Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
அயோடைஸ்டு உப்பு சாதரணமானவர்களும் எடுத்துக் கொள்ளலாமா?
உப்பு உடலுக்கு தேவைக்கு அளவே போதுமானது. ஆனால் உப்பை அதிகம் எடுத்துக் கொளவ்தை போல், அயோடைஸ்டு உப்பை எடுத்துக் கொள்வதாலும் உண்டாகும் தீமைகளைப் பற்றியது இக்கட்டுரை.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கும் 5 கிராம் உப்பை எடுத்துக் கொண்டால் போதுமானது என உலக சுகாதர நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியர்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு 100 சதவீதம் அதிகம் என்று தகவலை அந்நிறுவனங்கள் கூறுகின்றன.
அதற்காக உப்பை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படும் நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக, உடலில் உப்பின் அளவு குறைவானால் மயக்கம் ஏற்படும்.எனவே, உணவில் அளவோடு உப்பை எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது . உப்பை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

உப்பு :
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது கடலிலிருந்து எடுக்கப்படும் தூய்மைப்படுத்தப்படாத, பதப்படுத்தப்படாத சாதா உப்பு. இதற்கு சோடியம் குளோரைடு என்று பெயர்.
இதில் உள்ள சோடியம் அயனியானது ரத்த ஓட்டத்தையும், ரத்த அழுத்தத்தையும் சமன் செய்யும். இவை சோடியம் குறைவாக இருக்கும்போது ஏற்படும் நன்மைதான். ஆனால், அதுவே அதிகமாகும்போது சிறுநீரக செயலிழப்பு போன்ற விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

அயோடைஸ்டு உப்பு எடுத்துக் கொள்வது நல்லதா?
அயோடின் குறைவாக இருப்பவர்கள் அயோடைஸ்டு உப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க கடலிலிருந்து பிரித்தெடுக்கபப்டும் உப்பை ரசாயான்ங்கள் கலந்து வெள்ளையாக்குகிறார்கள். இதனை ஆரோக்கியம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

அயோடைஸ்டு உப்பு புத்திக் கூர்மை தருமா?
அயோடைஸ்டு உப்பு எடுத்துக் கொண்டால் புத்திக் கூர்மை அதிகமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அயோடின் இயற்கையாக காய்கறிகளிலேயே இருக்கிறது. அவற்றை எடுத்துக் கொண்டால் போதுமானது

அயோடின் உப்பின் தீமைகள் :
அயோடின் குறைவாக இருப்பவர்களை தவிர்த்து சாதரணமாக மற்றவர்கள் எடுத்துக் கொண்டால் நன்மைகளை விட தீமைகள் அதிகம் உண்டாகும். இதனால் ஹைபர் தைராய்டு போன்ற ஆபத்தான நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

அயோடின் உப்பின் தீமைகள் :
அதோடு சாதரணமாகவே உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் அவை சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுக்கிறது. அதிலும் அயோடின் கலந்தவை இன்னும் சிறு நீரகத்தை பாதிக்கிறது.

கட்டுப்பு :
கட்டுப்பு என்பது உப்பில் பல்வேறு மூலிகை சாறுகளை கலந்து தயாரிக்கப்படுவது. இதனை மற்ற சாதா உப்புகளுக்கு பதிலாக எடுத்துக் கொண்டால் எந்தவித பாதிப்பை தராது.
ரத்தக் கொதிப்பை உண்டாக்காது. அவை சிறு நீரகம, வியர்வை போன்றவற்றால் வெளியேறுவதால் அவை சிறு நீரகத்திற்கு பாதகம் அளிக்காது.



Click it and Unblock the Notifications
