாலை வேளைகளில் குடியுங்கள். பச்சையாக இருக்கும் இஞ்சியை எடுத்து அதனுடன் உப்பு வைத்து சாப்பிடலாம்.

MOST READ: இந்த ஒரு ராசிக்காரங்க இன்னைக்கு ஒருநாள் வீட்டை பூட்டக்கூடாது... அது எந்த ராசி? எதுக்கு?

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

ஆஸ்துமா அட்டாக் இருப்பவர்கள் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் சுவாச பாதை சுத்தமாகி விடும். இது சாதாரண சுவாசத்திற்கு உதவுகிறது. அடுப்பில் கடுகு எண்ணெய்யை வைத்து லேசாக கற்பூரத்தை போட்டு காய்ச்சி சூடுபடுத்துங்கள்.

அதை அப்படியே ஒரு பெளலிற்கு மாற்றி வெதுவெதுப்பாக உள்ளங்கைகளில் எடுத்து நெஞ்சில் அப்ளே செய்யுங்கள். முதுகுப் பகுதியிலும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இதை ஒரு நாளைக்கு நிறைய தடவை செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் சுவாச பாதைகள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மூச்சுப் திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகளை ஒழிக்கிறது.

3 அத்திப் பழங்களை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊற வைக்கவும்.

காலையில் எழுந்ததும் ஊற வைத்த அத்திப் பழத்தை சாப்பிடுங்கள், அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

இந்த சிகிச்சையை இரண்டு மாதங்கள் செய்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டு சுவாச பாதையில் இருக்கும் சளியை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆஸ்துமா ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே இதை சரி செய்யலாம்.

1/4 கப் பாலில் 2-3 பூண்டு பற்களை போட்டு கொதிக்க வைக்கவும்

பிறகு ஆறியதும் பருகவும்

காபி

காபி

காபியில் அதிகளவு காஃபைன் இருக்கிறது. இது பிராஞ்சிலேட்டராக செயல்படுகிறது. எனவே ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சூடான காபி குடித்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். நல்ல அடர்ந்த காபி நல்ல தீர்வை அளிக்கும்.

ஆனால் ஒரு நாளைக்கு 3 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். உங்களுக்கு காபி பிடிக்காவிட்டால் சூடாக டீ கூட குடிக்கலாம்.

யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய்

யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய்

யூகாப்லிப்ட்ஸ் ஆயில் ஆஸ்துமாவிற்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதன் நெகிழ்வுத் தன்மை சளியை இளகச் செய்து வெளியேற்றி விடும். இதில் உள்ள யூகாப்லிப்டோல் என்ற கெமிக்கல் சளியை வெளியேற்ற உதவுகிறது.

ஒரு பேப்பரில் யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய்யை ஊற்றி படுக்கும் போது தலையணைக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே அதன் நறுமணத்தை நுகருங்கள்.

அதுமட்டுமல்லாமல் கொதிக்கின்ற தண்ணீரில் சில துளிகள் யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய்யை ஊற்றி ஆவி பிடியுங்கள். ஆழ்ந்த மூச்சு உங்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது தொண்டையில் வலி வந்தால் என்ன அர்த்தம்? உடனே என்ன செய்யவேண்டும்?

தேன்

தேன்

ஆஸ்துமாவை குணப்படுத்த பழங்காலத்தில் இருந்தே தேன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள ஆல்கஹால் மற்றும் ஈத்தெரல் எண்ணெய் தன்மை ஆஸ்துமாவை குறைக்கிறது.

பயன்படுத்தும் முறை

தேனை முகர்ந்து பார்த்தாலே உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் உருவாகும்

1 டேபிள் ஸ்பூன் தேனை சூடான நீரில் கலந்து குடித்து வாருங்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை என குடியுங்கள்.

படுப்பதற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை 11/4 டீ ஸ்பூன் பட்டை பொடி சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். இது சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியை போக்கி நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. மேலும் இதிலுள்ள சல்பர் பொருள் நுரையீரலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது.

எனவே பச்சை வெங்காயத்தை வெறுமனே சாப்பிட்டு வந்தால் சுவாச பாதை சுத்தமாகி விடும். நல்ல மூச்சு விட முடியும். அப்படி பச்சையாக சாப்பிட முடியவில்லை என்றால் உணவிலாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.

லெமன்

லெமன்

பொதுவாக ஆஸ்துமா விட்டமின் சி குறைவான நபர்களுக்கே ஏற்படுகிறது. லெமனில் விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன.

அரை எலும்பிச்சை பழத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இதை தினமும் குடித்து வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குறைந்து விடும்.

ஆரஞ்சு, பப்பாளி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி போன்ற பழங்கள் ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்கிறது.

செயற்கை லெமன் ஜூஸ்களை குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.

ஓமம் விதைகள்

ஓமம் விதைகள்

கரம் விதைகள் என்பது ஓம விதைகளை குறிக்கிறது. இந்த விதைகள் ஆஸ்துமா லேசாக இருக்கும் போதே குணப்படுத்த உதவுகிறது. இது ஒரு பிராஞ்சிலேட்டராக செயல்பட்டு சுவாச குழாய்களில் உள்ள சளியை இளகச் செய்து நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

1 டீ ஸ்பூன் கரம் விதைகளை கொஞ்சம் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அந்த நீராவியை நுகருங்கள், முடிந்தால் தண்ணீரை குடிக்க கூட செய்யலாம்.

கைப்பிடியளவு உள்ள கரம் விதைகளை ஒரு காட்டன் துணியில் கட்டி மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தவும். இதை வெதுவெதுப்பாக மார்பகம், கழுத்து போன்ற பகுதிகளில் வைத்து ஒற்றி ஒற்றி எடுங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் வரை இதை செய்யுங்கள்.

கரம் விதைகள் மற்றும் கருப்பட்டியை சூடுபடுத்தி 1-2 டீ ஸ்பூன் இந்த பேஸ்ட்டை தினமும் சாப்பிட்டு வாருங்கள். நல்ல நிவாரணம் கிடைக்கும். இது டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

MOST READ: இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஆஸ்துமா அறிகுறிகள் தெரிந்தால் தூசி, காற்று மாசுபாடு, சுவாச தொற்று போன்றவற்றை தவிருங்கள்.

மூலிகைகள் மற்றும் கார பொருட்களான ரோஸ் மேரி, முனிவர் செடி, ஆர்கனோ, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்.

சால்மன், காட், மெக்கரல் போன்ற மீன்களை வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரை சந்தித்து ஓமேகா 3 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ப்ரஷ்ஷான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதில் மெக்னீசியம், செலினியம், பீட்டா கரோட்டீன், விட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் நுரையீரல் தொற்றை போக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிகள் போன்ற பொருட்களை உணவில் சேர்க்காதீர்கள். இந்த கெமிக்கல்கள் ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தும்.

பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் அழற்சியை ஏற்படுத்தினால் கூட பாலை நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் லாக்டோஸ் பற்றாக்குறை கூட ஆஸ்துமாவை ஏற்படுத்தும். முழு கொழுப்புள்ள பால் போன்றவை ஆஸ்துமா விலிருந்து உடலை பாதுகாக்கும். எனவே அவ்வப்போது எடுத்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

home remedies for asthma

asthma is a common symptom of various respiratory disorders that cause tightening in the throat. There are several ways a person can stop their wheezing at home without using an inhaler, but these will depend on the cause.
Story first published: Wednesday, March 13, 2019, 16:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more