காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா நீங்கள்!! அதன் பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுகோங்க!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக எலுமிச்சை சாறு நல்லதுதான். நச்சுக்களை வெளியேற்றும். சிறு நீரக கற்களை வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இன்னும் பலவித நன்மைகளை நமக்கு தருகிறது. ஆனால் அதை எப்போது நீங்கள் குடிக்கிறீர்கள் என்பது முக்கியம்.

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பதை நிறைய பேர் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு குடிப்பதால் பலவித பாதிப்புகள் ஏற்படும்.

எலுமிச்சை சாறு குடித்தால் உடல் எடை குறையும் என லட்சக் கணக்கான மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கின்றனர். அப்படி குடிப்பதால் பல பிரச்சனைகள் உண்டாகிறது . அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்செரிச்சல் உண்டாகும் :

நெஞ்செரிச்சல் உண்டாகும் :

எலுமிச்சை சாறு நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே இருந்தால் நிலைமையை இன்னும் மோசமாக்கும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலியை உண்டு பண்ணும்.

 வயிற்றுக் கோளாறு :

வயிற்றுக் கோளாறு :

வயிறு உப்புசம், வயிறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் உனவுக்குத் தேவையான அமிலத்தை உடல் சுரக்கும்போது, எலுமிச்சையின் அமிலமும் சேர்ந்து சிக்கல்களை உண்டு பண்ணும்.

அல்சரை அதிகப்படுத்தும் :

அல்சரை அதிகப்படுத்தும் :

அல்சர் இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் உடனே எலுமிச்சை சாற்றினை வெறும் வயிற்றில் குடிப்பவர்கள் நிறைய உண்டு.

ஆனால் அது மிகவும் தவறு. அல்சர் இருப்பவர்களுக்கு குடலின் சுவரில் புண்ணாகியிருக்கும். அது ஆறுவதற்கு நாட்கள் பிடிக்கும். எலுமிச்சை சாறு குடிக்கும்போது அது புண்ணை இன்னும் அதிகப்படுத்தும். ஆற விடாது. ஆகவே எலுமிச்சை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள்.

GERD பாதிப்பை உண்டாக்கும் :

GERD பாதிப்பை உண்டாக்கும் :

GERD எனப்படும் அமிலம் அதிகப்படியான சுரந்து நெஞ்சு வரை பயவும் பாதிப்பை அதிகமாக்கிவிடும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறினை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதன் விளைவை இன்னும் மோசமாக்கிவிடும்.

நீர்ச்சத்து குறையும் :

நீர்ச்சத்து குறையும் :

எலுமிச்சை சாறு அடிக்கடி சிறு நீர் கழிப்பதை தூண்டும். அதிலுள்ள விட்டமின் சி உடலிலுள்ள சோடியத்தை அதிகம் வெளியேற்றும் பண்பு கொண்டது. இது நல்லது என்றாலும் எலுமிச்சை சாறினை அதிகம் குடிக்கும்போது அடிக்கடி சிறு நீர் கழிக்கத் தோன்றுவதால் சோடியம் அளவு வெளியேறிக் கொண்டேயிருக்கும்.

சிறு நீரக பிரச்சனைகள் :

சிறு நீரக பிரச்சனைகள் :

நிறைய பேர் எலுமிச்சை தோலை உணவில் சேர்க்க ஆரம்பிகிறார்கள். எலுமிச்சைத் தோலை வேக வைத்து குடிப்பதுண்டு. எலுமிச்சை தோலில் அதிக அக்ஸலேட் இருப்பதால் அதனை தினமும் சேர்த்துக் கொள்ளும்போது அல்லது வேக வைத்து குடிக்கும்போது அதிலுள்ள ஆக்சலேட் கற்களாக மாறி சிறு நீரக பிரச்சனையை தருவதுண்டு.

பித்தப்பை பிரச்சனைகள் :

பித்தப்பை பிரச்சனைகள் :

எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ அல்லது வெறும் வயிற்றில் குடித்தாலோ சிறு நீரகக் கற்கள் போல் பித்தப்பையிலும் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். அதன் தோல் வேக வைத்த நீர் குடிக்கும்போது ஆக்ஸ்லேட் எளிதில் பித்தப்பையை அடைவதால் இந்த பிரச்சனை உண்டாகும்.

பற்களை பாதிக்கும் :

பற்களை பாதிக்கும் :

வெறும் வயிற்றில் குடிக்கும்போது எலுமிச்சையின் அமிலத்தன்மை நேரடியாக பற்களின் மேல் படும். தொடர்ந்து அல்லது அடிக்கடி குடிக்கும்போது அதன் பல் எனாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் பல் கூச்சம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். பின் அதன் ஈறுகளும் வீக்கமடையும்.

எப்போது குடிக்கலாம் ?

எப்போது குடிக்கலாம் ?

அதற்காக எலுமிச்சை சாற்றினையே குடிக்கக் கூடாது என்பதில்லை. எலுமிச்சை சாறினை குடிப்பதால் ஸ்கர்வி நோயை குணமாக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.இது சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துகிறது. நச்சுக்களை அளிக்கின்றது

எப்படி குடிக்க வேண்டும்?

எப்படி குடிக்க வேண்டும்?

வெறும் வயிற்றில் அல்லது நாளுக்கு 4, 5 முறைகள் என குடிப்பது மிகவும் தவறு. ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது வாரம் 4 முறை என அளவோடு குடித்தால் அதன் அத்தனை நன்மைகளை பெறலாம். எலுமிச்சை சாறு செய்யும்போது அதில் உப்பு சிறிது சேர்த்தால் அதன் அமிலத்தன்மை மட்டுப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Impacts of drinking lemon juice on an Empty stomach

Impacts of drinking lemon juice on an Empty stomach
Story first published: Monday, December 18, 2017, 17:05 [IST]
Subscribe Newsletter