உங்க வீட்ல இந்த பாத்திரத்தில தான் சமைக்கிறீங்களா?... உடனே தூக்கி வெளிய வீசுங்க...

Posted By: Nanjappan Karuppagounder
Subscribe to Boldsky

இன்றைய காலகட்டத்தில் விற்பனை நோக்கில் விதவிதமாகவும் பார்த்ததும் வாங்கத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்படும் சமையலறைப் பொருள்களை கடைகளில் வைத்திருக்கும்போது, நமக்கு அது தேவையே இல்லையென்றாலும் நம்முடைய கைகளும் கண்களும்அதை அவ்வளவு எளிதாக கடந்து போகாது என்பது நமக்குத் தெரியும்.

home tips

இத்தகைய கவர்ச்சி மனநிலை தான் மீண்டும் மீண்டும் இதுபோன்ற ஆரோக்கிய கேட்டை உண்டாக்கக்கூடிய பொருள்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் அவற்றில் உள்ள கேடுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்இனி அதை வாங்கவு மாட்டீர்கள். நம்முடைய வீட்டில் உள்ள என்னென்ன பாத்திரங்கள் என்ன மாதிரியான ஆரோக்கியக் கேட்டை உண்டாக்குகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையல் பாத்திரங்கள்

சமையல் பாத்திரங்கள்

முற்றிலும் இயற்கையாக விளைந்த (ஆர்கானிக்) பொருட்களை சமையலுக்கு தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கும் இக்காலகட்டத்தில் நாம் அதை சமைக்கும் பாத்திரம் எவ்வித நன்மை தீமைகளைத் தருகிறது என்பதை கவனிக்க அல்லது தெரிந்துகொள்ள தவறி விட்டோம். நீங்கள் எவ்விதத்தில் சமைக்கிறீர்கள் மற்றும் அதை எவ்வாறு சேமித்துவைத்து உபயோகிக்கிறீர்கள் என்பது உங்கள் உடல் நளப்பேணலில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

ஆரோக்கியக் கேடுகள்

ஆரோக்கியக் கேடுகள்

உங்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட அழகான சமையலறைப் பாத்திரங்கள் பலவற்றில் பல கொடிய நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் கலந்துள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைவீர்கள். அவைகள் யாவும் நாம் உண்ணும் உணவுடன் கலந்து உள்ளே சென்று உடலில் தங்கி பல வியாதிகளையும் தொந்தரவையும் அளிக்க வல்லவை.

இன்றைய காலகட்டத்தில் பெருகிவரும் குழந்தையின்மை , உடல் பருமன் மற்றும் பார்க்கின்சன் எனும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு வழிவகை செய்யும் பல கெமிக்கல் கலவைகள் இந்த கண்ணைக்கவரும் பாத்திரங்களின் வழியே உடலில் நம் அறியாமையினால் எளிதாகக் கலக்கின்றன.

மாற்றுப்பாத்திரங்கள்

மாற்றுப்பாத்திரங்கள்

பலவகை அபாயகரான பாத்திரங்களை/சமையல் உபகரணங்களை நம் நவீன கால அடுக்களையில் அதன் விளைவுகள் தெரியாமலேயே எவரோ ஒரு நடிகர், நடிகை சில நொடிகள் விளம்பரத்தில் தோன்றி வாங்கச் சொல்வதால் ,வாங்கிக் குவிக்கிறோம். நீங்கள் இப்பொழுது செய்யவேண்டியதெல்லாம், நான்-ஸ்டிக் தாவா போன்ற இரண்டாம் தரப் பாத்திரங்களைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசி விட்டு உடல்நலனுக்குப் பாதுகாப்பான பாத்திரங்களை அல்லது உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குவதே.

மனித உடலுக்கு நச்சுத்தன்மையை அளிக்கும் சமையலறைப் பொருட்கள் மற்றும் அதற்கான சிறந்த மாற்றுப்பொருட்களைப் பற்றிக் கிழே காணலாம் வாருங்கள்,

1. அலுமினியம்

1. அலுமினியம்

இப்பொழுது மிக இலேசான அலுமினியத் தகடை (foil) பெரும்பாலான மக்கள் தங்கள் மீன்/மாமிசம் அல்லது காய்கறிகளை வறுக்கப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சிலர் மாவை அவனில் பேக்கிங் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இந்த மாதிரியான ஃபாயில்கள் மற்றும் அலுமினியத்தாலான பாண்டங்களைத் தூக்கி எரியும் நேரம் இது. இதைப் படித்த பிறகு மீண்டும் இந்த உலோகத்தைப் பயன்படுத்துவது பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.அல்ஜீமர்'ஸ் நோயைப்பற்றிய ஒரு பத்திரிக்கையின் கட்டுரையில், இந்த மாதிரியான அலுமினியப்பயன்பாடுதான் கொடிய அல்சைமர் மற்றும் பிற நரம்பியல் நோய்களுக்கான காரணிகளாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது . ஆக்ஸிஜனேற்றப்பட்ட பெரும்பாலான அலுமினிய குக்வேர்கள் பயன்படுத்தப்படுவது பாதுகாப்பானது என்றாலும், சிலவகைகள் ஆக்ஸிஜனேற்றமடையாதது, எனவே இதை சமையலுக்குப்பயன்படுத்துவது ஆபத்து விளைவிக்கும் ஒன்றாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.

இதற்கான சிறந்த மாற்று தூய்மையான காகிதத்தாள், கண்ணாடி பொருட்கள் அல்லது பீங்கான்.

2. பெர்ஃப்ளூரோக்டோனிக் அமிலம்

2. பெர்ஃப்ளூரோக்டோனிக் அமிலம்

அதிக விழுக்காடு நான்-ஸ்டிக் பாத்திரங்களில் இந்த அமிலக்கலவை காணப்படுகிறது. பெரும்பாலான நான்-ஸ்டிக் பாத்திரங்களின் மேற்ப்பூச்சானது டெஃப்ளான் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த டெஃப்ளானை பாத்திரங்களில் நிரந்தரமாக பூச இந்த பெர்ஃப்ளூரோக்டோனிக் அமிலம் பயன்படுகிறது. கருவுறாமை, கற்றல் பலவீனம் மற்றும் எடை அதிகரிப்புக்கு இந்த இரசாயனம் காரணமாகிறது.புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் மனிதர்களின் புற்றுநோய்க்கு காரணியாக இந்த அமிலத்தை வகைப்படுத்தியுள்ளது. இதற்கான சிறந்த மாற்று இரும்பு, கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகுப் பாத்திரங்கள்.

3. பிஸ்பெனோல் ஏ

3. பிஸ்பெனோல் ஏ

சில நீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் ஸ்டோரச் கன்டைனர்ஸ், பிளாஸ்டிக் வடிகட்டிகள் , பிளாஸ்டிக்கிலான வெட்டும் பலகைகள் மற்றும் பிளாஸ்டிக்கிலான பல சமையளுக்குதவும் பொருட்களில் பிஸ்பெனொல் ஏ காணப்படுகின்றது. பிஸ்பெனோல் ஏ என்பது தண்ணீர் மற்றும் சோடா பாட்டில்களில் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் மிமிக் அமிலம் ஆகும். புற்றுநோய், மூளைவளர்ச்சி குறைப்பு , இதய பாதிப்பு மற்றும் கருவுறாமை போன்றவற்றுக்குக் காரணமாக இது அமைகிறது. பெரும்பாலான சமையல் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவுக் கொள்கலன்கள் இந்த இரசாயனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. அமில உணவு மற்றும் உப்பு உணவுகளை இதனாலான பாண்டங்களில் சமைக்கவோ அல்லது ஸ்டோர் செய்யவோ உபயோகப்படுத்துவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.

4. வினைல் குளோரைடு & பாலிவினைல் குளோரைடு

4. வினைல் குளோரைடு & பாலிவினைல் குளோரைடு

இது பொதுவாக கேன்கள் , ஸ்டோரேச் கன்டைனர்கள், உணவு சேமிப்பு பாக்கிங் பௌச்கள், சுருங்கக்கூடிய பிளாஸ்டிக்( ஸ்ரின்க் ராப்) போன்றவற்றில் காணப்படுகிறது. வினைல் குளோரைடு என்ற பொருளிலிருந்து தயாரிக்கப்படும் பாலிவினைல் குளோரைடு அல்லது பிளாஸ்டிக் ,மனிதர்களுக்கு உருவாகும் புற்றுநோய்க்கு காரணியாக அமெரிக்காவின் தேசிய நல நிறுவனத்தால்.அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சிறந்த மாற்று கண்ணாடி ஸ்டோரேச் பொருட்கள் மற்றும் சிலிகான் ஸ்டோரேச் பைகள்.

5. பாலித்திலீன் டெரெப்தலேட்:

5. பாலித்திலீன் டெரெப்தலேட்:

பாலித்திலீன் டெரெப்தலேட் பெரும்பாலும் உணவு சேமிப்பு கொள்கலன்களில்(கன்டைனர்ஸ்) காணப்படுகிறது. கடுகு பாட்டில்கள் மற்றும் சோடா பாட்டில்களில் இந்த வகை ரசாயனம் உள்ளது. இந்த இரசாயனமானது உங்கள் உடலில் இந்தவகை உணவுகளை உண்ணும்போது எளிதாக ஊடுருவுகிறது. இந்த ரசாயனம் உடலில் வீக்கம் உருவாதல் தொடர்பான வளர்சிதைமாற்ற நோய்க்குக் காரணியாக அமைகிறது. இதற்கான சிறந்த மாற்று கண்ணாடி மற்றும் பாதுகாப்பான பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும்.

6. பாலிஸ்டிரீனே

6. பாலிஸ்டிரீனே

ஒளிபுகும் பிளாஸ்டிக் சமையல் கருவிகள் மற்றும் ஸ்டைரோ போமிலான பொருட்கள், கப் மற்றும் கிண்ணங்களில் பாலிஸ்டிரீனே காணப்படுகிறது. ஸ்டைரோ போமிலான பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் இனிமேல் நன்றாக யோசியுங்கள். ஏனெனில் , மனிதர்களுக்கு வரும் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இதுவும் ஒரு காரணியாகும். இது உணவு மற்றும் குடி பானங்களின் வழியே எளிதாக உங்களுடலில் ஊடுருவுகிறது . இதில் அதிர்ச்க்குரிய விஷயம் என்னவெனில் , பெரும்பாலான உணவகங்கள் இதையே அதிக அளவில் பயன்படுத்துகின்றன.இதற்கான சிறந்த மாற்று மக்கக்கூடிய டேக்அவுட் பெட்டிகள்.

7. ப்ரோமினேட்டடு ஃப்ளேம் ரிடர்டன்ஸ்

7. ப்ரோமினேட்டடு ஃப்ளேம் ரிடர்டன்ஸ்

பிளாஸ்டிக் சமையல் கருவிகள் மற்றும் சமையல் பாத்திரங்களில் இந்த ப்ரோமினேட்டடு ஃப்ளேம் ரிடர்டன்ஸ் காணப்படுகிறது. பிளாஸ்டிக்கிளான திருப்பிக்கரண்டி மற்றும் ஸ்லாட்டடு கரண்டி போன்றவற்றில் புரோமைன் என்ற இந்த இரசாயனமிருக்கிறது. ஆய்வுகள் படி, கருவுற்ற தாய்மார்களுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தி குழந்தைகளின் எடைக்குறைப்பு மற்றும் குறைவான வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

இதற்கான சிறந்த மாற்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்

8. பாலி ப்லோரினேட்டட் கெமிக்கல்ஸ்

8. பாலி ப்லோரினேட்டட் கெமிக்கல்ஸ்

இந்த வகை ரசாயனங்கள் துரித உணவு சங்கிலி நிறுவனங்களின் உணவு பேகிங் ராப்பர்ஸ், பைகள் மற்றும் பாக்ஸ்களில் காணப்படுகிறது. அரசின் பல கட்டுப்பாடுகளையும் மீறி ஃபாஸ்ட் புட் உணவு நிலையங்கள் அதிக ஃப்ளூரைன் கெமிக்கல் பூசப்பட்ட பைகளையே இன்னும் தங்கள் உணவைப் பேக் செய்யப் பயன்படுத்துகின்றன. இந்தக் கெமிக்களினால் புற்றுநோய், வளர்ச்சிக்குறைவு , கருவுறுதல் குறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்சனைகள் உருவாகிறது.

இதற்கான சிறந்த மாற்று ,வீட்டில் சமைப்பதே.

9. பத்தலேட்ஸ் (Phthalates)

9. பத்தலேட்ஸ் (Phthalates)

சோடா பாட்டில்கள் மற்றும் மலிவான ஸ்ட்ராவில் இந்த Phthalates காணப்படுகிறது. இந்த பாட்டில்களை ஒருமுறைக்கு மேல் உபயோகப்படுத்துவது உங்களுக்கு நீங்களே குழி பறிப்பது போலாகும். இது உங்கள் குடி பானத்தில் பத்தலேட்ஸ் நச்சு இரசாயனத்தை எளிதாக ஊடுருவச்செய்யும். இது குழந்தைகளில் சுவாச பிரச்சனைகள், பலவீனமான கற்றல் மற்றும் வளர்ச்சி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கான சிறந்த மாற்று , கண்ணாடி மற்றும் உயர் அடர்த்தி பிளாஸ்டிக்கிலான பொருட்கள்.

10. டெஃப்ளான்

10. டெஃப்ளான்

இந்த நச்சு இரசாயனம் உங்கள் சமையலறையில் பெரும்பாலான நான்-ஸ்டிக் பாத்திரங்களில் மறைந்துள்ளது. ஆய்வுகளின்படி, டெஃப்ளானை சூடுபடுத்தும் பொழுது புற்றுநோயை உண்டாக்கும் குறைந்தபட்சம் ஆறு நச்சு வாயுக்களைக் அது வெளிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Scary Toxins Found In Cookware You Didn't Know

a fair portion of cookware and storage containers are full of toxins that can build up in the body and cause harm to your health.