For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரக செயலிழப்பு இருப்பவர்கள் ஏன் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது? உங்க கேள்விகளுக்கு பதில்!!

சிறுநீரக பாதிப்பு மற்றும் செயலிழப்பின் அறிகுறிகள், வந்தால் கடைபிடிக்க வேண்டியவைகள், அதனை தடுக்கும் முறைகளை மருத்துவர் சொல்லும் வழிமுறைகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

சிறு நீரகம் மிக முக்கியமான எப்போதும் அலார்டாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று. நாம் வாயில் போடும் எல்லாவ்ற்றிலிருந்து பிரித்தெடுத்து கழிவுகளை அவ்வப்போது அகற்றிக் கொண்டே இருக்கவேண்டும். நல்ல கனிமங்களை ரத்தத்திற்கு சேர்க்க வேண்டும். நச்சுக்களை வெளியேற்ற வேண்டும்.

Things you should do to prevent kidney failure

இப்படி எப்போது குடும்பத்திலுள்ள தாயைப் போல் உழைத்துக் கொண்டிருக்கும் பணிதான் சிறு நீரகத்தின் பணி. அந்த சிறு நீரகம் எப்படி பாதிக்கப்படும். பாதிப்பு உண்டாகாமல் தடுப்பது எப்படி என பல சந்தேகங்கள் உங்களுக்கு உண்டாகலாம். அதற்கான பதில்கள் சிறு நீரகத் துறையின் சிறந்த மருத்துவரான திரு சௌந்தர ராஜன் கூறிய பதில்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.

பாதிப்பு உண்டாக்கும் வேறு காரணங்கள்

பாதிப்பு உண்டாக்கும் வேறு காரணங்கள்

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி க்காய்ச்சல் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது?

அதை எப்படி கண்டுபிடிப்பது?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த சிறுநீரக இயக்கச் சோதனை செய்துகொள்வது நல்லது.

சிறு நீரக பாதிப்பின் அறிகுறிகள் :

சிறு நீரக பாதிப்பின் அறிகுறிகள் :

கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எப்படி சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்?

எப்படி சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது,

காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

உணவு முறைகள் என்ன?

உணவு முறைகள் என்ன?

எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?

எந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள், பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள்.

அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things you should do to prevent kidney failure

Things you should do to prevent kidney failure
Story first published: Wednesday, April 19, 2017, 17:05 [IST]
Desktop Bottom Promotion