ஒரு ஸ்பூன் படிகாரத்தூள் இருந்தா எந்த மாதிரியான நோய்களுக்கு நிவாரணம் பெறலாம் தெரியுமா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

சிறிதுகாலம் முன்பு வரை, படிகாரம், வீடுகளில் இருந்த முதலுதவிப்பெட்டிகளில் அதிகம் காணப்படும் ஒரு பொருளாக இருந்தது. சிறிய காயங்கள், உடல் வலி, பல் வலி, சரும பாதிப்புகள், இருமல், மூல வியாதி, கண் பாதிப்புகள் போன்றவற்றை, சரிசெய்ய பெரிதும் பயன்பட்ட ஒன்றாக விளங்கியது, படிகாரம்.

பார்த்திருக்கலாம், சில வீடுகளில், வீட்டின் வாசலில் படிகாரத்தை கட்டி தொங்கவிட்டிருப்பர், இதன் மூலம், திருஷ்டி போன்ற கெட்ட விசயங்கள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கவும், நச்சுக் காற்றை விலக்கவும் முடியும் என நம்பினர். இதேபோல, படிகாரத்தை லாரி, டிராக்டர், வேன் போன்ற கனரக வாகனங்களின் முன்புறம் கட்டி வைத்திருப்பபார்கள்.

சிலர், முடி வெட்டும் கடைகளில், ஷேவிங் செய்த பின்னர், முகத்தில் படிகாரத்தைத் தடவுவதைப் பார்த்திருப்பார்கள், எதனால், படிகாரத்தை முகத்தில் தடவுகிறார்கள், என்று சிலர் அறிந்திருக்கமாட்டார்கள். படிகாரம் சிறந்த கிருமிநாசினி, முக சவரத்தின்போது, சவரக் கத்தியினால், முகத்தின் மெல்லிய தோல்களில் சமயத்தில் சிறு இரத்தக் கீறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அந்த சமயத்தில், படிகாரத்தை முகத்தில் தடவிவர, காயங்களில் செப்டிக் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, இந்த படிகாரத்தை தடவுவர். தற்காலங்களில், இந்த முறை வழக்கொழிந்து விட்டது, கிராமங்களில் கூட, டெட்டாலும், ஆஃப்டர் ஷேவிங் லோஷன்களும் வந்துவிட்டன.

இதுபோல, வெளிப்பிரயோகத்திற்கு மட்டுமல்ல, உட்பிரயோகத்திற்கும் மிக்க நன்மைகள் தருவது, இந்த படிகாரங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி வளர :

முடி வளர :

சிலருக்கு, தினமும் குளித்து வந்து தலை சீவும்போது, சீப்பில் கொத்தாக முடிகள் உதிர்ந்து வருவதைக் கண்டு, கலக்கம் கொள்வார்கள், இப்படியே தலைமுடி கொட்டிவந்தால், சில காலங்களில் முடி முழுதும் கொட்டி, தலை வழுக்கையாகிவிடுமோ என்று, அதிலும் இளவயது பெண்கள் மற்றும் ஆண்களின் பெரும்பிரச்னையாக உருவெடுத்துவிடுகிறது, இந்த முடி கொட்டும் பாதிப்புகள்.

சாதாரணமாக தலைமுடி எல்லோருக்கும் தினமும் உதிரவே செய்யும், ஆயினும் அவை மீண்டும் வளர்ந்துவிடும் தன்மை மிக்கவை, தற்காலத்தில் சிலருக்கு, மிக அதிக அளவில் தலைமுடி உதிர்வதற்குக் காரணமாக இருப்பது, தலைக்கு குளிக்க உபயோகிக்கும் ஷாம்பூக்கள், அலோபதி எனும் மேலைமருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை, மாறுபட்ட உணவுவகைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவையாக இருக்கலாம், இவற்றின் காரணமாக, அதிகமாக தலைமுடி உதிர்தல் பாதிப்பு ஏற்படுகின்றன.

சிலருக்கு, தலைக்குத் தடவும் தேங்காயெண்ணை கூட காரணமாகிவிடுகிறது, அவற்றில் கலப்படம் இருப்பதால், .இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்யும்.

தலையில் முடி நன்கு கருகருவென வளரச்செய்யும் ஆற்றல்மிக்க படிகாரம்.

செய்முறை :

செய்முறை :

சோற்றுக் கற்றாழை மடல் ஒன்றை எடுத்து, அதில் உள்ள சதைப்பகுதியை எடுத்து, அதில் சிறிது தூளாக்கிய படிகாரத்தை மேலே இட்டு வைக்க, சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியில் உள்ள நீர், தனியே பிரிந்து இருக்கும். அந்த நீரை தனியே எடுத்து, அதே அளவில் நாட்டுச்செக்கில் எடுத்த நல்லெண்ணெய் கலந்து, நன்கு காய்ச்ச வேண்டும், தைலப்பதத்தில் இந்த எண்ணை காய்ந்ததும், எடுத்து வைத்துக்கொண்டு, தினமும் தலையில் தேய்த்து வரவேண்டும். சில நாட்களில், அதிக முடி கொட்டும் பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

முகக் கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய :

முகக் கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய :

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருத்தழும்புகள், முகத்தை அவலட்சணமாக்கிவிடும், நச்சுக்கிருமிகள் வியர்வை வழியே வெளியேற முடியாத அளவில், முகத்திற்கு இடும் லோஷன்கள், கிரீம்கள் மற்றும் பவுடர் பூச்சுக்கள் தடுத்து, அவை தோல் பகுதியில் வெளியேற வழியின்றி கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன. இந்த பாதிப்பை சரிசெய்ய, சிறிய படிகாரத்தை நீரில் நனைத்து, அதை முகத்தில் நன்கு மென்மையாக, கரும்புள்ளிகள், பருத்தழும்புகள் உள்ள இடங்களில் தேய்த்து வரவேண்டும். அதன் பின்னர் முகத்தை நன்கு நீர் விட்டு, கழுவி, படிகாரத்தூள் கலந்த நீரை, மீண்டும் ஒருமுறை, முகத்தில் நன்கு தடவி, சற்றுநேரம் கழித்து, முகத்தை வெறும் தண்ணீரில் சுத்தம் செய்துவர, கரும்புள்ளிகள், பருத்தழும்புகள் யாவும் மாயமாக மறைந்து விடும்.

உடல் சூட்டினால் ஏற்படும் சீதபேதிக்கு :

உடல் சூட்டினால் ஏற்படும் சீதபேதிக்கு :

சிறிய வெங்காயத்தில் சிறிது படிகாரத்தூளைக் கலந்து, அதை இருவேளை உண்டுவர, சூட்டினால் ஏற்பட்ட சீத பேதி பாதிப்புகள், சரியாகிவிடும். சூட்டினால் ஏற்படும் மூக்கில் இரத்தம் வடிதலை நிறுத்த.

ரத்தம் வடிவதை நிறுத்த :

ரத்தம் வடிவதை நிறுத்த :

உடல் சூட்டினால் சிலருக்கு, மூக்கின் வழியே இரத்தம் வழியும் பாதிப்பு ஏற்படும். படிகாரத்தூளை தண்ணீரில் கலந்து, அந்த நீரை, மூக்கில் ஓரிரு துளிகள் விட்டு, மூக்கின் மேல் படிகாரத் தண்ணீரில் நனைத்த ஒரு துணியை வைத்துவர, சிறிது நேரத்தில், மூக்கில் இருந்து இரத்தம் வடிவது நின்று விடும்.

வாய்ப்புண்கள் சரியாக :

வாய்ப்புண்கள் சரியாக :

உடல் சூடு மற்றும் அதிக காரம் நிறைந்த உணவுகளால், சிலருக்கு வாய்ப்புண் ஏற்படக்கூடும், அவர்கள், கடுக்காய்த் தூளை, படிகாரத்தூளில் கலந்து, அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர, வாய்ப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.

மேலும், மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை சிறிது எடுத்து, நீரில் இட்டு கொதிக்கவைத்து, அதில் சிறிது படிகாரத்தூள் கலந்து, வாய் கொப்புளித்தும் வரலாம், வாய்ப்புண்கள் ஆறிவிடும்.

இருமல் பாதிப்புகள் சரியாக :

இருமல் பாதிப்புகள் சரியாக :

சிலருக்கு, வெளியூர் அல்லது வேறு இடங்களில் தண்ணீர் பருகினாலே, தொண்டையில் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, இருமல் ஏற்படக்கூடும், இதற்கு, படிகாரத்தூளை தேனில் குழைத்து, தினமும் இருவேளை வீதம் சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, இருமல் விலகும். இதிலேயே, பெருங்காயத்தூள் படிகாரத்தைவிட இருபங்கு அதிகம் கலந்து சாப்பிட்டும் வரலாம், ஒரே நாளில் இருமல் குணமாகிவிடும்.

தொண்டைப் புண் :

தொண்டைப் புண் :

மேலும், மாதுளம் பூ, மாதுளம் பட்டை சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து, அத்துடன் படிகாரத்தூள் சிறிது சேர்த்து இருவேளை வாய் கொப்புளித்துவர, தண்ணீர் கூட விழுங்க முடியாமல் வேதனை தரும் தொண்டைப் புண் பாதிப்பு குறைந்து விடும்.

மூக்கடைப்பு குணமாகி, சுவாசம் சீராக :

மூக்கடைப்பு குணமாகி, சுவாசம் சீராக :

சிறிது திப்பிலியை மண் சட்டியில் பாலை இட்டு ஊறவைத்து, கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாலில் ஊறிய திப்பிலியை தனித்தனியே அரைத்து, சந்தனக்கட்டையை கல்லில் தேய்த்து விழுதாக்கி, அத்துடன் சிறிது படிகாரத்தூளை சேர்த்து, நன்கு கலக்கி, தினமும் இருவேளை இதை சிறு உருண்டையாக்கி உட்கொள்ள, மூக்கடைப்பு குணமாகும்.

அனைத்து பல் வியாதிகள் தீர :

அனைத்து பல் வியாதிகள் தீர :

கடுக்காய் தூள், பாக்குத்தூள் மற்றும் படிகாரத்தூள் இவற்றை, சேர்த்து வைத்துக்கொண்டு, தினமும் இந்த தூளில் பல் துலக்கிவர, பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பல் வியாதிகள் யாவும் விலகிவிடும். பல் ஈறுகளில் உள்ள காயங்கள் ஆற, படிகாரத்தூளை, தேனில் குழைத்து, பல் ஈறுகளில் தடவி வர, ஈறுகளில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிடும்.

சருமத்தில் ஏற்படும் தேமல் பாதிப்புகள் விலக

சருமத்தில் ஏற்படும் தேமல் பாதிப்புகள் விலக

தூள் செய்த எலுமிச்சை தோலுடன் சிறிது நீர் சேர்த்து, படிகாரத்தூளை கலந்து, தேமல் உள்ள இடங்களில் தடவி சற்று நேரம் கழித்து குளித்துவர, தேமல் மறைந்துவிடும்.

உடலில் ஏற்படும் இரத்தக்கட்டுக்கள் கரைய

உடலில் ஏற்படும் இரத்தக்கட்டுக்கள் கரைய

படிகாரத்தூள் மற்றும் செம்மண் இவற்றை முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து நன்கு அரைத்து, இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில், பற்றிட, பாதிப்புகள் விலகும்.

நகச் சுற்று மற்றும் நகச் சொத்தை பாதிப்புகள்

நகச் சுற்று மற்றும் நகச் சொத்தை பாதிப்புகள்

படிகாரத்தூளை நீர்விட்டு பசைபோல குழைத்து, நகத்தின் மீது, கட்டிவர, நகச் சுற்று, வலி தீர்ந்து குணமாகும்.

சிலருக்கு, நகங்களில் சொத்தை ஏற்பட்டு, நகங்களின் வளர்ச்சி குறைந்திருக்கும், படிகாரத்தூள் பசையை, சொத்தையான நகத்தில் வைத்து கட்ட, சொத்தை நீங்கி, நகங்கள் வலுவாகும்.

கண் பாதிப்புகள் விலக

கண் பாதிப்புகள் விலக

படிகாரத்தூளை முட்டையின் வெண் கருவில் கலந்து, அதை ஒரு மெல்லிய துணியில் நனைத்து, கண்களின் மேல் வைத்து கட்டிவர, கண் வலி தீரும்.

படிகாரத்தூள் மற்றும் மஞ்சளை பன்னீரில் கலந்து ஊறவைத்து, காலைவில் அந்த நீரில், கண்களை அலசிவர, கண்களில் ஏற்பட்ட கட்டிகள் குணமாகி, கண்களில் ஏற்படும் சிவப்பு படலம் நீங்கும்.

மூல வியாதிகளின் பாதிப்பு குறைய

மூல வியாதிகளின் பாதிப்பு குறைய

படிகாரத்தூள், தொட்டாற்சிணுங்கி இலை, நொச்சி இலை, எட்டி விதை, வேப்பெண்ணை, விளக்கெண்ணை மற்றும் தேன் மெழுகு இவற்றை நன்கு அரைத்து, பேஸ்ட் போல ஆனதும், மூலம் இருக்கும் இடத்தின் மேலே தடவி வர, மூலத்தின் வெளிவாய் சுருங்கிவிடும்.

சலவைக்கு :

சலவைக்கு :

உடுத்தும் ஆடைகள் மொடமொடவென இருக்க வேண்டும் என்று சிலர் ஆடைகளுக்கு கஞ்சி போட்டு சலவை செய்வர், அந்த கஞ்சி நீரில் சிறிது படிகாரத்தூள் சேர்த்தால், வேட்டிகள் மற்றும் பருத்திப் புடவைகள் நல்ல பளபளப்புடன், வெண்ணிறத்தில் புதிய ஆடைகள் போன்று தோற்றமளிக்கும்.

காயம் ஆற :

காயம் ஆற :

மேலும், கலங்கலான நீரை சுத்திகரிப்பதில், படிகாரம் பயன்படுகிறது, குறைந்த அளவில், தண்ணீரில் படிகாரத்தூளை இட, தண்ணீர் தெளிந்துவிடும்.

உடலில் உள்ள காயங்கள் விரைந்து ஆற, காயங்களின் மேல், படிகாரத்தூளை, தேங்காயெண்ணையில் குழைத்து தடவிவர, காயங்கள் ஆறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of Alum

health benefits of Alum
Story first published: Friday, November 17, 2017, 18:00 [IST]