ஆறுவகை சக்கரம் உள்ள ஆற்றல் மிக்க பகுதி உங்க உடம்புல இதுதான்னு சொன்னா நம்ப மாட்டீங்க!!

By: Gnaana
Subscribe to Boldsky

தூய தமிழை எழுத்தில் கொண்டு வந்தால், புரியாத பாஷையில் பேசும் அந்நியன் போல பார்ப்பார்கள் என்பதை மெய்ப்பிக்கவே, இந்தத் தலைப்பு! தொப்புள் என தற்கால மொழி நடையில் அழைக்கப் படுவதன் பண்டைய பெயர்கள், உந்தி, நாபி மற்றும் கொப்பூழ் ஆகும். புரிந்ததா, நாம் ஆராய்ச்சிகள், விளையாட்டுகள் நடத்தியும், தொப்புள் குத்தி கம்மல் மாட்டிவைத்திருக்கும் அந்த உடல் பாகத்தின் பெயர்தான் கொப்பூழ் என்று!

பிறப்பின் போது, தாயின் கருவறைக்கும், குழந்தைக்கும் உள்ள பந்தத்தை விடுத்து, புற உலகைக் காண வருகையில், கொப்பூழ் கொடியெனும் குழந்தையின் வயிற்றில் இணைந்துள்ள தாயின் கருப்பைக் குழாய் வெட்டப்படும். வெட்டியபின்னர், காயம் ஆறிய பின், தோன்றுவதே, இந்த தொப்புள்.

நாம் தொப்புளில் உள்ள மருத்துவத் தன்மைகள் மூலம், உடலின் வியாதிகளை எப்படி போக்குவது என்று விளக்க வந்தாலும், சிலர் தொப்புள் என்ற தலைப்பால், வேறு விசயங்களைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வந்திருப்பர், அவர்களின் ஆவலைத் தீர்த்து விட்டு, நாம் தொப்புளின் அதிமுக்கிய உடல் பிணி போக்கும் தன்மைகளைப் பற்றி அறிவோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொப்புளின் சிறப்பம்சம் :

தொப்புளின் சிறப்பம்சம் :

சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேத முறையிலும், தொப்புள் உடலின் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்று. தொப்புளைச் சுற்றி, எழுபத்தியிரண்டாயிரம் நாளங்கள் அப்பகுதியில் இணைகின்றன, மேலும், உயிர்க் காற்று எனும் பிராணவாயு இவ்விடத்தில் சமான வாயு எனும் பெயரில் உடலின் செரிமானத்துக்கும், ஆற்றலுக்கும் உதவும் வண்ணம் நிறைந்துள்ளது.

சக்கரம் அமைந்த இடம் :

சக்கரம் அமைந்த இடம் :

குண்டலினி யோகத்தில் உடல் என்பது அறுவகை சக்கரங்களால் ஆனது, அதில் தீயின் ஆற்றல் எனக் கருதப்படும் மணிப்பூரக சக்கரம், தொப்புளில் அமைந்துள்ளது. மணிப்பூரக சக்கரத்தின் இறுதியில் அமுங்கி கிடக்கும் குண்டலினி ஆற்றலை எழுப்பும் சக்தி, பிரணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சிக்கு உள்ளது என்பர், யோகிகள்.

யோகா :

யோகா :

இது போல, மிகவும் சக்தியுள்ள தொப்புளை, நாம் முறையாக பராமரிப்பதில்லை, காதுகளில் அழுக்கு சேர்வதுபோல, தொப்புளில் அழுக்கு சேர்ந்தால், அரிப்பு மற்றும் கட்டிகள் உருவாகி விடும், இதைப் போக்க, சந்தனாதி தைலம் போன்ற மருந்துகளைத் தடவி குளிக்கும் போது, அவ்விடத்தில் நன்கு நீரூற்றி அலசிவர, சுத்தமாகும்.

முறையான உடற் பயிற்சிகள் இல்லாவர்களின் தொப்புள், சற்றே இடம் மாறியிருக்கும், அதனால் செரிமான பாதிப்புகள் உண்டாகும், இதை பிரணாயாமம் மற்றும் யோகாசனம் மூலம் சரிசெய்ய முடியும்.

இது போல, எண்ணற்ற மருத்துவ தகவல்கள் தொப்புள் பற்றி இருந்தாலும், சங்க காலத்தில் இருந்தே, தொப்புள் என்பது மகளிரின் அழகுக்கு அணியாக உருவகப் படுத்தப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் தொப்புள்!

தமிழ் இலக்கியங்களில் தொப்புள்!

பொருநராற்றுப்படை எனும் தொன்மையான நூல், தலைவியின் உடலினை வர்ணிக்கும்போது, "நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்" என்கிறது. அலையோடு சுழன்று செல்லும் நீரில், விரைவாகத் தோன்றும் சுழிபோல, அம்சம் பொருந்திய தொப்புள் என்கிறது. இதேபோல சிந்தாமணி மற்றும் குறிஞ்சிப்பாட்டு போன்ற பல அக வாழ்வை விளக்கும் நூல்களில், பெண்டிரின் கொப்பூழ் பற்றிய பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சங்க காலத்தில் தான் அப்படி என்றால், சமீப காலத்திலோ, உடலுக்கு நன்மைகள் செய்யும் அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக்கி, அதில் பம்பரம், பலகாரக்கடை நடத்துவது போன்ற அளவுக்கு சென்றுவிட்டனர். அதுதான் அப்படி என்றால், இன்றைய நிலையோ அதைவிட அதிகம், உடல் நாளங்களின் இயக்கத்துக்கு இணைப்பாக விளங்கும் அங்கு, வளையங்கள், கம்மல்கள் இவற்றை மாட்டும் ஸ்டேன்ட் ஆக்கி விடுகின்றனர்.

உண்மையில் தொப்புளின் ஆற்றல் தெரிந்தால், இதுபோன்ற, சிறுமையான விசயங்களை செய்ய யாரும் துணியமாட்டார்கள். இதில் ஜப்பானியர்கள் சற்று பரவாயில்லை, வயிறு மற்றும் தொப்புளில் சித்திரங்களை வரைந்து கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை, விழா எடுத்துக் கொண்டாடி மன நிவர்த்தி அடைகின்றனர்.

தொப்புளின் மகத்துவம்!

தொப்புளின் மகத்துவம்!

பெண்ணின் உடலில் கரு உருவாகும்போது, முதலில் உருவாவது, தொப்புள்தான், அதன்வழியேதான், பின்னர் தாயின் கருப்பைக் கொடி இணைந்து, கரு வடிவம் பெறுகிறது. குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் நாட்களில், அதற்கு உணவு, தாயின் தொப்புள் கொடி வழியே, குழந்தையின் தொப்புளுக்கு சென்று அங்கிருந்து, மற்ற பாகங்களுக்கு செல்கிறது. இப்போது தெரிகிறதா, மனிதர்க்கு எத்தனை முக்கியமான உறுப்பு, தொப்புள் என்று!

இன்னும் இருக்கிறது. உடலின் இரத்த நாளங்கள் தொப்புளின் பின்னே இணைகிறது என்று பார்த்தோம், அதனால், என்ன பாதிப்பு, என்ன நன்மை என்று அறிவோமா?

உடல் சூடு :

உடல் சூடு :

சிலருக்கு உடல் சூடாக இருக்கும், சிலருக்கு கண் பார்வை மங்கலாகும், சிலருக்கு உதடுகள் நாக்கு வறண்டு போகும், சிலருக்கு, மூட்டுகளில் கடும் வலி, கைகால்களில் வலி, அசதி போன்றவை ஏற்படும். இந்த பாதிப்புகளுக்கு என்னென்னவோ மருந்துகள் எடுத்தாலும், தீர்வு மட்டும் கிடைப்பதில்லை, என்று மன வேதனையில் சிலர் இருப்பர்.

கண் பார்வை கோளாறு :

கண் பார்வை கோளாறு :

கண் பார்வை சரியாகத் தெரியவில்லை, விரல் நகங்கள், உதடுகள் மற்றும் தலைமுடிகள் வறண்டு போகின்றன, இந்த பாதிப்புகள் நீங்கி, உடல் பொலிவாக, இவற்றுக்கும் தொப்புளினால் தீர்வு இருக்கிறது.

தேங்காய் எண்ணை மசாஜ் :

தேங்காய் எண்ணை மசாஜ் :

மேற்சொன்ன பாதிப்புகளுக்கு, தினமும் இரவில் உறங்குமுன், தொப்புளில் சில துளிகள் தேங்காய் எண்ணை விட்டு, கைவிரல்களால், மென்மையாக அப்பகுதியைச் சுற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர வேண்டும். காலையில் கண் விழிக்கும்போது, கண்கள் தெளிவாகத் தெரியும், உதடுகளின் வறட்சி நீங்கியிருக்கும், சில நாட்கள் தொடர்ந்து இப்படி செய்துவர, முழுமையாக பாதிப்புகள் விலகி, உடலும் புத்துணர்ச்சி அடையும். இதில் தேங்காய் எண்ணைக்கு பதில், நெய்யும் பயன்படுத்தலாம். இரண்டும் வயிற்றின் சூட்டைக் குறைக்கும் தன்மைமிக்கவை.

ஏன் தொப்புளில் எண்ணை தடவுகிறோம்?

ஏன் தொப்புளில் எண்ணை தடவுகிறோம்?

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, தொப்புளின் பின்புறம் ஆயிரக்கணக்கான இரத்த நாளங்கள் இணைகின்றன, அந்த இணைப்பில் நாம் தடவும் எண்ணை மூலமாக பாதிக்கப்பட்ட நாளங்களை அடைந்து, அவை குறிப்பிட்ட வியாதிகளைத் தீர்க்கின்றன.

செரிமான பாதிப்பு :

செரிமான பாதிப்பு :

நாம் பார்த்திருப்போம், செரிமானமின்மையால், குழந்தைகள் வயிற்றுவலிகளில் அழும்போது, வீட்டில் உள்ள பாட்டிகள், பெருங்காயம் அல்லது நல்லெண்ணையை தொப்புளைச் சுற்றி, இதமாகத் தடவி விடுவர். அதன்பின் குழந்தைகளின் அழுகை சில வினாடிகளில் மறைந்து, சிரிப்பு மலரும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

மேலே சொன்ன காரணம்தான், பிறந்த சில மாத குழந்தைகள் என்பதால், உடனே தீர்வு கிடைக்கும், ஆயினும், மனிதர்களுக்கும் உடனடி தீர்வு சாத்தியமே! முறையான வகையில் செய்துவந்தால்!எனவே, தொப்புள் என்பது, உடலின் முக்கியமான பகுதி என்பதை உணர்ந்து, நம் பிறப்பிலும் முக்கியமானது, நம் வாழ்விலும் பல்வேறு உடல் உபாதைகளைப் போக்கும்.

தொப்புள் பராமரிப்பு :

தொப்புள் பராமரிப்பு :

உடலினை அதிக சூட்டில் இருந்து காத்து, உடல் வலிகளைப் போக்கும், திறன் தொப்புளுக்கு உண்டு என்பதை அறிந்து, முறையாக தொப்புளை பராமரித்து வர, உடல் நலம் சீராகும். கவர்ச்சிப் பொருள் அல்ல, தொப்புள்,! அது மனிதர் பிறப்பு காக்கும் உறுப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Naval and Its importance on curing illness

Naval and Its importance on curing illness.
Story first published: Monday, November 6, 2017, 13:30 [IST]
Subscribe Newsletter