வெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

வெந்நீரை பருகுவதால் ஏற்படும் நல்ல விளைவுகளை பற்றி நாம் பல தொகுப்புகளில் பார்த்து இருப்போம். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, ஒரு செயலுக்கு நல்லது கெட்டது என இரன்டு தன்மைகளும் உண்டு. இந்த பதிவில் நாம் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் ஏற்படும் தீய விளைவுகளை பார்ப்போம்..வெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

மனித உடல் 70% தண்ணீரால் ஆனது. இதனால் உடல் நீர்ச்சத்தோடு இருக்க முடிகிறது. எல்லா உறுப்புகளில் இருந்தும் நீரின் வழியே நச்சுகள் வெளியேறுகின்றன. பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது.

சூடான நீரை பருகும்போது உதடுகள் அதன் அதிகமான சூட்டால் பாதிப்படையலாம் . . தாகம் எடுக்காத போது, சூடான நீரை பருகுவதால் உங்கள் கவனம் சிதற வாய்ப்புகள் உண்டு. . இரத்தத்தில் இருக்கும் எலெக்ட்ரோலைட் அதிக அளவு வெந்நீரால் நீர்த்து போகின்றன.

ஒரு நாளில் 6-8 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும் என்பது. ஆனால் அப்படி எந்த ஒரு கட்டாயமும் இல்லை. ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆகையால் தேவையான அளவு தண்ணீர் பருகுவது போதுமானது . அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகும் போது தண்ணீர் எம்மாத்திரம் ?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சூட்டு புண் ஏற்படலாம்:

சூட்டு புண் ஏற்படலாம்:

சூடான நீரை பருகும்போது உதடுகள் அதன் அதிகமான சூட்டால் பாதிப்படையலாம் . ஒரேயடியாக நிறைய வெந்நீர் பருகுவதை விட சிறிதளவு பருகி அதன் வெப்ப நிலையை உணர்ந்து பின் அதிகமாக பருகலாம்.

உள்ளுறுப்பும் பாதிக்கலாம்:

உள்ளுறுப்பும் பாதிக்கலாம்:

சூடான நீரை பருகும் உதடுகள் காயப்படுவதை போல் அந்த நீர் உள்ளிறங்கும்போது உணவு குழாயும், செரிமான பாதையும் பாதிப்படையலாம். உள்ளுறுப்புகளில் இருக்கும் வெப்ப நிலையை விடவெந்நீரில் வெப்ப நிலை அதிகம்.

தாகத்தின் போது தண்ணீர் பருகுங்கள்:

தாகத்தின் போது தண்ணீர் பருகுங்கள்:

தாகம் எடுக்காத போது, சூடான நீரை பருகுவதால் உங்கள் கவனம் சிதற வாய்ப்புகள் உண்டு. தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் பருக வேண்டும். அதிகமாக வெந்நீர் பருகும்போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைகின்றன. இதனால் வேறு சில பாதிப்புகள் தோன்றலாம்.

தூக்கத்தை பாதிக்கிறது:

தூக்கத்தை பாதிக்கிறது:

இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன் அதிகமாக தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது தூக்கத்தின் தன்மையை பாதிக்கிறது. மேலும் சிறுநீர் தொந்தரவால் தூக்கமும் தடை படுகிறது.

சிறுநீரகத்தை பாதிக்கிறது:

சிறுநீரகத்தை பாதிக்கிறது:

உடலில் இருந்து தேவைக்கு அதிகமான தண்ணீரை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் வேலையாகும். சூடான நீர், நச்சுகளை வெளியேற்றும் என்று நினைத்து அதிகமாக வெந்நீர் பருகினால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சிறுநீராத்தின் வேலை அதிகரிப்பதோடு வெந்நீர் சிறுநீரகத்திற்கு சேதமும் விளைவிக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

எலெக்ட்ரோலைட்களை நீர்த்து போக வைக்கிறது :

எலெக்ட்ரோலைட்களை நீர்த்து போக வைக்கிறது :

இரத்தத்தில் இருக்கும் எலெக்ட்ரோலைட் அதிக அளவு வெந்நீரால் நீர்த்து போகின்றன. இதனால் செல்களில் வீக்கம் ஏற்படுகின்றன. இந்த வீக்கத்தால் ஏற்படும் அழுத்தத்தால், தலைவலி , மூளை அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

மூர்ச்சையடைதல்:

மூர்ச்சையடைதல்:

எவ்வளவு சூடு நீர் பருகுகிறோம் என்று தெரியாத அளவிற்கு பருகும்போது, பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எல்லாம் சேர்ந்து மூளைக்கு அழுத்தத்தை கொடுக்கின்றன. இதனால் மூர்ச்சையாகும் நிலை அல்லது வேறு பல கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

 வெந்நீரில் தொற்றுப் பொருட்கள்:

வெந்நீரில் தொற்றுப் பொருட்கள்:

நேரடியாக குழாய் வழியே வரும் வெந்நீரில் பல விதமான தொற்றுகள் இருக்கும் வாய்ப்பு அதிகம். குழாய்கள் பழையதாக இருக்கலாம், அவற்றுள் துறு பிடித்திருக்கலாம், இதனால் பல நச்சுகள் உள்ளெ செல்லலாம்.

குளிர்ந்த நீரை விட அதிகமாக வெந்நீரில் தொற்றுகள் கரையும் வாய்ப்பு உண்டு. ஆகவே குளிர்ந்த நீரை ஒரு பாத்திரத்தில் காய்ச்சி அந்த நீரை பருகலாம்.

தாகம் எடுக்கும்போது தண்ணீர் பருகுவது ஒன்று தான் இதற்கெல்லாம் தீர்வாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side effects of drinking hot water

Side effects of drinking hot water
Story first published: Thursday, September 21, 2017, 13:47 [IST]
Subscribe Newsletter