வாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமா உணர்றீங்களா!! இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!!

Posted By:
Subscribe to Boldsky

வாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைதான். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது.

வேலைப் பளு, மன அழுத்தம் , நேரம் தவறி சாப்பிடுவது இவைகள்தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். அவ்வாறு நிலை உண்டாகும்போது போது இடத்தில் பலரும் நெளிவதுண்டு. இதனால் வயிறு பிடித்துக் கொண்டு அந்த நிமிடமாவது அவஸ்தை கொள்வார்கள்.

அந்த மாதிரி தர்மசங்கடங்கள் வராமல் இருக்கவும், ஜீரண உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் என்ன மாதிரியான உபயங்களை கையாளலாம் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய காந்தி இலைகள் :

சூரிய காந்தி இலைகள் :

சூரிய காந்தி இலைகள் முழுமையான ஜீரண சக்தியை தூண்டுவதால் வாய்வு உருவாவதை தடுக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அந்த மாதிரி சமயங்களில் சூரிய காந்தி இலைகளை உண்ணலாம்.

பப்பாளி :

பப்பாளி :

வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தடுக்கப்படுகிறது.

கெஃபிர் :

கெஃபிர் :

இப்போது பரவலாக இந்த உணவு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. தயிர் , யோகார்ட் போல், ஆட்டு மற்றும் மாட்டுப் பாலில் உறைய வைத்து செய்யப்படுகிரது. வாய்வுத் தொல்லையில் அவதிப்படும்போது இதனை சாப்பிடலாம். உடனடியாக நிவாரனம் கிடைக்கிறது. உடலுக்கும் ஆரோக்கியமானது..

மசாலா பொருட்கள் :

மசாலா பொருட்கள் :

சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.

சீமை சாமந்தி டீ :

சீமை சாமந்தி டீ :

சீமை சாமந்தி டீ பேக் இப்போது எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். அதனை வாங்கி நீரில் தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமலும் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் உடனே கட்டுப்படுத்திவிடும்.

தேங்காய் :

தேங்காய் :

தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிவிடும். இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.

பேரிக்காய் :

பேரிக்காய் :

ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

செர்ரி பழங்கள் :

செர்ரி பழங்கள் :

செர்ரிப் பழங்கள் வயிற்றுப் பாதிப்புகளை சரி செய்யும் ஆன்டி இன்ஃபளமெட்ரி பண்புகளை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் வாய்வுக் கோளாறுகள் நீங்குவதோடு சீராக அமிலம் சுரப்பதும் தூண்டப்படுகிறது. இதனால் ஜீரண மண்டலம் வலுப்பெறும்.

பெருங்காய நீர் :

பெருங்காய நீர் :

மிக எளிதான குறிப்பு இது. வாய்வு உண்டாகும் உணவுகளை சாப்பிட நேர்ந்தால் உடனடியாக வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் ஒரு சிட்டிகை கலந்து குடித்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

புதினா இலைகள் :

புதினா இலைகள் :

புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

எலுமிச்சை எடுக்கலாமா?

எலுமிச்சை எடுக்கலாமா?

வாய்வுத் தொல்லைக்காக எலுமிச்சை பலன் அளித்தாலும் அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம என மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டுதான் எடுக்க வேண்டும். காரணம்

ஹெர்பல் பொருட்கள் இயற்கையாக இருந்தாலும் அவைகள் சில பார்மஸ்யூடிகல் பண்புகளை கொண்டிருப்பதாம் நீங்கள் சாப்பிடும் மரும்துகளுடன் வினை புரியும். ஆகவே உங்களுக்கு வேறு ஏதாவது உடல் பாதிப்புகள் இருந்தால் , மருத்துவரை அணுகி விட்டு எலுமிச்சை குறிப்புகளை எடுத்துக் கொள்வது நல்லது

 செயல்படுத்தப்பட்ட கரித்தூள் :

செயல்படுத்தப்பட்ட கரித்தூள் :

ஆக்டிவேட்டட் கரித்தூள் கடைகளில் காப்ஸ்யூலாக கிடைக்கிறது. அல்லது திரவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதனை சாப்பிட்டால் உங்களின் வயிற்று பகுதிகளில் அடைத்துக் கொண்டிருக்கும் வாய்வுவை உடனடியாக சரிப்படுத்துகிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

மிளகு சூரணம் :

மிளகு சூரணம் :

மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து , 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி , அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு 3 வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.

சுக்கு காபி :

சுக்கு காபி :

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best remedies to get Relief from bloating and gastritis with these 10 fruits

Best remedies to get Relief from bloating and gastritis with these 10 fruits
Subscribe Newsletter