For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோஸ் வுட் ஃபர்னிச்சர் பண்ண மட்டும்தானா? உடல் எடையை குறைக்கவும் செய்யும் தெரியுமா?

ஈடில்லா நன்மைகளைத் தரும் ரோஸ் வுட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!

By Gnaana
|

நம் தேசத்தின் தட்ப நிலைக்கேற்ப பல வித மரங்கள் காடுகளில், மலைகளில் மற்றும் சமவெளிகளில் வளர்ந்து வருகின்றன. சில மரங்கள் எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியவை, அதில் ஒன்றுதான் நமது பாரம்பரிய மரமான, ஈட்டி மரம்.

பெயரே, அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகப் பலர் எண்ணினாலும், இந்த மரத்தின் வேறொரு பெயரைக் கேட்டால், அட, அந்த மரமா என்பார்கள். ஈட்டி மரம் என்று அழைக்கப்படும் மரத்துக்கு உள்ள மற்றொரு பெயர், தோதகத்தி, இன்னொரு பெயர், கருங்காலி. இப்போது ஓரளவு சிலருக்குத் தெரிந்திருக்கும், ஆனால், இந்தப் பெயர் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும், ரோஸ்வுட்.

Ayurvedic remedies using Rose wood for diseases

நமது தேசத்தில் எல்லா மாநிலங்களிலும், இமய மலை உள்ளிட்ட பல்வேறு மலைகளிலும், கொல்லிமலை முதல் கிழக்கே உள்ள சிக்கிம் மாநிலத்தின் காடுகள் வரை, எங்கும் வளரும் இயல்புடையது, ஈட்டி மரம்.

இதன் வலுவான தன்மையால், இரும்புக்கு இணையான ஈட்டி மரம் என்பார்கள், தென்னகத்தின் பாரம்பரிய மரம், தோதகத்தி என்ற பழம்பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. சங்கத்தமிழ் காலத்தில் இருந்தே, தமிழன் வாழ்வில், அன்றாட உபயோகங்களில், கருவிகளில், சேர்ந்தே இருந்த ஒரு மரம், தோதகத்தி மரம்.
பொதுவாக, மழைவளமிக்க, ஈரமான நிலங்கள், ஆற்றங்கரையோரங்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் ஈட்டி மரங்கள் அதிகம் வளர்கின்றன.

தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மற்றும் சதுரகிரி போன்ற அடர்ந்த வனங்கள் கொண்ட மலைகளில், ஈட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நூறடிக்கும் மேற்பட்ட உயரம் வரை வளரும் ஈட்டி மரங்களின் அடிமரம், கிட்டத்தட்ட இருபது அடி அகலம் இருக்குமென்றால், இந்த மரத்தின் பிரமாண்டத்தை நாம் உணர முடியும்.

ஆயினும், இந்த மரங்கள் அதிகபட்ச உயரத்தை அடைய மிக நீண்ட ஆண்டுகள் ஆகிவிடும், கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகாலம். ஓரளவு முட்கள் கொண்டு செம்மை கலந்த கருமை வண்ணத்தில் காணப்படும் ஈட்டி மரங்கள், பழங்காலங்களில், இவற்றின் உறுதித்தன்மைக்காக, கடல் வணிகம் மூலம் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic remedies using Rose wood for diseases

Ayurvedic remedies using Rose wood for diseases
Story first published: Tuesday, December 12, 2017, 16:51 [IST]
Desktop Bottom Promotion