காதில் இரைச்சல் கேக்கிறதா? எதன் அறிகுறி தெரியுமா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

அலுவலகத்தில் சிலர், நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார்கள், அப்போது திடீரென கரண்ட் கட் ஆகி, ஜெனரேட்டர் இயங்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்குள், அலுவலகம் முழுவதும் ஒரு நிசப்தம் நிலவும் அல்லவா, அந்த நிசப்த நேரத்தில், அவர்கள் திடீரெனக் காதுகளைப் பிடித்துக் கொள்வார்கள்.

சிலர், இரவில் தூக்கம் வராமல் புரளும் சமயங்களில், காதுகளைப் பொத்திக் கொள்வார்கள். தனிமையில் இருக்கும் சிலர், காதுக்குள் ஏதோ ஒரு ஒலியைக் கேட்டு, அதனால், மிரட்சி அடைந்து, முகம் வெளிறி அமர்ந்திருப்பார்கள்.

காதுகள் தான், இவர்களின் பிரச்னை. காதுகளுக்குள் கேட்கும் ஒலிகள், இவர்களின் நிம்மதியை கெடுத்து, எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல், தவித்து நிற்க வைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதுகளின் உள்ளே, ஒலிகள் கேட்குமா?

காதுகளின் உள்ளே, ஒலிகள் கேட்குமா?

சிலருக்கு காணப்படும் இந்த பாதிப்புகள், பல்வேறு சப்தங்களை காதினுள் கேட்க வைக்கும். விமானத்தின் ஓசையைப் போன்றோ, கடல் அலைகளின் இரைச்சலைப் போன்றோ, வாகனங்களின் ஒலியைப் போன்றோ, யாராவது பேசிக் கொண்டிருப்பது போன்றோ அல்லது கூட்ட இரைச்சலோ எதோ ஒன்று, அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

பகலில் இந்த சத்தங்கள் யாவும், மெதுவாகவோ அல்லது வேகமாகவோ காதில் ஒலிக்கலாம். வேலைப் பளுவில், அல்லது சத்தம் நிறைந்த அலுவலக சூழ்நிலைகளில், அவை அதிகம் நம் கவனத்தை, திசை திருப்பாமல் இருக்கலாம்.

ஆயினும், இரவு நேரங்களில், நிசப்தமான வேளைகளில், கடிகாரத்தின் வினாடி முள்ளின் நகர்வே, பெரும் ஓசையாகக் கேட்கும் அந்த நேரத்தில், காதில் ஒலிக்கும் சப்தத்தின் பேரொலி, அவர்களை மிகவும் அச்சுறுத்தும். எங்கும் அமைதி நிலவும் அந்த வேளையில், அதிக இரைச்சல் உள்ள மார்க்கெட்டில் நிற்பது போன்ற சப்தங்களைக் கேட்டால், எப்படி இருக்கும்?

அதன் பெயர் என்ன?

அதன் பெயர் என்ன?

சமயங்களில், உண்மையாகவே, எங்காவது அருகில், அது போன்ற சத்தங்கள் வருகிறதா, என்று உன்னிப்பாக வெளிப்புற ஒலிகளைக் கேட்க எண்ணும்போது, காதுக்குள் ஒலிக்கும் சத்தத்தின் அளவு இன்னும் கூடுதலாகி, மனதின் அமைதியை பாதிக்கும். இதனால் ஏற்படும் மன உளைச்சலில், உறக்கம் கெடும். வெகுநேரம் ஆனாலும், உறக்கம் வராமல், காதுக்குள் ஒலிக்கும் அந்த சத்தத்திலேயே, கவனம் யாவும் சென்று, மனதை அச்சுறுத்தும்.

இது போன்ற காதுகளில் ஏற்படும் சத்தத்தை, Tinnitus என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

புறவெளியில் சத்தங்கள் கேட்காதபோது, காதுகளில் ஒலிக்கும் இந்த சத்தத்தின் அளவு, அதிகரிக்கும். காதுகளில் கேட்கும் இந்த சத்தம், சில நிமிட நேரம் நீடிக்கலாம், சிலருக்கு இதுவே தொடர்ந்தால், கவனச் சிதறல் ஏற்பட்டு, செய்யும் காரியங்கள் யாவும் குழப்பமாகலாம்

 எதனால் ஏற்படுகிறது இந்த காதொலி?

எதனால் ஏற்படுகிறது இந்த காதொலி?

காதுகளில் ஏற்படும், அழுக்கினாலும், எப்போதும் ஹெட்போனும் சகிதமாகவே அதிக ஒலி அளவை உடைய பாடல்களைக் கேட்பதாலும், மொபைலில் ஹெட் செட்டை இணைத்துக் கொண்டு, எப்போதும் பேசிக்கொண்டிருப்பதாலும், இயல்பாகவே காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கும், சில சமயங்களில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்.

தொற்று :

தொற்று :

சிலருக்கு காதில் நச்சுத் தொற்று ஏற்பட்டு, அதனால், சீழ் வடியும். அதுவும், காதில் இரைச்சல் ஏற்பட, ஒரு காரணமாக அமையும்.

சிலர் இரைச்சல் மிகுந்த இயந்திரங்கள் உள்ள தொழிற்சாலைகளில், பணியில் இருக்கும்போது, அதிக அளவிலான சத்தம், அவர்கள் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

விமான நிலையங்கள், இரயில் பாதைகளுக்கு அருகில் வசிப்போருக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வெடிகுண்டு சப்தத்தினால் :

வெடிகுண்டு சப்தத்தினால் :

நேற்றைய போரில் உடமைகளையும் உறவுகளையும் இழந்து, தாய்நாட்டிலேயே, அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களைப் பார்த்திருப்போம், இன்று நடக்கும் வளைகுடா போரில், ஆயிரக்கணக்கான சிரிய மக்கள், உறவுகள், உடைமைகளை விட்டுவிட்டு உயிர் பிழைக்க தஞ்சம் புக வெளிநாடுகளைத் தேடி ஒடி, அலைகடலில் தங்களையும், தங்கள் நம்பிக்கைகளையும் இழப்பதைக் கண்டு நாம், வேதனை அடைகிறோம்.

இந்தக் கொடூரமான போர்களில், இவர்கள் எல்லாம், தங்கள் உறவுகள் மற்றும் உடமைகளை மட்டும் இழக்கவில்லை, அத்துடன், தங்கள் கேட்கும் திறனையும் இழக்கிறார்கள். கொத்துக்கொத்தாக, மனிதர்களைக் கொல்ல, மேலிருந்து எரியும் குண்டுகள், அவை வெடிக்கும் கொடூர சத்தம், போர் விமானப் பேரிரைச்சல், யாவும் அவர்கள் செவியின் கேட்கும் திறனை, கடுமையாகப் பாதித்து விடுகின்றன.

இதுபோன்ற அதிக சத்தங்கள், காதில் உள்ள உட்செவியில் உள்ள முக்கியமான கொக்கிலியா எனும் மென்மையான எலும்பையும் அதில் இருந்து பிரியும் நுண்ணிய ஒலி அலையைக் கடத்தும் நரம்புகளையும் பாதித்து, காலப்போக்கில் அவற்றை சிதைத்து விடுகின்றன.

உட்செவியின் பாதிப்புகள் :

உட்செவியின் பாதிப்புகள் :

இதன் காரணமாக ஏற்படும் ஒலி நரம்புகளின் செயல் இழப்பினால், காதில் ஏதேதோ இரைச்சல் மற்றும் தெளிவில்லாத சத்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும், மேனியேர்'ஸ் வியாதி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உட்செவி பாதிப்பு வியாதியாலும், இந்தக் கோளாறுகள் ஏற்படலாம்.

பொதுவாக இந்த மேனியேர்'ஸ் வியாதியாலேயே, காதில் கேட்கும் சத்தம், தலைசுற்றல், வாந்தி மற்றும் காது கேட்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உட்செவி வியாதிகள் ஏற்படும் :

உட்செவி வியாதிகள் ஏற்படும் :

தனிப்பட்ட காரணங்கள் என்றில்லாமல், பொதுவாக, அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாலும், அதிகமாக காபி பருகுவதாலும் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் அதிகம் உபயோகிப்பதாலும், இவை ஏற்படலாம்.

மேலும், ஒரு காரணம், உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாதிப்புக்கு அல்லது வியாதிக்கு எடுத்துக்கொள்ளும், மேலை மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட, உட் செவி பாதிப்புகள் ஏற்படலாம்.

எப்படி தவிர்ப்பது?

எப்படி தவிர்ப்பது?

உட்செவி வியாதிகளின் பாதிப்பை அறிய, காதின் கேட்கும் திறனை சோதித்து, அதன் மூலம், பாதிப்பின் நிலை அறிந்து மருத்துவம் செய்ய முடியும்.

ஆயினும், இந்த உட்செவி வியாதிக்கு மேலை மருந்துகளில், நிரந்தரத் தீர்வு என்பது இல்லாமல், காதொலி கருவியே, தீர்வாக இருக்கிறது, என்கிறார்கள்.

ஆல்கஹால் மற்றும் காபி பருகுவதை நிறுத்தி, .அதிக சத்தமுள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, பாதிப்புகள் நீங்க வாய்ப்பாக இருக்கும்.

வீட்டு வைத்தியம் :

வீட்டு வைத்தியம் :

நல்லெண்ணெய் :

சாதாரண முறைகளில், காதொலி பிரச்னைகளை சரி செய்ய, நிறைய வழி முறைகள் இருக்கின்றன. நல்லெண்ணையில் கிராம்பு இட்டு, சூடாக்கி, அதை அவ்வப்போது காதில் ஓரிரு துளிகள் விட, காது வலி, காதில் கேட்கும் சத்தம் போன்றவை, குறைய ஆரம்பிக்கும்.

தும்பைப் பூ :

தும்பைப் பூ :

தும்பைப்பூ, சுக்கு இவற்றைத் தூளாக்கி, பெருங்காயத்தூளுடன் கலந்து நீரில் இட்டு கொதிக்க வைத்து, பருகி வரலாம். மிளகு மற்றும் பூண்டை இடித்து சாறெடுத்து, அந்தச் சாற்றில் ஒரு துளியை, சத்தம் கேட்கும் காதில் விட்டு வரலாம். தண்ணீரில் துளசிச் சாற்றுடன் தேனைக் கலந்து, பருகி வரலாம். இப்படி செய்து வர, காதில் கேட்கும் சத்தங்கள் மெல்லக் குறைய ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Causes for buzzing sound in the ears

Causes for buzzing sound in the ears
Story first published: Friday, December 8, 2017, 12:20 [IST]