ஆண்மை அதிகரிக்க ஏன் பச்சைத் தண்ணில குளிக்கச் சொல்றாங்க தெரியுமா?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையினர் குளிப்பதையே சோம்பேறித்தனமாக செய்கிறார்கள். விடுமுறை நாட்களில் குளிப்பதற்கும் சேர்த்து விடுப்பு அளிக்கலாமா என்று யோசிக்கின்றனர்.

ஆபீசுக்கு போக வேண்டும் என்பதற்காக குளிக்க நினைக்கும்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றால் இன்னும் அலர்ஜி. வெந்நீரில் குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி அப்பப்பா ; சொல்வதற்குள்லேயே டயர்ட் ஆகுது...

சுவீடனில் நடந்த ஒரு ஆய்வில், வீட்டிற்குள் குழந்தைகளை குளிக்க வைக்காமல், வீட்டின் வெளிபுறத்தில் குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பதால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி மற்றவர்களை விட அதிகரித்து காணப்படுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன . அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வருவதாக கண்டறியப்பட்டது.

நன்றாக குளியுங்கள்... வெந்நீரில் அல்ல.. குளிந்த நீரில் ! இந்த குளிர்ந்த நீர் குளியல் பற்றியது தான் இந்த தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

குளிர்ச்சிக்கு நம்மை உட்படுத்துவது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்ந்த நீர் நம் உடலை நனைப்பதால் ஏற்படும் நடுக்கத்தால் , வளர் சீதை மாற்றத்தின் எண்ணிக்கை உயருவதாக கூறப்படுகிறது.

இதனை ஆய்வு செய்து பார்த்ததில், 6 வாரங்கள் குளிர்ந்த நீரில் குளித்தவர்களின்,இரத்த நீர் அதிகரித்ததாகவும், T செல்கள் மற்றும் லிம்போசிட்க்கள் அதிகரித்ததாகவும் கூறுகின்றனர்.

நோய்களை எதிர்த்து போராடுவதற்காக செல்களில் உள்ள கழிவுகளை களைவதே நிண நீர் இயக்கத்தின் பணியாகும். தசைகளின் சுருங்கி விரியும் தன்மையால் இந்த இயக்கம் உடல் முழுவதிலும் சுழல்கிறது. குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் சுருங்கி , இந்த நிணநீர் உடல் முழுதும் பாய்வதற்கான வழிகளை செய்கிறது.

கொழுப்பு குறைகிறது:

கொழுப்பு குறைகிறது:

குளிர்ந்த நீரில் குளிக்கும்போது, உடலுக்கு அதிக வெப்பம் தேவை படுகிறது. உடலை வெப்பம் அடைய செய்ய அதிக ஆற்றல் தேவை படுகிறது. அதிக ஆற்றல் பெற உடல் உழைக்கும் போது அதிக கொழுப்புகள் எரிக்கப்படுகிறது .

குளிர்ச்சியாய் இருக்கும் போது உடல் பழுப்பு நிற கொழுப்புகளை ஊக்குவிக்கின்றன . உடலுக்கு வெப்பத்தை உருவாக்க இந்த கொழுப்புகள் உதவுகின்றன. இது வளர்சிதையை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :

தொடர்ந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. உடலில் உண்டாகும் குளிர்ச்சி, உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்ல உதவுகிறது. இதனால், உடல் அதிக அளவு இரத்த சுழற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது .

தட்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது:

தட்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது:

உடலில் வெப்ப இழப்பை குறைக்க உதவும், உங்கள் முக்கிய உடல் வெப்பநிலையை குறைக்க, மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த குளிர்ந்த நீர் உதவுகிறது. .

மனச்சோர்வின் அறிகுறிகளில் இருந்து காக்கும்:

மனச்சோர்வின் அறிகுறிகளில் இருந்து காக்கும்:

நமது சருமத்தில் அதிகமான குளிர் வாங்கிகள் உள்ளதால், குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நரம்புகளில் மின் தூண்டுதல்கள் ஏற்பட்டு அவை மூளைக்கு செல்கின்றன. அதனால் மனம் புத்துணர்ச்சி அடைந்து மனச்சோர்வு வெளியேறுகிறது. அதனால் , உடல் சோர்வாக உணரும் போது, குளிர்ந்த நீரில் குளித்து புத்துணர்ச்சி அடையுங்கள்.

ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல்:

ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல்:

சருமத்தில் உள்ள துளைகளை குளிர்ந்த நீர் மூடுகிறது. துளைகள் மூடியிருப்பதால், சருமம் மென்மையாக இருக்கும்.ஆரோக்கியமாகவும் இருக்கும். வெந்நீரால் சருமத்திற்கு வறட்சி ஏற்படும்.

டெஸ்டோஸ்ட்டிரோன் அதிகரிப்பு:

டெஸ்டோஸ்ட்டிரோன் அதிகரிப்பு:

5 முதல் 10 நிமிடங்கள் குளிந்த நீரில் குளிப்பதால், உடலில் டெஸ்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் சுரக்கிறது. ஆண்களின் ஆண்மை இயக்கத்தை இந்த ஹார்மோன் அதிகரிக்கிறது.

ஆற்றல் அதிகரிக்கிறது :

ஆற்றல் அதிகரிக்கிறது :

நம்மை விழிப்படைய செய்யும் திறன் குளிர்ந்த நீரை தவிர வேறெதற்கும் இல்லை. குளிர்ந்த நீரில் குளிப்பதால், நரம்புகள் முறுக்கேறுகின்றன. இதயம் வேகமாக செயல்பட தொடங்குகிறது. சீரான சுவாசம் கிடைக்கப்படுகிறது.

மற்ற நன்மைகள்:

மற்ற நன்மைகள்:

தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த தீர்வாக சொல்லப்படுவது, இரவில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு உறங்குவதை தான். உடற்பயிற்சிக்கு பிறகு உடலில் வீக்கம் ஏற்படாமலிருக்க விளையாட்டு வீரர்கள் குளிர் நீர் குளியலை மேற்கொள்கிறார்கள். குளிர்ந்த நீரில் குளித்து முடித்தவுடன் உடலில் சுத்தமான ஊட்டச்சத்துள்ள இரத்தம் பாய்கிறது. இது தசைகளையும் தசை நார்களையும் சீராக்குகிறது.

குளிர்ந்த நீர் குளியல், உடல் வலி, நாட்பட்ட வீக்கம் ஆகியவற்றை குறைக்கிறது. முடிக்கு ஆரோக்கியம் தருகிறது. சிறுநீரகத்தை சீரான முறையில் செயலாற்ற வைக்கிறது. நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. சுவாசத்தை ஆழமாக்குகிறது. சோர்வை போக்கி, ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கிறது.

என்ன வாசகர்களே! குளிர்ந்த நீரின் பயன்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறதா? மழை காலம் தொடங்கி விட்டது. வெந்நீரை பயன்படுத்தாமல் குளிந்த நீரில் குளித்து ஆனந்தமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Taking bath in cold water gives tremendous benefits.

Taking bath in cold water gives tremendous benefits. This article describes in detail.
Story first published: Monday, September 4, 2017, 12:54 [IST]
Subscribe Newsletter