வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைப்பதால் உண்டாகும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்...வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி. இதோட உண்மையான தண்டு செதில் இலைகளால் மூடப்பட்டு குமிழ் தண்டாக காணப்படுகிறது. இந்த தண்டில் இருந்து பசுமையான இலைகள் வெளிவருகிறது.

இன்றைய நாட்களில் வெங்காய விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இருப்பினும் கூட இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை. இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொடிய நோய்

கொடிய நோய்

1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.

பாதிக்கப்படாத குடும்பம்

பாதிக்கப்படாத குடும்பம்

மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம். என்று கூறினர்.

ஆச்சரியம்!

ஆச்சரியம்!

பின்னர் மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது. அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது.

படுக்கையில் வெங்காயம்

படுக்கையில் வெங்காயம்

இதனை பயன்படுத்திய சிலரும் தான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன். இதனால் சில நாட்களிலேயே நான் எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது நான் அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், அதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் எரிந்து விட வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

தலைவலி

தலைவலி

வெங்காயத்தின் தண்டு ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை, கிருமிகளுக்கு எதிரானது. வீக்கம், வலி போக உதவும்.வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

மோருடன்...!

மோருடன்...!

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

பல் பிரச்சனைகள்

பல் பிரச்சனைகள்

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். பல் சொத்தை போன்ற வாயில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துவது. புண்களுக்கு வெங்காயம் பற்று போட்டு கட்டலாம். இதோட சாறு மயக்கத்தைத் தெளிவிக்கும்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுத்தல் போன்ற பிரச்சனைகள் தீரும். வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

வெங்காயத்தை தீயில் அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

விஷக்கடி

விஷக்கடி

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். மேலும், படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவி வர மறைந்து விடும். தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

ஜீரணத்திற்கு..!

ஜீரணத்திற்கு..!

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of having sliced onions in bed room

Benefits of having sliced onions in bed room
Story first published: Saturday, October 21, 2017, 13:15 [IST]
Subscribe Newsletter