அளவுக்கு அதிகமானால் ஆபத்தை தரும் 13 பொருட்கள் எவை?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்கள். இது அமிர்தத்திற்கு மட்டுமல்ல நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களான காபி முதல் டூத் பேஸ்ட் வரை இந்த பழமொழி பொருந்தும். இப்படி சில பொருட்களை அதிகமாக எடுக்கும் போது அவை நமது உயிருக்கே உலை வைத்து விடும்.

நமது உடலுக்கு என்று ஒரு அளவு இருக்கிறது. இதற்கு அதிகமாக நாம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை எடுக்கும் போது அவை நமக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பித்து விடுகின்றன.

அப்படிப்பட்ட 13 பொருட்களை பற்றி இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

கவனத்தில் வைக்க வேண்டியவை : இது ஒரு கட்டுரை மட்டுமே. இது உங்கள் உடல் நலத்திற்கு பயனளிக்கும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் ப்ளோரைடு சேர்க்கப்பட்டுள்ளது. காரணம் வாயில் இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி பற்களின் ஆரோக்கியத்திற்காக சேர்க்கப்படுகிறது.

ஆனால் உங்களுக்கு தெரியுமா இந்த ப்ளோரைடின் அளவு.0.1 - 0.3 மில்லி கிராம் /கிலோ கிராம் அளவிற்கு அதிகமானால் நச்சாக மாறிவிடுமாம்.

எனவே தான் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு 6 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில் மட்டுமே பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றது.

ஏனென்றால் இந்த ஒரு ட்யூப் டூத்போஸ்ட்டிலேயே குழந்தை இறக்கும் அளவிற்கு ப்ளோரைடு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுவிக்கிறது. 30 கிலோவிற்கு குறைவான குழந்தைகளுக்கு இதை உபயோகிக்கும் போது பார்த்து பயன்படுத்துவது நல்லது.

குறிப்பு :

பல் தேய்க்கும் போது தெரியாமல் டூத் பேஸ்ட்டை முழுங்குவதால் எந்த வித பாதிப்பும் இல்லை. லேசாக வயிற்றில் அசெளகரியமான நிலை ஏற்படும். இதனால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

 சோயா சாஸ்

சோயா சாஸ்

சோயா சாஸ் என்பது சோயா பீன்ஸ்யை பாடம் பண்ணி செய்யப்படும் ஒரு வகை பேஸ்ட் ஆகும். இதற்கு தனி வடிவ சோயா பீன்ஸ்யை தேர்ந்தெடுக்கின்றன. இதை வறுத்து அரைத்து இந்த சாஸை தயாரிக்கின்றன. மேலும் இதில் அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. எனவே இதை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சோயா சாஸை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது நமது இரத்தத்தில் உப்பின் அளவு அதிகரித்து ஹைபர்நாட்ரிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நமது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளில் உப்பு படிந்து நீர்ச்சத்து வெளியேறி விடும். குறிப்பாக மூளையிலிருந்து நீர்ச்சத்து வெளியேறும் போது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு நாம் கோமா(மூளை செயலிழப்பு) நிலைக்கு செல்வதோடு மட்டுமில்லாமல் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தேநீர்

தேநீர்

ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் கெல்த் அமைப்பு என்ன சொல்கிறது என்றால் ஒரு நாளைக்கு 4 கப் வர தேநீர் அருந்தலாம்.

இதற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது தேநீர் இலையில் உள்ள ஆக்ஸிலேட் நமது சிறுநீரகத்தில் எரிச்சல் மற்றும் சிறுநீரக பாதையை அடைக்கவும் செய்கிறது. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 ஸ்டார் ப்ரூட்

ஸ்டார் ப்ரூட்

ஸ்டார் ப்ரூட் என்ற கரம்போலா பழம் தென் கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, இந்தியா, நேபால் மற்றும் மெளரிதிஸ் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

புளிப்புச் சுவை கொண்ட இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும் இதிலுள்ள ஆக்ஸாலிக் அமிலம் தீவிர சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதை குறைந்த அளவு எடுத்துக் கொண்டால் நமது உடல் எளிதாக அந்த நச்சுக்களை வெளியேற்றி விடும். எனவே எப்பவாவது எடுத்துக் கொள்வது நல்லது.

முதுகு வலி க்ரீம் மற்றும் தைலம்

முதுகு வலி க்ரீம் மற்றும் தைலம்

முதுகுத் தசைகளை ரிலாக்ஸ் ஆக்கும் க்ரீம் மற்றும் தைலத்தை நாம் அதிகமாக பயன்படுத்துவோம். இவைகளை சாதாரணமாக பயன்படுத்தும் போது எந்த வித பாதிப்பை ஏற்படுத்தாது.

அதுவே அந்த பகுதியில் எதாவது காயங்கள் இருந்தால் இந்த தைலத்தில் உள்ள மெத்தில் சாலிசைலேட் என்ற பொருள் நமது சருமத்திற்குள் சென்று ஆளையே கொன்று விடும் நச்சாக மாறிவிடுகிறது. எனவே அடிக்கடி அதிகமாக முதுகுவலி க்ரீம் மற்றும் தைலம் தேய்ப்பதை தவிர்க்கவும்

உங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஞாபகம் இருக்கா 2007 இல் அமெரிக்காவின் ஓட்டப் பந்தய வீராங்கனை ஏரலி நியூமேன் இந்த பாதிப்பால் தான் காலமானார் .

சூரை மீன்

சூரை மீன்

ஏன் மீன் அதிகமாக எடுக்க கூடாது என தெரியுமா. நம்மை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் கழிவுகளை கடலில் தான் கொட்டுகின்றன. எனவே இந்த கழிவுகள் மீனில் தங்கும் போது அதை சாப்பிடும் நமக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிலும் சூரை மீனில் அதிகமான அளவு மெர்குரி உள்ளது. இவை மற்ற மீன்களை சாப்பிடுவதால் இதன் தசைகளில் ஏராளமான மெர்குரி படிந்துள்ளது. இவற்றை நாம் தொடர்ந்து எடுத்து கொள்ளும் போது உயிருக்கே உலை வைத்து விடும். கருவுற்ற பெண்களும், குழந்தைகளுக்கும் இதை கொடுக்க கூடாது.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காயில் மைரிஸ்டிரின் என்ற நச்சு பொருள் உள்ளது. இவற்றை சாப்பிடும் போது ஒன்னும் தெரியாது. ஆனால் இதன் அளவு அளவுக்கு அதிகமாக மாறும் போது இது நமது உடலை பாதிக்க ஆரம்பித்து விடும்.

அதிகமான ஜாதிக்காய் அளவால் தீராத வயிற்று வலி, பட பட வென இதயத் துடிப்பு, நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

களைக்கோஸ்

களைக்கோஸ்

களைக்கோஸில் அதிக அளவு விட்டமின் கே உள்ளது. இவை தான் இரத்தக் கொதிப்புக்கு காரணமாக அமைகிறது .

எனவே தான் செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி இரத்தத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அதற்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளவது நல்லது.

பிரக்கோலி, கலே மற்றும் காலிபிளவர்

பிரக்கோலி, கலே மற்றும் காலிபிளவர்

இந்த காய்கறிகள் அனைத்தும் நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இதை அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது தைராய்டு சுரப்பியை அதன் வேலையை செய்ய விடாமல் தடுக்கிறது.

இதனால் நமக்கு ஹைப்போ தைராய்டிசம் வர வாய்ப்புள்ளது. இதனால் அயர்வு, சோம்பல், எடை அதிகரிப்பு மற்றும் மூளையின் செயல்திறன் குறைதல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

கருப்பு அதிமதுரம்

கருப்பு அதிமதுரம்

இந்த கருப்பு அதிமதுரத்தை குறைவான அளவு சாப்பிட்டால் எந்த தீங்கும் ஏற்படாது. ஆனால் அதிகமாக எடுக்கும் போது இதிலுள்ள கிளைசைரின் என்ற பொருள் நமது உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைத்து விடுகிறது.

இதனால் இதய நோய்கள், இதயம் பட பட வென துடித்தல் மற்றும் இதயம் செயலிழப்பு ஏன் சில நேரங்களில் இறப்பு கூட ஏற்படலாம்.

விட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே

விட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே

கொழுப்பில் கரையக் கூடியது, நீரில் கரையக் கூடியது என்று இரண்டு வகையான விட்டமின்கள் உள்ளன.

விட்டமின் பி, சி போன்ற விட்டமின்கள் நீரில் கரையக் கூடியது என்பதால் நமது உடல் எளிதாக இதை சிறுநீரகத்திற்கு அனுப்பி விடுகிறது.

ஆனால் விட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அவை உடலில் தங்கியுள்ள கொழுப்பில் படிந்து விடுகின்றன. இதனால் நிறைய உடல் உபாதைகள் ஏற்படும்.

அதில் ஒன்று தான் இந்த ஹைபர்விட்டமினோசிஸ் அதாவது உங்கள் சருமத்தின் நிறம் ஆரஞ்சு கலரில் மாறி, கண் பார்வை மங்குதல், தலைசுற்றல் மற்றும் எலும்பில் வலி போன்ற பாதிப்புகளை உண்டு பண்ணி விடும்.

எனவே எந்த விட்டமின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவர் மற்றும் இரத்த பரிசோதனையின் மூலம் ஆலோசனை செய்து விட்டு பயன்படுத்துவது நல்லது.

காபி

காபி

காபிக்கு அடிமையானவர்கள் என்று பார்த்தால் இந்த உலகத்தில் நிறைய பேர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த காபியை அளவுக்கு அதிகமாக பருகும் போது நம் உடலுக்கு தீங்கைத் தான் கொடுக்கும். ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் அளவிற்கு நீங்கள் காபியை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதற்கு மேல் அதிகமாகும் போது இதயப் பட படப்பு, மார்பில் வலி மற்றும் வலிப்பு போன்றவை தாக்க நேரிடும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை : அதிலும் கருவுற்ற தாய்மார்கள் 200 மில்லி கிராம் அளவிற்கு மட்டுமே காஃபைன் எடுப்பது நல்லது இல்லாவிட்டால் அது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்க கூடும்.

பிளாக் டீ, டார்க் சாக்லேட் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றிலும் காஃபைன் உள்ளது. எனவே இவற்றை அளவுக்கு அதிகமாக எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தண்ணீர்

தண்ணீர்

குறைந்த நேரம் அல்லது காலத்தில் அதிகமாக தண்ணீர் எடுக்கும் போது அது நம் உயிரையையே குடித்து விடும்.ஆமாங்க இதைத் தான் தண்ணீர் போதை என்று சொல்வர். அளவுக்கு அதிகமான தண்ணீர் குறைந்த நேரத்தில் உள்ளே செல்லும் போது நமது சிறுநீரகம் அதை செயல்படுத்த முடியாமல் செயலிழந்து விடும். இதனால் மூளை மற்றும் நமது நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை : ஆண்கள் ஒரு நாளைக்கு எடுத்து கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவு 3.7 லிட்டர், பெண்களுக்கு 2.7 லிட்டர் ஆகும். இதற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது உயிருக்கே ஆபத்தாகி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Unexpected Things You Can Overdose On

13 Unexpected Things You Can Overdose On
Story first published: Friday, January 12, 2018, 16:35 [IST]