For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயில் காலத்தில் மூக்கில் ரத்தம் வருவதை தடுக்கும் பாட்டி வைத்தியம்

மூக்கிலிருந்து ரத்தம் வருவது பற்றி பீதியடைய வேண்டாம். மூக்கிலிருந்து ரத்தம் வந்தவுடன், நகத்தினால் சொரிந்து கொள்ளத் தோன்றும்.

|

மூக்கிலிருந்து ரத்தம் வருவது பற்றி பீதியடைய வேண்டாம். மூக்கிலிருந்து ரத்தம் வந்தவுடன், நகத்தினால் சொரிந்து கொள்ளத் தோன்றும். ரத்தத்தை பார்த்தவுடன் பீதி அடையாமல் மனதை அமைதி படுத்தி நமக்கு நாமே இது கொஞ்சமான ரத்தம் தான் அதிகமில்லை என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக நினைக்காமல் என்ன காரணத்தினால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது என்று தெரிந்து கொண்டு அதை சரி செய்ய வேண்டும். ஆனால் வீட்டிலேயே சுலபமாக சரி செய்ய கூடிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

health

மூக்கிலிருந்து ரத்தம் வர என்னென்ன காரணங்கள் என்று பாப்போம்.
அதிகமாக தும்மல் வருவது, மூக்கை தேய்ப்பது, குளிர் காலத்தில் வீசும் உலர்ந்த காற்று, காயங்கள், அலர்ஜி, சைனஸ் போன்ற சுவாச கோளாறுகள், மலேரியா, டைபாய்டு போன்ற சிலவகை காய்ச்சல்கள். மூக்கிலிருக்கும் குறிகிய ரத்த நாளங்கள் வீங்கும் போது தொடர்ந்து ரத்தம் வரலாம். மூக்கில் யாரவது தாக்கும் போது கூட அடிபட்டு, அதிர்ச்சியில் ரத்தம் வரலாம். மூக்கிலுள்ள இரு ஜோடி ரத்த நாளங்களில் அடி பட்டாலும் ரத்தம் வரும். மூக்கிலிருந்து ரத்தம் வரும் சரியான காரணத்தை அறிந்து கொண்டால், நாம் அதற்கான சரியான சிகிச்சை பெற வசதியாக இருக்கும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தில் பல வகைகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கில் ரத்தம் வடிதல்

மூக்கில் ரத்தம் வடிதல்

அ. முன்புறம் ரத்தம் வடிதல் - மூக்கிலுள்ள ரத்த நாளங்களில் அடி பட்டால் வரும் ரத்தம். இதற்கு கேசெல்பக் ப்ளக்ஸஸ் என்று பெயர்.

ஆ. பின்புறம் ரத்தம் வடிதல் - தொண்டைக்கு அருகில் உள்ள ரத்த நாளங்களில் அடி பட்டால் இவ்வாறு ரத்தம் வரும். இது இருபது நிமிடங்கள் வரை நீடிக்கும். முன்புற ரத்தம் வடிதலை விட அதிகமான ரத்தம் வடிந்தால் இதற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

எப்படி சரி செய்வது?

எப்படி சரி செய்வது?

எப்படி இருந்தாலும் பயப்பட தேவை இல்லை. பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் மூக்கிலிருந்து ரத்தம் வருவது பல சமயங்களில் தீங்கற்றதாகவே இருக்கும். வீட்டிலேயே சுலபமாக வைத்தியம் செய்து கொள்ளலாம். மூக்கிலிருந்து ரத்தம் வருவதை சரி செய்ய தேவையானவை

எஸென்ஷியல் எண்ணெய்

எஸென்ஷியல் எண்ணெய்

2-3 சொட்டு லாவெண்டர் எண்ணெய் அல்லது சைப்ரஸ் எஸென்ஷியல் எண்ணெய்

• ஒரு கப் தண்ணீர்

• ஒரு காகித துண்டு

எண்ணையை தண்ணீரில் கலக்கவும்.

2. காகித துண்டை அதில் முக்கி அதில் உள்ள நீரை பிழியவும்.

3. அந்த காகித துண்டை மூக்கில் வைத்து மென்மையாக இரண்டு நிமிடங்கள் அழுத்தவும். உங்களுக்கு எண்ணையால் தொந்தரவு இல்லை என்று தெரிந்தால் நேரடியாக இரு துளிகள் மூக்கினுள் விடலாம். ரத்தம் நிற்கும் வரை இரு நிமிடங்களுக்கு ஒருமுறை இதை செய்ய வேண்டும். சைப்ரஸ் எண்ணெயில் காயங்கள் மற்றும் மூக்கிலிருந்து வடியும் ரத்தத்தை நிறுத்தும் காரணிகள் உள்ளன. அதுவே மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை நிறுத்துகிறது. லாவண்டர் எண்ணெய் மூக்கிலுள்ள காயங்களை குணப்படுத்துகிறது.

வெங்காயம்

வெங்காயம்

தேவையானவை

1/4 வெங்காயம்

பஞ்சு

வெங்காயத்தை துருவி அதிலுள்ள சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பஞ்சை அதில் நனைத்து பாதிக்கப்பட்ட மூக்கின் மேல் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வைக்க வேண்டும். அல்லது எளிதாக ஒரு வெங்காயத் துண்டை மூக்கினடியில் வைத்து அதன் வாசணையை நுகரலாம். தேவைப்படும்போது எல்லாம் இதை செய்யலாம். சீன மருத்துவர்கள் ரத்தம் உரைதல் மற்றும் ரத்தப்போக்கிற்கு வெங்காய சாற்றிலிருந்து வரும் நெடி சிறந்த மருந்து என்று கண்டறிந்துள்ளனர்.

ஐஸ் கட்டி ஒத்தடம்

ஐஸ் கட்டி ஒத்தடம்

தேவையானவை

ஐஸ் கட்டிகள், ஒரு காட்டன் துண்டு

1. ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் சுற்றி மூக்கின் மேல் வைக்க வேண்டும்.

2. நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

எப்போதெல்லாம் செய்ய வேண்டும்

ரத்தம் வடிதல் நிற்கும் வரை சில மணி நேரங்கள் இடை வெளி விட்டு மீண்டும் செய்யலாம். ஐஸ் கட்டிகளில் உள்ள குளிர் ரத்தத்தை விரைவாக உறைய வைத்து ரத்தம் வடிதலை சரி செய்கிறது.

வைட்டமின் E

வைட்டமின் E

1. வைட்டமின் E மாத்திரைகளை உடைத்து அதிலுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

2. அந்த எண்ணையை மூக்கினுள் ஊற்ற வேண்டும்.

3. இரவு முழுதும் அப்படியே விட வேண்டும்.

மூக்கினுள் உலர் தன்மையை உணரும் போதெல்லாம் இதை செய்யலாம்.

மூக்கிலுள்ள படலங்களை ஈரப்பதமாக வைத்து கொள்ள வைட்டமின் E எண்ணெய் பயன்படுகிறது. இது நம் தோலை மிகவும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும். இது மூக்கிலிருந்து ரத்தம் வடிதலை தடுக்க இது சிறந்த சிகிச்சையாக உள்ளது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர்

பஞ்சு

பஞ்சை வினிகரில் நனைத்து பாதிக்கப்பட்ட மூக்கினுள் எட்டு அல்லது பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இது முதல் முறையிலேயே ரத்தம் வடித்தலை சரி செய்து விடும். வினிகரில் உள்ள அமிலம் ரத்த நாளங்களில் உள்ள சுருக்கங்களை அகற்றி ரத்தம் வடித்தலை நிறுத்துகிறது.

சிவப்பு மிளகு

சிவப்பு மிளகு

1/8 - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகுத் தூள்

1 டம்பளர் வெதுவெதுப்பான நீர்

மிளகுத்தூளை நீரில் கலந்து குடிக்க வேண்டும். மூக்கிலிருந்து ரத்தம் வர ஆராம்பித்த உடனேயே இதை செய்ய வேண்டும். சிவப்பு மிளகு ரத்தம் உறையும் தன்மையை சரி செய்து மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்துகிறது.

கோல்டன்சீல்

கோல்டன்சீல்

கொஞ்சம் கோல்டன்சீல் இலைகள்

ஓரு கப் சூடான நீர்

1. கோல்டன்சீல் இலைகளை சில நிமிடங்கள் நீரில் கொதிக்கவைக்க வேண்டும்.

2. நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் இதில் ஆவி பிடிக்க வேண்டும். மூக்கில் ரத்தம் வடியும் போதெல்லாம் இதை செய்ய வேண்டும். இரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் இரத்த உறைதலுக்கு இந்த மூலிகைகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றன. இது தொற்றுநோயை தடுக்க உதவும். இதிலுள்ள ஆண்டிமைக்ரோபயல் செயல்பாடு, உறையவைக்கும் தன்மை, கட்டுப்படுத்தும் தன்மை போன்றவை மூக்கில் ரத்தம் வருதலை நிறுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த சிகிச்சையை பயன்படுத்தக்கூடாது.

விட்ச் ஹேசல் (சூனிய வகை காட்டு செடி)

விட்ச் ஹேசல் (சூனிய வகை காட்டு செடி)

விட்ச் ஹேசல் சாறு

பஞ்சு

பஞ்சை விட்ச் ஹேசல் சாறில் நனைத்து மூக்கினுள் வைக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து அதை எடுத்து விட வேண்டும். தேவைப்படும் போது எல்லாம் செய்யலாம். இதில் உள்ள கட்டுப்படுத்தும் காரணிகள் மூக்கில் ரத்தம் வருவதை நிறுத்துகிறது.

பூனைக்காஞ்சொறிச் செடி இலை

பூனைக்காஞ்சொறிச் செடி இலை

பூனைக்காஞ்சொறிச் செடி இலை பொடி

ஒரு கப் நீர்

பருத்தி துணி

1. பூனைக்காஞ்சொறிச் செடி இலை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

2. குளிர்ந்தவுடன் பருத்தி துணியில் முக்கி மூக்கின் மீது வைக்க வேண்டும்.

3. பருத்தி துணியை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மூக்கில் ரத்தம் வருவது நிற்கும் வரை அப்படியே வைக்க வேண்டும்.வேண்டுமெனில் மீண்டும் இவ்வாறு செய்யலாம்.

மூலிகை கலவையில் உள்ள கட்டுப்படுத்தும், தடுக்கும் காரணிகள் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த மிகவும் உதவுகிறது. அலர்ஜியால் மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை கட்டுப்படுத்த, பூனைக்காஞ்சொறிச் செடி இலையில் தயாரித்த தேநீர் குடிப்பது மிகவும் உதவுகிறது.

மேற்கண்ட எளிய வழிகளில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதலை நிறுத்தலாம். இவை இயற்கையான வழிகளில் தீய பக்க விளைவுகளின்றி மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்துகிறது.

நேராக அமரவும்

நேராக அமரவும்

நீங்கள் அமரும் விதம் மூக்கில் ரத்தம் வருவதை நிறுத்த வழிவகை செய்யும். முதலில் நேராக அமைதியாக அமரவும். சாய்ந்து அமர்ந்தால் மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்கு சென்றுவிடும். வாயினால் சுவாசித்து, தலையை முன்னோக்கி வைக்கவும். இந்த எளிய முறை மூக்கிலிருந்து சிறிய அளவிலான ரத்தம் வருதலை சரி செய்யும்.

அழுத்தம் கொடுக்கவும்.

அழுத்தம் கொடுக்கவும்.

உங்கள் கட்டை விரல் மற்றும் மற்ற விரல்களால் மூக்கினை மென்மையாக பத்து நிமிடம் வரை அழுத்தவும். இது ரத்தம் வருவதை குறைக்க உதவும். அதிகமாக அழுத்தம் கொடுக்க கூடாது. பத்து நிமிடங்களுக்கு பிறகு ரத்தம் நின்று விட்டதா என பார்க்கவும்.

நிறைய நீர் அருந்தவும்

நிறைய நீர் அருந்தவும்

மூக்கில் ரத்தம் வர நீரிழப்பும் ஒரு காரணம். உலர்ந்த வெப்ப நிலை நிலவும் காலங்களில் நிறைய நீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உளர் பனி காலங்களில் உங்கள் மூக்கு உலர்ந்து ரத்தம் வருவதற்கு காரணமாகி விடும். ஒரு நாளைக்கு எட்டு டம்ப்ளர் தண்ணீர் அருந்துவது நலம்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

மூக்கில் உலர் தன்மை நிலவும் போது அது மூக்கிலிருந்து ரத்தம் வருவதற்கு காரணாமாகலாம். பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதால் மூக்கின் வறட்சியைத் தடுக்கலாம். மூக்கின் உட்சுவர்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுவதால் அவை ஈரப்பதத்துடன் இருக்கும். சளி, சைனஸ் அல்லது அழுத்தத்தால் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த இது மிகவும் பயனுள்ள முறை.

வைட்டமின் C மற்றும் வைட்டமின் K

வைட்டமின் C மற்றும் வைட்டமின் K

சவ்வுகளை நிறுவுவதில் வைட்டமின் C முக்கிய பங்காற்றுகிறது. இது மூக்கினுள் ஈரப்பதம் சரியான அளவில் இருக்க உதவுகிறது. ரத்த நாளங்களை சரியான முறையில் பராமரித்து, காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்த நீண்ட கால நிவரணத்திற்கு வைட்டமின் C நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். வைட்டமின் K அதிகம் நிறைந்த அடர்ந்த பச்சை நிற காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு எளிமையான வழிகளில் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை நிறுத்தி நிம்மதியாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Effective paati vaithiyam To Stop Nose Bleeding

A bleeding nose can be scary. Fortunately, more often than not, nosebleeds are nothing to panic about.
Desktop Bottom Promotion