For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

தைராய்டு பிரச்சனை இன்று நிறைய பேருக்கு உள்ளது. இந்த தைராய்டில் இரண்டு வகை உள்ளது. அவை ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவையாகும். ஹைப்போ தைராய்டு என்றால், தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஒரு நிலையாகும். இது வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்து விடுவது சிறப்பாகும். இந்த பகுதியில் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருந்தால் உண்டாகும் அறிகுறிகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை அதிகரித்தல்

எடை அதிகரித்தல்

தைராய்டு ஹார்மோன் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால் உடல் எடை திடீரென அதிகரித்துவிடும். உடல் எடை அதிகரிப்பானது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிரித்து, உதிரப்போக்கை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் சுழற்சியானது 28 நாட்களுக்கு முன்னரே வந்துவிடும்.

சோர்வு

சோர்வு

தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்யாமல் இருந்தால், உடலில் சோர்வு அதிகமாக இருக்கும். இந்த சோர்வுக்கும் சாதாரண சோர்வுக்கு நன்றாக வித்தியாசம் தெரியும்.

கழுத்து வீக்கம்

கழுத்து வீக்கம்

தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்றால் கழுத்து பகுதியில் அமைந்துள்ள இந்த தைராய்டு சுரப்பியானது வீக்கமடைந்துவிடும். கழுத்து வீக்கமானது, அயோடின் குறைபாடு காரணமாக கூட ஏற்படும் எனவே கவனமாக இருக்க வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படவில்லை என்றால், மன கசப்பு, மன அழுத்தம் உண்டாகும். எந்த வேலையையும் தெளிவான சிந்தனையுடன் செய்ய முடியாது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் அனைத்து பல உடல்நிலை பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக அமையாமல், மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும்.

மூட்டு வலிகள்

மூட்டு வலிகள்

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவை தைராய்டு பிரச்சனைகளின் அறிகுறிகளாகும். எந்த ஒரு வேலையையும் வேகமாகவும், சீக்கிரமாகவும் செய்யமுடியாமல் ஒருவித மந்தநிலையுடன் இருக்க வேண்டியிருக்கும்.

கூந்தல் உதிர்தல்

கூந்தல் உதிர்தல்

கூந்தல் அளவுக்கு அதிகமாக உதிரும். இது தைராய்டு பிரச்சனை முற்றிவிட்டது என்பதை குறிக்கும். சில சமயம் முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தசைகள் பலவீனம்

தசைகள் பலவீனம்

தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், தசைப்பிடிப்பு ஏற்படுவதோடு, உடலில் ஆங்காங்கு வலியும் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Find that You have thyroid problem

How to Find that You have thyroid problem
Story first published: Monday, September 25, 2017, 11:20 [IST]
Desktop Bottom Promotion