For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்கள் எனர்ஜியை திரும்பப் பெறுவதற்கான 7 வழிகள்!!

  By Ambika Saravanan
  |

  மாறிவரும் உணவு முறை, வேலைநேரம், போக்குவரத்து இத்தகைய காரணங்களால் நடுத்தர வயதினர் அவர்களின் ஆற்றலை இழந்து அதிக சோர்வுடன் காணப்படுகின்றனர்.

  Tips to get back your energy

  அவர்கள் இழந்த ஆற்றலை திரும்ப பெறுவது மிகவும் சுலபம். இதன் மூலம் அதிக ஆற்றல் பெறுவதோடு வயது முதிர்வையும் கட்டுப்படுத்தி இளமையை தக்க வைக்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   உடல் பிரச்சனைகளை களைந்திடுங்கள்:

  உடல் பிரச்சனைகளை களைந்திடுங்கள்:

  நீரிழிவு நோய், இதய நோய், இரத்த சோகை,தைராய்டு ,கீல்வாதம்,தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற நோய்களுக்கு சோர்வு ஒரு பொதுவான குறியீடு.

  நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். சோர்வின் காரணத்தை அறிந்து அதை களைய முற்படுங்கள் . சில இரத்த அழுத்த மருந்துகள், ஆன்டிஹிஸ்டமின்கள், நீரிழிவு, மற்றும் பிற மருந்துகள் சோர்வை போக்கும் .

  பயிற்சிகள்:

  பயிற்சிகள்:

  உங்கள் சோர்வை போக்க கூடிய ஒரு முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதால் நமது ஆற்றல் அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

  "உடற்பயிற்சியானது தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட வீரியத்துடன் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது," என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின், இயற்பியல் பேராசிரியர் கெர்ரி கூறுகிறார். சுறுசுறுப்பாக இருப்பவர்கள் அதிக தன் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி இதயம், நுரைஈரல், மற்றும் தசைகளின் திறனை மேம்படுத்துகின்றன என்று கெர்ரி கூறுகிறார். ஒரு கார் நன்றாக ஓடுவதற்கு ஒரு எரிபொருளின் தேவையை போல் மனிதனின் செயலாற்றலுக்கு உடற்பயிற்சியின் தேவை உள்ளது என்று கூறுகிறார்.

  குறிப்பாக யோகா செய்வதன் மூலன் நமது ஆற்றல் அதிகரிக்கிறது. பிரிட்டிஷில் நடந்த ஒரு ஆய்வில், வாரம் ஒரு முறை என்று ஆறு வாரங்கள் யோகா பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களின் ஆற்றல், நம்பிக்கை மற்றும் தெளிவான சிந்தனையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

  இந்த பயிற்சிக்கு வயது ஒரு தடை அல்ல. 65-85 வயது உள்ள முதியவர்களுக்கு நடத்திய ஆய்வில் அவர்களின் உடலிலும் வியத்தகு மாற்றங்கள் உண்டானதை பகிர்ந்துள்ளனர்.

  தண்ணீர் அதிகமாக குடியுங்கள்:

  தண்ணீர் அதிகமாக குடியுங்கள்:

  உடலில் நீர் வறட்சி ஏற்படும்போது அது உடலின் செயல் திறனை பாதிக்கிறது.நீர் வறட்சி அதிகமாகும்போது சோர்வும் அதிகமாகிறது. இதனால் கவன சிதறல் ஏற்படுகிறது.

  நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்று தெரிந்துகொள்வது எப்படி? "சிறுநீர் மஞ்சள் அல்லது வைக்கோல் நிறமாக இருக்க வேண்டும்," என்கிறார் ஜுதேன்சன். "அதை விட அடர்த்தியாக இருந்தால், நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்."

   சீக்கிரமாக உறங்குங்கள்:

  சீக்கிரமாக உறங்குங்கள்:

  தூக்கமின்மையால் சோர்வு அதிகரிக்கிறது. இதனால் பல விபத்துகள் கூட ஏற்படுகிறது. போதுமான உறக்கம் கிடைக்க இரவில் சீக்கிரம் உறங்க செல்வது அவசியம்.

  மதிய வேளையில் 10 நிமிடங்கள் உறங்குவது ஆற்றலை மேம்படுத்துகிறது. மதிய உறக்கம் அதிக பட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நேரம் அதிகமாகும் போது இரவின் உறக்கம் குறையும்.

   மீன் உணவு எடுத்து கொள்ளுங்கள்:

  மீன் உணவு எடுத்து கொள்ளுங்கள்:

  ஒமேகா 3 எண்ணெய்கள் இதயத்திற்கு வலு சேர்கின்றன. கவனத்தை கூர்மை ஆக்குகின்றன.21 நாட்கள் தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் மன நலன் அதிகரித்ததாக 2009ம் ஆண்டின் ஒரு ஆய்வில் இத்தாலி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  அதிக எடையை குறையுங்கள்:

  அதிக எடையை குறையுங்கள்:

  உடலின் செயல்பாடு மற்றும் சமசீர் உணவை கொண்டு நமது உடலின் அதிக எடையை குறைப்பதன் மூலம் நமது ஆற்றல் அதிகமாவதை நம்மால் உணர முடியும். தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்து குறைவதால் நமது மனநிலை, வீரியம், மற்றும் வாழ்க்கை தரம் மேம்படுகின்றன.

   அடிக்கடி சாப்பிடுங்கள்:

  அடிக்கடி சாப்பிடுங்கள்:

  சிலர் குறைந்த இடைவெளியில் அடிக்கடி உனவு அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பர். இப்படி செய்வது இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகிறது .

  முழு தானியங்களை சேர்த்துக் கொள்வது செரிமானத்தில் நேரத்தை அதிகமாக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் குறைகிறது. இதன் மூலம் நமது ஆற்றல் சீராக பரவுகிறது.

  அடிக்கடி உணவு உண்ணும் போது உணவின் அளவை சரி பார்ப்பது அவசியம் . இல்லையென்றல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் ஏற்படலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Tips to get back your energy

  Tips to get back your energy
  Story first published: Monday, August 21, 2017, 17:12 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more