For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் கால்ல பூஞ்சைதொற்று வருதா?... இந்த 4 மட்டும் பண்ணுங்க...

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நமது சருமமும் எப்பொழுதும் ஈரப்பதத்துடனே காணப்படும். இதனால் எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு அவதி ஏற்படும். எனவே இதை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன

|

இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதமும் நம்மைச் சூழ்ந்துள்ள தண்ணீரின் மூலமாகவும் எளிதாக பூஞ்சை தொற்று நம்மை தொற்றிக் கொள்ளும். இந்த பூஞ்சை தொற்றால் வலி, தோல் உரிவு, காலில் அசெளகரியம் போன்ற பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பூஞ்சை தொற்றை சில எளிய இயற்கை முறைகளைக் கொண்டே தீர்வு காணலாம். அதைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த ஒத்தடம்

குளிர்ந்த ஒத்தடம்

உங்கள் பாதங்களில் சரும வடுக்கள், கொப்புளங்கள் போன்றவை தென்பட்டால் அதற்கு குளிர்ந்த ஒத்தடம் இதமாக இருக்கும். இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்து கொள்ளவும் முடியும். ஒரு பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு அதை சுற்றி ஒரு துணியை குளிர்ந்த நீரில் நனைத்து கட்டிக் கொள்ளுங்கள். 10-15 நிமிட இடைவெளியில் பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக ஒத்தடம் கொடுக்கவும். ரெம்ப நேரம் அதே இடத்தில் வைத்திருக்க வேண்டாம். இல்லையென்றால் ஒரு வித நமநமப்பு ஏற்படும்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலை யில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. வேப்பிலை சரும பிரச்சினைகளை போக்க வல்லது. சரும வடுக்களையும் எளிதில் குணப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து நீரில் போட்டு நன்றாக 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்பொழுது இதை ஒரு பக்கெட்டில் ஊற்றி அந்த நீரில் குளிக்கவும். சரும பிரச்சினைகள் அனைத்தையும் விரட்டி விடும். இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் சருமத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றி விடும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையும் சருமத்திற்ககான சிறந்த நண்பன் எனலாம். பூஞ்சை அழற்சி மற்றும் சரும வடுக்களை போக்குவதில் சிறந்தது.

பயன்படுத்தும் முறை

எனவே பாதிக்கப்பட்ட சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவி அரை மணி நேரம் வைத்திருங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் நிறைய சரும பிரச்சினைகள் மற்றும் அழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பஞ்சில் நனைத்து தடவ வேண்டும். இதிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பூஞ்சை பொருட்கள் சரும வடுக்களை சரி செய்கிறது.

என்னங்க இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி மழைக்காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம். பின்ன என்ன இனி மழையில் ஒரே ஆட்டம் பாட்டம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

Easy And Effective Remedies To Get Rid Of Fungal Infection During Monsoon

Actually in this season the humidity in the air goes so high so that wet skin does not get easily dry. And wet skin often results in skin fungus. There are several home remedies that are available for prevention of fungal infections during monsoon. Keep dry feet and Hand, apply powder on your feet, water proof shoes, vinegar, baking soda these are natural ways are there.
Desktop Bottom Promotion