வலிகளை குணப்படுத்தி வாழ்க்கை முறையை ரெய்கி சிகிச்சையின் சிறப்பு குணங்கள்!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

மனிதர்கள் சமயங்களில், பாரம்பரிய மருத்துவ முறைகளை விட்டு விலகி, மாற்று மருத்துவத்தின் வசீகரமிக்க விளம்பரங்களால், அவற்றை பயன்படுத்த எண்ணுகின்றனர். அப்படி ஒரு மாற்று மருத்துவ முறைதான், ரெய்கி.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், ஜப்பானிய புத்த மதத் துறவியால், கண்டறியப்பட்ட ரெய்கி என்பது, பிராணிக் ஹீலிங் எனும் சிகிச்சை முறையோடு ஓரளவு ஒத்துப்போவது, ரெய்கி என்பதற்கு உலகின் உயிர்சக்தி என்று பொருள். இதுவும் பிராண வாயுவுடன் தொடர்புடைய ஒரு சிகிச்சை முறையே.

பிராணிக் ஹீலிங் என்பது உயிர் ஆற்றல் சக்தியை கைகளின் வழியே, செலுத்தி, வியாதிகளின் பாதிப்பை நீக்கும் ஒரு சிகிச்சை முறை என்றால், ரெய்கி என்பது, பிரபஞ்சம் எனும் இந்த உலகில் உள்ள மின் காந்த ஆற்றலை, தலையின் வழியே அடைந்து, கைகளின் வழியே, பிறர் குணமடைய உபயோகிக்கும் ஒரு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையை உபயோகித்தால், உடல் மன இறுக்கம் யாவும் நீங்கி, மனமும் உடலும் அமைதியாகும் என்கிறார்கள்.

அண்டவெளியில் உள்ள கிரகங்கள் எல்லாம், ஒன்றுக்கொன்று விலகி இருக்க அவற்றின் மின்காந்த சக்தியே, காரணமாக அமைகின்றன. இந்த மின் காந்த ஆற்றலே, புவியின் ஈர்ப்பு சக்திக்கும் காரணமாக அமைகிறது. அத்தகைய பிரபஞ்ச ஆற்றலாக, இந்த உலகில் இயங்கும், காஸ்மிக் சக்தி எனப்படும் மின் காந்த அலைகளை, நாம் அடைந்து, அந்த ஆற்றலை, கைகளின் வழியே, பாதிப்படைந்தவர்களுக்கு செலுத்தும்போது, அவர்கள் உடலில் இந்த ஆற்றல் உட்சென்று, உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை, சீர்செய்து, தீய அலைகளை விரட்டி, உடலில் நல்ல சக்திமிக்க அலைகளை உருவாக்கி, உடலை பாதுகாக்கிறது என்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வியாதிகள் ஏன் உடலில் தோன்றுகின்றன?

1. வியாதிகள் ஏன் உடலில் தோன்றுகின்றன?

நம் உடலில் உள்ள நேர்மறை ஆற்றலின் தன்மை குறையும்போது, உடலின் வியாதி எதிர்ப்புத் தன்மைகள் விலகி, உடலில் வியாதிகள் ஏற்படும் சூழல் உண்டாகிறது.

எளிதான இந்த ரெய்கியை பயிற்சி செய்து, அனைவரும் உடல் மற்றும் மன நலனில், மேம்பட்டு வாழலாம் என்கிறார்கள்.

உலகில் உள்ள எல்லோரும் பிரபஞ்சம் எனும் பரவெளியோடு தொடர்பு கொண்டவர்கள்தாம், இந்த உலகில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் சக்தியை நம்மில் உள்வாங்கி, நம்மை முற்றிலும், ஆரோக்கியமிக்க ஒருவராக உருவாக்கிக்கொள்ள முடியும், அதோடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும், அதே அளவு நன்மைகளை வழங்கி அவர்களையும் நலம் பெற வைக்க முடியும் என்கிறது, ரெய்கி.

2. எப்படி அடைவது ரெய்கி கலையை?

2. எப்படி அடைவது ரெய்கி கலையை?

பொதுநலம் என்பது வீடுகளில் இருந்து ஆரம்பிக்கிறது என்றார் புரட்சிக்கவி. நம்மவர்கள் அதனை பொதுநலம் என்றாலே, நான், எனது என்ற சுயநலம்தான் என்று வேறு விதமாகப் பொருள் கொண்டு, தன்னைப்பற்றி, தன் வீட்டாரைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்து வருகின்றனர். இதில் தம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரைக்கூட மறந்து, தம் பிள்ளை மற்றும் மனையாளே, தமது குடும்பம் எனும் சுய நலத்தில், முற்றிலும் மூழ்கி விட்டனர்.

இந்த அதீத சுய நலமே, இவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை அளித்து விடுகிறது, ஆயினும் அவற்றை சுய நலத்தால் விளைந்த பாதிப்புகள் என்று உணராமல், மற்ற விசயங்களின் மேல் பழியைப் போடுவர்.

இது போன்ற பாதிப்புகள் தொடரும்போது, இவர்களின் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும், இந்த நிலையில்தான், இவர்கள் மாற்று மருத்துவத்தைப் பற்றி சிந்திப்பர், எந்த மருந்தும் சாப்பிடாமல் தங்கள் வியாதிகள் குணமாக வேண்டும் என்ற பேராசை எண்ணமாகக்கூட, அவை இருக்கும்.

3. தீய எண்ணங்கள் :

3. தீய எண்ணங்கள் :

இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களையும் பொது நலத்தில் கலக்க வைக்க முடியும், முறையாக ரெய்கி கலையைப் பயின்றிருந்தால்.

நல்ல பயிற்சியாளரிடம் இருந்து ரெய்கி கலையை கற்றுத் தேறும்போது, கிடைக்கும் நிபுணத்துவத்தில், பிரபஞ்ச சக்தி, தலையின் வழியே உடலை அடைந்து, கைகளில் பரவும்போது, ஏற்படும் சக்தியை நாம் உணர முடியும்.

4. உடல் வளம் பெறும்:

4. உடல் வளம் பெறும்:

இந்த ஆற்றலை, விருப்பு வெறுப்பின்றி, பிறருக்கு, வியாதிகள், பாதிப்புகள் நீங்கப் பயன்படுத்தும் போது, அத்தகைய உயிர் ஆற்றல், அவர்களின் உடலில் பரவி, உடலில் உள்ள கெட்ட தன்மைமிக்க பாதிப்புகளை வெளியேற்றி, உடலை வளமாக்க முடியும்.

5. பாதிப்புகள் நீங்கும் :

5. பாதிப்புகள் நீங்கும் :

பிற உயிரையும், தன்னுயிர் போல எண்ணும் கருணை மனம் இருந்தால், நாம் மற்றவர்களின் பாதிப்பை கருணையுடன் செவி சாய்த்து, அவர்களை குணமாக்க, அன்புடன் அவர்களின் பாதிப்பை விரைவில் நீக்க எண்ணி, கைகளின் வழியே, உயிராற்றலை அவர்களுக்குள் செலுத்த, பாதிப்புகள் நீங்கி, நலம் பெறுவர்.

6. ரெய்கியின் பயன்கள்:

6. ரெய்கியின் பயன்கள்:

முறையாகப் பயின்ற பின், நமக்கு நாமே, இந்த சிகிச்சையைச் செய்து வர, மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் யாவும் விலகி, மன தளர்ச்சி, சோர்வு, அச்சம் போன்றவை மெல்ல நீங்கி, இதுவரை வாழ்க்கையைப் பார்த்து வந்த கண்ணோட்டம் மறைந்து, புதிய விழிப்பில், தன்னம்பிக்கை மிக்க, நேர்மறை மிக்க மன எழுச்சி ஏற்படும்.

உடலின் பாதித்த இடங்களை, சுய சிகிச்சை மூலம் நாம் குணமாக்கிக் கொள்வதன் மூலம், நேற்று வரை, தன்னை மதிக்காமல், ஏனோதானோ என்று இருந்தவர்கள் எல்லாம், தன்னைத் தானே பாராட்டி மகிழும், மனநிலை மாற்றம் ஏற்படும். இது சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்றும் கூட.

7. நேர்மறை எண்ணங்கள் :

7. நேர்மறை எண்ணங்கள் :

வேற்று எண்ணங்களுக்கு இடங்கொடாமல், மனதை முழுவதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைக்கும் போது, பிரபஞ்ச ஆற்றலுக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்பை சீர் செய்வதன் மூலம், உடலும் மனமும் இலேசாகி, வானில் பறப்பது போன்ற, ஆனந்த மனநிலை ஏற்படும்.

8. மன மாற்றம் :

8. மன மாற்றம் :

இந்தக் கலையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு பாதிப்புகளை தீர்க்க முயலும்போது, அவை, அவர்களைத் தாக்கும் அபாயம் ஏற்படுவது உண்டு. இதுபோன்ற பாதிப்புகள் நீங்க, "சோ கூ ரே" என்று, அதிகாலையில் வடக்கு நோக்கி அமர்ந்து, நூற்றியெட்டு முறை மனதிற்குள் உச்சரித்து வரும்போது, மற்றவர்களின் பாதிப்புகள் அவர்களை அடையாமல், பிரபஞ்சத்தில் கரைந்து விடும். தொடர்ந்த இந்த உச்சரிப்பு மூலம், குணப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும், உடலில் சக்தி நிலை பரவி, உடலும் மனமும் இலேசாகும். உலகின் உயிர்கள் அனைத்தின் மீதும், அன்பும் கருணையும் உண்டாகும்.

9. ஏமாற்றங்கள் விலகும் :

9. ஏமாற்றங்கள் விலகும் :

மேலும், ரெய்கி சிகிச்சையின் போது, சில குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன, அவை விரைவான பலன்களை, அளிக்கும் வண்ணம் இருக்கும்.

இந்தக் கலையை அனைவரும் கற்று வாழ்வில் பயன்படுத்தி வர, தேவைக்கு மீறிய எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், வேதனைகள் போன்றவை விலகி, மனம் அமைதியாகும். நம்முடைய நியாயமான தேவைகளையே, மனம் ஏற்கும்.

10. வாழ்க்கை முறை :

10. வாழ்க்கை முறை :

பேராசை, சுய நலம் போன்ற அற்ப என்ணங்கள் யாவும் நீங்கி, மனதில் புத்துணர்ச்சியும் உடலில் புதுத் தெம்பும் தோன்றும். நாம் அடைந்த மாற்றத்தை, மன எழுச்சியை மற்றவருக்கும் நாம் கற்றுத் தந்து, அவர்களும் வாழ்வில் உயர வேண்டும், என்று நினைத்தாலே,

அது தன்னலம் விலக்கி, பொதுநலம் போற்றிய அனைவருக்கும் வெற்றிதான்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts that you should know about Reiki treatment

Facts that you should know about Reiki treatment