For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாத்திரை அடிக்கடி சாப்பிடறவங்களுக்கு குடல்புற்றுநோயே வராதாமாம்... எப்படினு தெரியணுமா?

ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமாம். இதுபற்றி விளக்கமாக இங்கே விவாதிக்கலாம். அதுபற்றிய ஒரு தொகுப்பு தான் இது.

By Vivek Sivanandam
|

மருத்துவ ஆய்வின் போது பெருங்குடல் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது .

Aspirin Underused In Reducing Colon Cancer Risk

ஆனால் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் நோயின் தீவிரத்தை குறைத்தாலும், வெகு சில நோயாளிகள் மட்டுமே இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோயிற்கு முக்கிய ஆபத்து காரணியாக தீவிர பெருங்குடல் கட்டிகள் விளங்கும் நிலையில், இது அமெரிக்காவில் ஏற்படும் புற்றுநோய் மரணங்களுக்கான பொதுவான காரணங்களில் மூன்றாவது இடம் வகிக்கிறது.

குறிப்பிட்ட மருத்துவ காரணங்கள் இருப்பவர்களை தவிர்த்து தீவிர பெருங்குடல் கட்டி உள்ள அனைத்து நோயளிகளுக்கும் குறைந்த டோஸ் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதை அறிவுறுத்துமாறு மருத்துவசேவை வழங்குநர்களிடம் அமெரிக்க நோய்தடுப்பு சேவை பிரிவு பரிந்துரைத்துள்ளது. பெருங்குடல புற்றுநோய்க்கான ஆபத்தை 40% குறைக்கும் இந்த ஆஸ்பிரின், தீவிர பெருங்குடல் கட்டிகள் வருவதை தடுக்கவும் உதவுகிறது.

MOST READ: இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த குறைந்த டோஸ் ஆஸ்பிரின் பயன்பாட்டை மதிப்பீடு செய்யும் வகையில், அட்லாண்டிக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், தீவிர பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 84 நோயாளிகளை பரிசோதித்தனர். இந்த பரிசோதனைகள் 2013 முதல் 2017வரை நடைபெற்றது. அதில் 43நோயாளிகள் மட்டுமே ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.

ஆஸ்பிரின் மாத்திரைகள்

ஆஸ்பிரின் மாத்திரைகள்

"குறைந்தளவு ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது, குடல் புற்றுநோய் மற்றும் தொடர் கட்டிகளுக்கான ஆபத்திலிருந்து அபாயகட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றும் என இந்த தரவு முடிவுகள் குறிப்பிடுகின்றன"என்கிறார் டாக்டர். சார்லஸ் ஹென்னிகின்ஸ். இவர் மருத்துவ கல்லூரி ஒன்றில் போராசிரியாகவும், கல்வி ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

MOST READ: மூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா? உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...

வாழ்க்கை முறை மாற்றங்கள்

வாழ்க்கை முறை மாற்றங்கள்

வாழ்க்கை முறை மாற்றங்கள், குறைந்த டோஸ் ஆஸ்பிரின் மற்றும் மருத்துவ ஆய்வு போன்ற மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என இந்த ஆய்வுமுடிவுகள் காண்பிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர் உடற்பயிற்சி மற்றும் அதிகப்படியான உடல் எடையை தவிர்த்தல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் பெருக்குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைத்துள்ளன.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

"எங்களது இந்த முயற்சியின் மூலம் பெரும்பாலான நோயாளிகளுக்கு அதிகப்படியான நன்மைகளை வழங்குமுடியும் என நம்புகிறோம்" என்கிறார் ஹென்னிகின்ஸ்.

இந்த ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் லாரன்ஸ் ஃபியோலர் ஒரு காஸ்ட்ரோன்டிரோலஜிஸ்டிஸ்ட் மற்றும் துணை பேராசிரியராகவும் உள்ளார். பெருங்குடல் புற்றுநோய் உள்ளது கண்டறியப்பட்ட நோயாளிகளில் 90%பேர் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர் என கண்டறிந்துள்ளார்.

MOST READ: தைராய்டு பிரச்சினைனால வெயிட் போடுதா? இந்த 4 விஷயத்த மட்டும் செய்ங்க... தானா குறைஞ்சிடும்

ஆபத்துகள்

ஆபத்துகள்

"இதிலுள்ள முக்கிய ஆபத்து காரணிகள் இதயத் தாக்குதல்களையும், பக்கவாதம், அதிக எடை , ஒபிசிடி, 2 வகை டயாபிடீஸ் ஆகியவற்றுடன் ஒத்தது" என்கிறார் ஃபெட்லர்.

இந்த ஆய்வுமுடிவுகள் சமீபத்தில் அமெரிக்கன் ஜேர்னல் ஆம் மெடிசன்-ல் வெளியிடப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aspirin Underused In Reducing Colon Cancer Risk

The major risk factors are similar to those for heart attacks and stroke and include overweight, obesity as well as physical inactivity, a diet low in fiber and high in fat, as well as type 2 diabetes.
Story first published: Wednesday, February 20, 2019, 14:51 [IST]
Desktop Bottom Promotion