For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை..! இதையெல்லாம் செய்தால், சீக்கிரமாகவே உங்களுக்கு வயதாகி விடுமாம்...!

|

ஒவ்வொரு நாட்டினரின் பருவ நிலைகளும் பலவிதத்தில் மாறுபட்டு இருக்கும். இயற்கையின் படைப்பே இப்படித்தான். கால நிலைக்கு ஏற்ப தான் நமது உடல் நலமும் மாறுபடும். கால நிலையின் தன்மைக்கு ஏற்ப நமக்கு பல்வேறு தாக்குதலும் ஏற்பட கூடும். அந்த வகையில் மற்ற கால நிலைகளை காட்டிலும் பனி காலத்தில் தான் நமக்கு அதிகம் வயதாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எச்சரிக்கை..! இதையெல்லாம் செய்தால், சீக்கிரமாகவே உங்களுக்கு வயதாகி விடுமாம்..!

கொஞ்சம் அதிர்ச்சி தர கூடிய தகவல் தான், என்றாலும் இது உண்மையும் கூட. பொதுவாகவே நமக்கெல்லாம் அதிகம் பிடித்தது பனிக்காலம் தான். ஆனால், இந்த பனிக்காலத்தில் தான் பலவித மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுமாம். நமது வயது வேகமாக கூடுவதோடு, இளமையை கொஞ்சம் கொஞ்சமாக பனிக்காலத்தில் நாம் இழக்கின்றோம். வாங்க, இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்பனியே..!

முன்பனியே..!

"ப்ப்பா.. என்னா வெயிலு" அப்படினு கடுகடுக்கும் நம்மை இதமாக தடவி கொடுப்பதே இந்த பனிக்காலம் தான். சின்ன வயதில் இருந்தே நம் எல்லோருக்கும் பனிக்காலம் என்பது சிறப்புமிக்க ஒன்றாகும். பலருக்கு காஷ்மீரை போன்று பனி துளி மழை வர வேண்டும் என்கிற கனவும் பல நாட்களாக இருந்திருக்கும். இத்தகைய பனிக்காலம் நமது வயதை கூட்டினால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.

ஒவ்வொன்றிற்கும் வேறு..!

ஒவ்வொன்றிற்கும் வேறு..!

பொதுவாக நாம் ஒரே விதமான உணவு பழக்கத்தையே எல்லா காலநிலைகளிலும் கடைபிடித்து வருகின்றோம். இது மிகவும் தவறான ஒன்றாம். வெயில் காலத்திற்கேற்ற உணவுகளையும், பனி காலத்திற்கேற்ற உணவுகளையும் நாம் உண்ண வேண்டும். இல்லையெனில் அவை நமது உடல் வளர்ச்சியில் பலவித மாற்றங்களை கொண்டு வந்து விடும்.

பனியில் சுடு தண்ணீயா..?

பனியில் சுடு தண்ணீயா..?

நம்மில் பலர்பனி காலங்களில் சுடு தண்ணீரில் குளிப்பது வழக்கமாகும். ஆனால், இது மோசமான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கிறது. சுடு தண்ணீரில் குளித்தால் தோல் விரைவிலே வறண்டு, வெடிப்பு, வறட்சி போன்றவை ஏற்படும். பிறகு, இதுவே உங்களை வயதானவரை போன்று காட்டும்.

இவர்தான் முக்கியம்..!

இவர்தான் முக்கியம்..!

பொதுவாகவே பனிக்காலத்தில் சூரியனின் வருகை மிக குறைவே. இது போன்ற காலங்களில் நமக்கு வைட்டமின் ட மற்றும் வைட்டமின் கே கிடைப்பது மிக கடினம். இவை நமது சருமத்தை வெளிர்ந்து இருப்பதை போன்று மாற்றி விடும். அத்துடன் அதிக சோர்வையும் தரும்.

MOST READ: சீன ராஜாக்கள் இந்த பழத்த ராணிகளுக்கு பரிசா கொடுப்பாங்களாம்..! ஏன்னு தெரியுமா..?

இதெல்லாம் நல்லதல்ல..!

இதெல்லாம் நல்லதல்ல..!

பனிக்காலத்தில் ஒரு சில உணவுகளை நாம் சாப்பிட்டால் அவை சீக்கிரமாகவே நமக்கு வயதானவரை போன்ற தோற்றத்தை தரும். குறிப்பாக பால் பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், உப்பு அதிகம் சேர்த்தவை, வறுத்த உணவுகள் ஆகியவற்றை நாம் அதிகம் சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் பனி காலங்கள் நமக்கு மோசமானதாக மாறி விடும்.

எத்தனை முறை..?

எத்தனை முறை..?

பனிக்காலங்களில் நமது தோலில் உட்புறம் அதிக வறட்சியாக இருக்கும். இதனை மேலும் உயர்த்தும் படி நாம் அடிக்கடி முகத்தை கழுவினால் நமது முகம் பலவித பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கூடுதலாக வயதானவரை போன்ற தோற்றத்தையும் இது தரும். எனவே, ஒரு நாளைக்கு 1 முறை முகத்தை கழுவினால் போதுமானது.

மன அழுத்தம் அதிகம்..!

மன அழுத்தம் அதிகம்..!

பொதுவாகவே இந்த பனிக்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றமும் உங்கள் வயதை விரைவாக ஆக்க கூடும். இளமையாக இருக்கும் உங்களின் சருமம் விரைவிலே வயோதிக பருவத்தை எட்டிவிடும். மன அழுத்தம் அதிகமானால் ஹார்மோன்கள் பிரச்சினைஉருவாகி பலவித கெட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்.

வயதான தோற்றம்..!

வயதான தோற்றம்..!

முகத்தில் உள்ள உட்புற சருமம் அதிகமாக வறண்டு போனால், மிக சீக்கிரமாகவே நமது சருமம் இளமையை இழந்து விடும். இந்த நிலை பெரும்பாலும் பனிக்காலத்தில் ஏற்பட கூடும். பனிக்காலத்தில் சருமம் வறண்டு போவதோடு மிக விரைவிலே இளமையை இழந்து விடும்.

MOST READ: ஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..?

என்ன செய்யலாம்..?

என்ன செய்யலாம்..?

பனிக்காலத்தில் வயதாகாமல் இருக்க, மேற்சொன்னவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். சருமத்தை எப்போதும் ஈர்ப்பத்துடனே வைக்க லோஷன்களை பயன்படுத்தலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

இதுவும் முக்கியம்..!

இதுவும் முக்கியம்..!

இந்த பனிக்காலங்களில் நாம் நிச்சயம் உடற்பயிற்சிகளை தவிர்த்து விட கூடாது. சீரான உணவு முறை மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் தான் வயதாவதை இது போன்ற காலங்களில் தடுக்கும். இதனால் உங்களின் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

எனவே, மேற்சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு, இளமையாக இருங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Age Faster in Winter

Here are we listed some reasons that why you age faster in winter.
Desktop Bottom Promotion